Abu Adhil

மழை காலமும், மார்க்கம் சொல்லும் வழிமுறைக ளும்:

மழை காலமும், மார்க்கம் சொல்லும் வழிமுறைகளும்:

‘வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்’ என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்து கிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா? (அல்குர்ஆன் 32:27)

தற்போது உலகம் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் பல இடங்களில் புயல் காற்று, மண் சரிவு, வெள்ளப் பெருக்கு, புவி அதிர்வு, கடல் கொந்தளிப்பு போன்றவையும் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுவதுடன், வீடு வாசல்களையும் இழந்து தவிக்கிறார்கள்.

இப்படியான நேரத்தில் சிரமங்களை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், துன்பங்களை ஏற்றுக் கொள்ள இயலாதவர்கள் இறைவனை நிந்திப்பதையும், வாயார வசைபாடுவதையும் கண்கூடாகக் கண்டுவருகின்றோம்.

ஆனால் இப்படியான நேரங்களிலெல்லாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மார்க்கம் நமக்குத் தெளிவாக சொல்லித் தந்துள்ளது. மார்க்கம் காட்டிய அடிப்படையில் நாம் நடக்கும் போது மழை காலத்தில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுவதுடன் மார்க்கத்தின் கட்டளைகளையும் பின்பற்றிய நன்மையை பெற்றுக் கொள்ள முடியும்
.
இழப்புகள் ஏற்படும் போது என்ன செய்வது?

மழையின் காரணமாக வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டு அழிவுகள், இழப்புகள் ஏற்படுகின்றன. இப்படியான நேரங்களில் நாம் படைத்த இறைவனை மறந்து அவனுடைய வழிகாட்டல்களுக்கு மாற்றமாக நடக்கக் கூடாது. மாறாக இறைவன் காட்டிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,

அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ[எஃப்] முஸீப(ப்](த்)தி வ அக்லிப்[எஃப்] லீ கைரன் மின்ஹா.

இதன் பொருள் : நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக. (ஆதாரம்: முஸ்லிம் 1525)

மழை பொழியும் போது என்ன செய்வது?

மழை பெய்யும் போது ஓதுவதற்குறிய ஒரு துஆவை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள் அந்த துஆவை ஓதும் போது நாம் மழையின் மூலமாகவும் மறுமையில் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا

அல்லாஹும்ம ஸய்யிப(ப்]ன் நாபி[எஃப்]அன்

இதன் பொருள் : இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு! (ஆதாரம்: புகாரி 1032)

அளவுக்கு மேல் மழை பெய்தால்.

சாதாரனமான வழமையான முறையில் மழை பெய்தால் மேற்கண்ட துஆவை ஓதும் படி கற்றுத் தந்த நபியவர்கள்

அளவுக்கு மேல் மழை பெய்யும் போது ஓதுவதற்கு இன்னொரு துஆவையும் கற்றுத் தந்துள்ளார்கள். அளவுக்கு அதிகமாக மழை பெய்தால் கீழுள்ள துஆவை ஓத வேண்டும்.

اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا

அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.

இதன் பொருள் : இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே!
(ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342)
அல்லது

اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(ப்]லி வல் ஆஜாமி வள்ளிராபி(ப்] வல் அவ்திய(த்)தி வ மனாபி(ப்]திஷ் ஷஜரி

இதன் பொருள் :
இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக. (ஆதாரம்: புகாரி 1013, 1016)
அல்லது

اَللّهُمَّ عَلَى رُءُوْسِ الْجِبَالِ وَالآكَامِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(ப்]லி வல் ஆகாமி வபு(ப்]தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(ப்]திஷ் ஷஜரி
(ஆதாரம்: புகாரி 1017)

புயல் வீசும் போது என்ன செய்வது?

தற்போதுள்ள சூல்நிலையில் கடுமையான புயலுடன் கூடிய மழை பெய்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயலின் மூலம் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலைகள் ஏற்படும் போது நாம் ஓத வேண்டிய துஆவை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

இந்த துஆவை நாம் ஓதுவதின் மூலம் புயலினால் நமக்கு ஏற்படவிருக்கும் தீங்கை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பான்.

اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ[எஃப்]ஹா வகைர மா உர்ஸிலத் பி(ப்]ஹி. வஅவூது பி(ப்](க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ[எஃப்]ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(ப்]ஹி

இதன் பொருள் : இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: முஸ்லிம் 1496)

மேற்கண்ட அனைத்து செயல்பாடுகளையும் செய்வதின் மூலம் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக!

நன்றி: www.rasminmisc.com

Photo: ‎மழை காலமும், மார்க்கம் சொல்லும் வழிமுறைகளும்: ‘வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்’ என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்து கிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா? (அல்குர்ஆன் 32:27) தற்போது உலகம் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் பல இடங்களில் புயல் காற்று, மண் சரிவு, வெள்ளப் பெருக்கு, புவி அதிர்வு, கடல் கொந்தளிப்பு போன்றவையும் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுவதுடன், வீடு வாசல்களையும் இழந்து தவிக்கிறார்கள். இப்படியான நேரத்தில் சிரமங்களை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், துன்பங்களை ஏற்றுக் கொள்ள இயலாதவர்கள் இறைவனை நிந்திப்பதையும், வாயார வசைபாடுவதையும் கண்கூடாகக் கண்டுவருகின்றோம். ஆனால் இப்படியான நேரங்களிலெல்லாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மார்க்கம் நமக்குத் தெளிவாக சொல்லித் தந்துள்ளது. மார்க்கம் காட்டிய அடிப்படையில் நாம் நடக்கும் போது மழை காலத்தில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுவதுடன் மார்க்கத்தின் கட்டளைகளையும் பின்பற்றிய நன்மையை பெற்றுக் கொள்ள முடியும் . இழப்புகள் ஏற்படும் போது என்ன செய்வது? மழையின் காரணமாக வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டு அழிவுகள், இழப்புகள் ஏற்படுகின்றன. இப்படியான நேரங்களில் நாம் படைத்த இறைவனை மறந்து அவனுடைய வழிகாட்டல்களுக்கு மாற்றமாக நடக்கக் கூடாது. மாறாக இறைவன் காட்டிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ[எஃப்] முஸீப(ப்](த்)தி வ அக்லிப்[எஃப்] லீ கைரன் மின்ஹா. இதன் பொருள் : நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக. (ஆதாரம்: முஸ்லிம் 1525) மழை பொழியும் போது என்ன செய்வது? மழை பெய்யும் போது ஓதுவதற்குறிய ஒரு துஆவை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள் அந்த துஆவை ஓதும் போது நாம் மழையின் மூலமாகவும் மறுமையில் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا அல்லாஹும்ம ஸய்யிப(ப்]ன் நாபி[எஃப்]அன் இதன் பொருள் : இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு! (ஆதாரம்: புகாரி 1032) அளவுக்கு மேல் மழை பெய்தால். சாதாரனமான வழமையான முறையில் மழை பெய்தால் மேற்கண்ட துஆவை ஓதும் படி கற்றுத் தந்த நபியவர்கள் அளவுக்கு மேல் மழை பெய்யும் போது ஓதுவதற்கு இன்னொரு துஆவையும் கற்றுத் தந்துள்ளார்கள். அளவுக்கு அதிகமாக மழை பெய்தால் கீழுள்ள துஆவை ஓத வேண்டும். اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும். இதன் பொருள் : இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே! (ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342) அல்லது اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(ப்]லி வல் ஆஜாமி வள்ளிராபி(ப்] வல் அவ்திய(த்)தி வ மனாபி(ப்]திஷ் ஷஜரி இதன் பொருள் : இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக. (ஆதாரம்: புகாரி 1013, 1016) அல்லது اَللّهُمَّ عَلَى رُءُوْسِ الْجِبَالِ وَالآكَامِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(ப்]லி வல் ஆகாமி வபு(ப்]தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(ப்]திஷ் ஷஜரி (ஆதாரம்: புகாரி 1017) புயல் வீசும் போது என்ன செய்வது? தற்போதுள்ள சூல்நிலையில் கடுமையான புயலுடன் கூடிய மழை பெய்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயலின் மூலம் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலைகள் ஏற்படும் போது நாம் ஓத வேண்டிய துஆவை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். இந்த துஆவை நாம் ஓதுவதின் மூலம் புயலினால் நமக்கு ஏற்படவிருக்கும் தீங்கை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பான். اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ[எஃப்]ஹா வகைர மா உர்ஸிலத் பி(ப்]ஹி. வஅவூது பி(ப்](க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ[எஃப்]ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(ப்]ஹி இதன் பொருள் : இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: முஸ்லிம் 1496) மேற்கண்ட அனைத்து செயல்பாடுகளையும் செய்வதின் மூலம் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக! நன்றி: www.rasminmisc.com‎

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s