Abu Adhil

விநாயகர் ஊர்வலத்தில் தோப்புத்துறை ஜமாதா ர்களா?

விநாயகர் ஊர்வலத்தில் தோப்புத்துறை ஜமாதார்களா?

வேதாரண்யம் அருகே கருப்பம்புலத்தில் மதநல்லிணக்க விநாயகர் ஊர்வலம் ஒன்று நடைபெற்றதாகவும் அதில் தோப்புத்துறை ஜமாஅத் மன்றத்தை சேர்ந்தவர்கள் முன்னிலை வகித்ததாகவும் தினத்தந்தி பத்திரிக்கை (பக்கம்-8 : தஞ்சாவூர் பதிப்பு) 10.09.2013 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நமது thopputhurainews.com இணையதளத்தின் சார்பில் விசாரித்தவகையில் ஜமாஅத்மன்ற நிர்வாகிகளோ அல்லது ஜமாஅத்மன்றதின் பிரதிநிதிகளோ யாரும் பங்கேற்கவில்லை என தெரிகிறது.

ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள் தங்களின் சுயவிருப்பத்தின் பேரில் பங்கேற்ரிருக்கலாம், புகழ்பெற்ற தினத்தந்தி பத்திரிகை தகுந்த ஆதரங்களில்லாமல் செய்தி வெளியிடுவது தவறாகும்.

இஸ்லாம் இறைவனுக்கு இணைவைக்கும் சிலைவணக்க வழிபாடுகளையும் அதுசார்ந்த நிகழ்வுகளையும் கடுமையாக எதிர்க்கிறது, இறையச்சம் உள்ளவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறார்கள்.

அதுவும் விநாயகர் ஊர்வலம் என்பது பாலகங்காதர திலகரால் இந்து மகாசபை மூலம் வகுப்புவாத கண்ணோட்டத்தோடு உருவாக்கபட்ட ஒருநிகழ்வாகும், அதேசமயம் பக்தியின் அடிப்படையில் அரசியல் சாயம் பூசாமல் நடைபெறும் விநாயகர் நிகழ்வுகளை யாரும் குறைகூரபோவதில்லை.

மதநல்லிணக்கம் என்பது முஸ்லிம்களை சிலை வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க வைப்பதிலோ அல்லது இந்துக்களை தொழுகையில் பங்கேற்கவைப்பதின் மூலமோ செயல்படுத்த விரும்புவது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் மாறாக, அவரவர் மதத்தின் மீது பற்றுவைத்து, அடுத்தவர் மதஉணர்வுகளை காயபடுத்தாமல் இருப்பதுதான் உண்மையான மதநல்லினக்கமாகும்,முஸ்லிம்களின் வீடுகளிலிருந்து இந்துக்களின் வீடுகளுக்கும்,இந்துக்களின் வீடுகளிலிருந்து முஸ்லீம் வீடுகளுக்கும் அன்பளிப்புகளை பரிமாறிகொள்வதும், ஒருவர் வீடுகளுக்கு இன்னொருவர் சென்று அன்பு பாராட்டுவதும் தான் மதநல்லினக்கமாகும்.

Source : thopputhurainews.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s