Abu Adhil

எங்கே செல்கிறார்கள் நம் பெண்கள்? என்ன செய ்யப் போகிறோம் நாம்?

எங்கே செல்கிறார்கள் நம் பெண்கள்? என்ன செய்யப் போகிறோம் நாம்?

Photo: எங்கே செல்கிறார்கள் நம் பெண்கள்? என்ன செய்யப் போகிறோம் நாம்? நம் சமுதாயப் பெண்கள் மாற்று மதத்தவருடன் ஓடிப் போகும் செய்திகள் தினம் தினம் வந்து கொண்டே உள்ளன, கடந்த மாதத்தின் மூன்றாவது நிகழ்வு இது! தவறைத் துணிந்து செய்யக் கூடிய நிலை வந்துள்ளது. நமதூர் சமுதாய இயக்கங்களும், சில லட்டர் பேடு இயக்கங்களும், ஜமாத் மன்றமும் என்ன செய்துக் கொண்டு இருக்கிறது? சும்மா ஓடிப்போறா, ஓடிபோறான்னு குற்றம் சொல்லிகிட்டிருக்கோமே தவிர, அதுக்குக் காரணம் பற்றி யாரும் கண்டுக்குறதில்ல! கல்யாணமாகாத சின்னப் பொண்ணுன்னாகூட அறியாப் பருவம், இனக்கவர்ச்சின்னு சொல்லலாம். ஆனா கல்யாணமான பொண்ணும் போறாங்கன்னா ஏன் என யாரும் யோசிக்கிறதில்லையே ஏன்? உடல்சுகம் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளாகவே பிரச்சனையை பெண்பக்கம் திசைதிருப்பி ஆண்களின் தவறை அவர்களுக்கு கடைசிவரை உணர்த்தாமல் போய்விடுகிறோமே ஏன்? என்ன காரணமாயிருக்கும்..?? இவ்வுலக இச்சையா? இனக்கவர்ச்சியின் தாகமா? இல்லை இல்லறத்தில் இனிமையில்லையா? இல்லை இல்லத்தில் மனக்கசப்பா? இல்லை கணவன் மனைவிக்குள் எவ்விதத்திலும் ஒத்துபோகவில்லையா? அல்லது அன்பின் பறிமாற்றங்கள் அணுவளவுமில்லையா? இதில் எது இல்லை? எதில் குறை? இல்லை எதில் பிழை???? கன்னியாய் ஒருபெண் படிதாண்டி சென்றாலே காலங்காலத்திற்கு ஒரு சொல்லாகிவிடும். அதேசமயம் சென்றவள் ஒன்று இனக்கவர்ச்சிக்காக சென்றிருக்கவேண்டும். அல்லது மனக்காதலுக்காக சென்றிருக்கவேண்டும். எதுவென்றபோதும் படிதாண்டுவது பாதகச்செயல் அவளுக்கு மட்டுமல்ல அவள் குடும்பதிற்கும் அவள் வாரிசுகளுக்கும் சேர்த்துதான். சிந்திக்க வேண்டும்! குறைகள் எங்கே என்று கண்டுபிடித்து களையவேண்டும். ஓடி போன பின்பு எப்படி களைவது குறைகளை என்கிறீர்களா? முன்னோடிகளை வைத்து பின்னோடிகள் தன் பாதைகளை மாற்றிக் கொள்ளவேண்டும். நேற்று பிறருக்கு நடந்தவைகள் இன்று அல்லது நாளை நமக்கு நடவாது பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இன்றய காலகட்டம், ஆதாள பாதாளத்தின் மேல் கட்டப்பட்ட மெல்லிய கயிற்றின் மேல் நடப்பது போலாகும். ஆகவே உங்களில் ஒவ்வொரு செயல்களும் உங்களிருவருக்கானதாக இருக்கவேண்டும். இன்று வேணுமானால் தப்பி விடலாம் நாளை அல்லாஹ்விடத்தில் நாம் பதில் சொல்லாமல் தப்ப முடியாது. உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளி யாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளி யாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப் படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான். (ஹதீஸ்) பக்காவாக உடல் முழுவதும் முக்காடு போட்ட பருவ வயதுப் பெண்கள் இதில் முன்னணியில் உள்ளனர்.ஏற்கனவே வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களும், திருமணமான பெண்களும் பலியாகி அந்நிய ஆடவருடன் ஓடிப் போகும் கொடுமை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும் போது இந்த அதிர்ச்சித் தகவல் நம்முடைய இரத்தத்தை உறைய வைக்கின்றது. இதற்கு என்ன செய்யலாம் என சமுதாய இயக்கங்களும், நமதூர் ஜமாஅத் மன்றமும் எந்த பாகுபாடின்றி குழுக்கள் அமைக்கப் பட்டு உடனடியாக முடிவெடுத்து களம் இறங்க வேண்டும். வேதனையுடன்... மண்ணடிகாகா (இப்படி எழுதியதில் ஏதும் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்)

நம் சமுதாயப் பெண்கள் மாற்று மதத்தவருடன் ஓடிப் போகும் செய்திகள் தினம் தினம் வந்து கொண்டே உள்ளன, கடந்த மாதத்தின் மூன்றாவது நிகழ்வு இது!
தவறைத் துணிந்து செய்யக் கூடிய நிலை வந்துள்ளது.

நமதூர் சமுதாய இயக்கங்களும், சில லட்டர் பேடு இயக்கங்களும், ஜமாத் மன்றமும் என்ன செய்துக் கொண்டு இருக்கிறது?

சும்மா ஓடிப்போறா, ஓடிபோறான்னு குற்றம் சொல்லிகிட்டிருக்கோமே தவிர, அதுக்குக் காரணம் பற்றி யாரும் கண்டுக்குறதில்ல! கல்யாணமாகாத சின்னப் பொண்ணுன்னாகூட அறியாப் பருவம், இனக்கவர்ச்சின்னு சொல்லலாம். ஆனா கல்யாணமான பொண்ணும் போறாங்கன்னா ஏன் என யாரும் யோசிக்கிறதில்லையே ஏன்? உடல்சுகம் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளாகவே பிரச்சனையை பெண்பக்கம் திசைதிருப்பி ஆண்களின் தவறை அவர்களுக்கு கடைசிவரை உணர்த்தாமல் போய்விடுகிறோமே ஏன்?

என்ன காரணமாயிருக்கும்..?? இவ்வுலக இச்சையா? இனக்கவர்ச்சியின் தாகமா? இல்லை இல்லறத்தில் இனிமையில்லையா? இல்லை இல்லத்தில் மனக்கசப்பா? இல்லை கணவன் மனைவிக்குள் எவ்விதத்திலும் ஒத்துபோகவில்லையா? அல்லது அன்பின் பறிமாற்றங்கள் அணுவளவுமில்லையா? இதில் எது இல்லை? எதில் குறை? இல்லை எதில் பிழை???? கன்னியாய் ஒருபெண் படிதாண்டி சென்றாலே காலங்காலத்திற்கு ஒரு சொல்லாகிவிடும். அதேசமயம் சென்றவள் ஒன்று இனக்கவர்ச்சிக்காக சென்றிருக்கவேண்டும். அல்லது மனக்காதலுக்காக சென்றிருக்கவேண்டும். எதுவென்றபோதும் படிதாண்டுவது பாதகச்செயல் அவளுக்கு மட்டுமல்ல அவள் குடும்பதிற்கும் அவள் வாரிசுகளுக்கும் சேர்த்துதான்.

சிந்திக்க வேண்டும்! குறைகள் எங்கே என்று கண்டுபிடித்து களையவேண்டும். ஓடி போன பின்பு எப்படி களைவது குறைகளை என்கிறீர்களா? முன்னோடிகளை வைத்து பின்னோடிகள் தன் பாதைகளை மாற்றிக் கொள்ளவேண்டும். நேற்று பிறருக்கு நடந்தவைகள் இன்று அல்லது நாளை நமக்கு நடவாது பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

இன்றய காலகட்டம், ஆதாள பாதாளத்தின் மேல் கட்டப்பட்ட மெல்லிய கயிற்றின் மேல் நடப்பது போலாகும். ஆகவே உங்களில் ஒவ்வொரு செயல்களும் உங்களிருவருக்கானதாக இருக்கவேண்டும்.

இன்று வேணுமானால் தப்பி விடலாம் நாளை அல்லாஹ்விடத்தில் நாம் பதில் சொல்லாமல் தப்ப முடியாது.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளி யாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார்.

தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளி யாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப் படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான். (ஹதீஸ்)

பக்காவாக உடல் முழுவதும் முக்காடு போட்ட பருவ வயதுப் பெண்கள் இதில் முன்னணியில் உள்ளனர்.ஏற்கனவே வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களும், திருமணமான பெண்களும் பலியாகி அந்நிய ஆடவருடன் ஓடிப் போகும் கொடுமை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும் போது இந்த அதிர்ச்சித் தகவல் நம்முடைய இரத்தத்தை உறைய வைக்கின்றது.

இதற்கு என்ன செய்யலாம் என சமுதாய இயக்கங்களும், நமதூர் ஜமாஅத் மன்றமும் எந்த பாகுபாடின்றி குழுக்கள் அமைக்கப் பட்டு உடனடியாக முடிவெடுத்து களம் இறங்க வேண்டும்.

வேதனையுடன்… மண்ணடிகாகா
(இப்படி எழுதியதில் ஏதும் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s