Abu Adhil

அப்துல் ரஹ்மான் M.P. வீட்டில் போலீஸ் திடீர் சோதனை.

அப்துல் ரஹ்மான் M.P. வீட்டில் போலீஸ் திடீர் சோதனை.

முத்துப்பேட்டை, ஏப்.7:
முத்துப்பேட்டையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி வீட்டில் போலீ சார் சோதனை நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான். இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்றவர்.

இவரது சகோதரரான ராஜ்முஹம்மதுவின் மகன் முஹம்மது நிஜாமுதீன். இவர் சென்னையில் வைர வியாபாரம் செய்து வருகிறார். இவர் மீது ரூ.15 லட்ச ரூபாய் மோசடி புகார் சென்னை சிட்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சென்னை சிட்டி காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் மூன்று போலீசார், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், சப்இன்ஸ்பெக்டர் உமாசங்கரி ஆகியோர் உதவியுடன் முத்துப்பேட்டையிலுள்ள எம்பி அப்துல் ரஹ்மான் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டில் எம்.பியின் தாயார் மற்றும் உறவினர்களான பெண்கள் மட்டும் இருந்தனர். இதுகுறித்து எம்பிக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர். மறு முனையில் பேசிய எம்.பி. சோதனைக்கு வந்த சப்இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமாரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டார். இதையடுத்து சில நிமிடங்களில் போலீசார் அனைவரும் வெளியேறி சென்றனர்.
பின்னர், எம்பி அப்துல்ரஹ்மான் நேற்று சென்னையிலிருந்து முத்துப்பேட்டைக்கு வந்தார். பின்னர் முத்துப்பேட்டை காவல்நிலையத்திற்கு சென்று, அங்கு தங்கியிருந்த சென்னை போலீசாரிடம், எப்படி முன் அறிவிப்பு இல்லாமல் எனது வீட்டில் சோதனை நடத்தலாம். சம்மந்தப்பட்ட எனது சகோதரர் வீட்டில் தானே சோதனை போட வேண்டும் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, எனது சகோதரர் ராஜ்முகமது மகன் முகமது நிசாமுதீன் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது குறித்து என்னிடம் கேட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட நபரை காவல் நிலையத்தில் ஒப்படைக்க முயற்சி செய்து இருப்பேன். எனது சகோதரர் வீட்டிற்கு பதில் எனது வீட்டில் முன்னறிவிப்பு இல்லாமல் சோதனை நடத்தியுள்ளனர்.
குற்றவாளியை தப்பிக்க வழி வகுப்பதற்காக எனது வீட்டில் சோதனை நடத்தியதாக தெரிகிறது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இது குறித்து, உயர் மட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து தக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இதனால் முத்துப்பேட்டையில் பரபரப்பபாக காணப்பட்டது .

20130407a_01310600901.jpg
முத்துப்பேட்டை& பட்டுக்கோட்டை சாலையில் உள்ள வேலூர் எம்.பி அப்துல் ரஹ்மான் வீடு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s