Abu Adhil

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. – அதிரை ஏ.எம்.பாரூக்


இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது – அதிரை ஏ.எம்.பாரூக் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… ஒரு வழியாக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து ஓட்டளித்த செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ்நாட்டு ஊடகங்களைத் தவிற வடநாட்டு ஊடகங்கள் அனைத்தும் இதற்காக மத்திய அரசை கடுமையாக சாடி எழுதி இருந்தன. கலைஞர் கருனாநிதி அவர்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து சாதித்து விட்டதாகவும் சாடி இருந்தன. இனிவரும் … Continue reading

Abu Adhil

இனிய “ஈதுல் அல்ஹா” எனும் “ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்”.


அஸ்ஸலாமு அலைக்கும்……  அனைவருக்கும் என் இனிய “ஈதுல் அல்ஹா” எனும் “ஹஜ்  பெருநாள் நல்வாழ்த்துக்கள்”. இந்த தியாக திருநாளில் அல்லாஹ்வின் அருள்  நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக, இந்த தியாகத் திருநாளில் அனைத்து மக்களுக்கும் பரக்கத்தையும், சந்தோஷத்தையும், நோயில்லாத வாழ்க்கையும் அளவின்றி அல்லாஹ் ஏற்படுத்தி தருவானாக.. ஆமீன் !… ஆமீன் !!… யாரப்பல் ஆலமீன்….!! சகோதரவத்துடன்… ஆதம்.ஆரிபின் (மண்ணடிகாகா.காம்) Continue reading

Abu Adhil

ராஸ் அல் கைமா : “ஏகத்துவ எழுச்சி மாநாடு”


அல்லாஹ்வின் அழகிய திருப் பெயரால்… ராஸ் அல் கைமா மண்டல த.மு.மு.க மற்றும்  தவ்ஹீத் பிரச்சாரப் பேரவை இணைந்து நடத்தும்  “ஏகத்துவ எழுச்சி மாநாடு” இடம் : கிராண்ட் ரெஸ்டாரண்ட் – அல் நக்கில், ராஸ் அல் கைமா நாள் : ஆகஸ்டு – 19, வெள்ளிக்கிழமை, மாலை 4.30 அளவில்  ..: இஃப்தார் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது :.. சிறப்பு பேச்சாளர்கள் :   மவ்லவி எஸ்.பி.யூஸுஃப் அவர்கள் மவ்லவி இலங்கை முஹம்மத் நாஸர் அவர்கள் ( … Continue reading

Abu Adhil

மரணத்திடம் தோற்ற அவதாரம்!


மரணத்திடம் தோற்ற அவதாரம்!! ‘உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது’, ‘சீரான உடல்நிலையில் உள்ளார்’ என்று சில நாட்கள் கூறப்பட்டு வந்த சாய்பாபா ஏப்ரல் 24 அன்று காலையில் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுதினமே, அதாவது மார்ச் 28 அன்றே அவர் மரணமடைந்ததாகவும் ஆனால் நல்ல நாளில் அவரின் மரணத்தை அறிவிக்க வேண்டும் என்பதற்காக அவரின் குடும்பத்தினர் இதனை பிற்படுத்தியதாகவும் சிலர் கூறுகின்றனர். நாள்தோறும் நடைபெறும் ஆயிரக்கணக்கான மரணங்களில் குறிப்பிட்டு சொல்லவதற்கு இவர் ஒன்றும் அரசியல்வாதியோ … Continue reading

Abu Adhil

இன்ஷா அல்லாஹ் வெற்றிப்பெறுவோம் -தமீமுன் அன்சாரி


அல்லாஹ்வின் திருப்பெயரால்… மமக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் இன்ஷா அல்லாஹ் வெற்றிப்பெறுவோம் –தமீமுன் அன்சாரி   பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்,  இன்று தமிழக அரசியல் அரங்கில் குறிப்பிட்டு  பேசப்படும் முஸ்லீம் அரசியல் கட்சிகளில் ஒன்றான  மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் தமீமுல் அன்சாரி அவர்கள் 11-மார்ச்-2011 வெள்ளிக்கிழமை காலை நம் அதிரைநிருபருக்காக அளித்த பிரத்தியோக நேர்கானல். அதிரைநிருபர்: அவசர அவசரமாக அ.தி.மு.க.வுடன் அடைக்கலம் பெற்றுள்ளதாக பரவலாக பேசப்படுகிறதே இதனைப் பற்றி தங்களின் கருத்து … Continue reading

Abu Adhil

சுனில் ஜோஷி கொலை: பெண் ஹிந்துத்துவ தீவிரவாதி பிரக்​யாசிங் தாக்கூர் கைது


சுனில் ஜோஷி கொலை: பெண் ஹிந்துத்துவ தீவிரவாதி பிரக்​யாசிங் தாக்கூர் கைது மும்பை,பிப்.27:ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகள் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி சுனில் ஜோஷி கொலைத் தொடர்பான வழக்கில் ஹிந்துத்துவா பெண் தீவிரவாதியான சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே மலேகான்-2008 குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிகிட்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மலேகான் வழக்கை விசாரித்துவரும் Maharashtra Control of Organised Crime … Continue reading

Abu Adhil

சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்…


    சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்… இஸ்லாமிய சமுதாயத்தின் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கும் போது, அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுடைய காலத்தோடு ஒன்றுபட்ட, ஒரே சமுதாயம் என்ற கட்டமைப்பு முற்றுப் புள்ளி பெற்றுவிட்டது. நபிகளார் இந்த உலகைப் பிரிந்த நேரத்திலிருந்தே பிரிவினை சக்திகள் சமூகத்திற்குள் ஊடுருவி பிளவு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சமூகம் ஒன்று பட்டுவிடக் கூடாது என்பதில் யூதர்களும், கிருத்தவர்களும் குறியாக இருந்தனர். அவர்கள் எவ்வாறு வேதம் அருளப்பட்டபின்னரும் தங்களுக்குள் வேற்றுமையை … Continue reading

Abu Adhil

இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத் தை வேட்டையாடுகிறது – ஷக்கீல் அன்ஸாரி


இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது – ஷக்கீல் அன்ஸாரி கோழிக்கோடு,டிச.12:குஜராத்தில் இனப்படுகொலை நிகழ்ந்து 8 ஆண்டுகள் கழிந்த பிறகும் குஜராத் முஸ்லிம் சமூகம் சாதாரண நிலையை இதுவரை அடையவில்லை என பிரபல மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.ஷக்கீல் அன்ஸாரி தெரிவித்தார். இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது. துயர்துடைப்பு நடவடிக்கைகளுக்கோ, இழப்பீடுகளை வழங்குவதற்கோ அரசு ஆர்வம் காண்பிக்கவில்லை. இனப்படுகொலைக்கு பிறகு மாநிலத்தில் முதலீடுகளும், வளர்ச்சியும் குறைந்துள்ளது என ஷக்கீல் அன்ஸாரி தெரிவித்தார். குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட … Continue reading