இங்கிலாந்து / இந்தியா / கல்வி விசா

இந்தியாவில் இங்கிலாந்துக்கான கல்வி விசா நிறுத்திவைப்பு


இங்கிலாந்துக்கான கல்வி விசா கேட்டு விண்ணப்பங்கள் ஏராளமாக குவிந்து வருவதால் டெல்லி, சண்டிகர் மற்றும் ஜலந்தர் ஆகிய மையங்களில் விண்ணப்பங்கள் பெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத வகையில் அளவுக்கதிகமான விசா விண்ணப்பங்கள் வந்துள்ளதால் பிப்ரவரி 1 முதல் புதிய விசா விண்ணப்பங்கள் பெறப்பட மாட்டாது என டெல்லியில் உள்ள இங்கிலாந்து துணைத் தூதர் நிகெல் கேசி மற்றும் இங்கிலாந்து பார்டர் ஏஜென்சி மண்டல இயக்குனர் கிரிஸ் டிக்ஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர். கடந்த 2008ம் ஆண்டில் ஆக்டோபர் … Continue reading

இந்தியா

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசில் 31 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள்


ராஞ்சி:ஜார்க்கண்டில் இன்று பதவியேற்ற ஜார்கண்ட் முக்திமோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் 31 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையிலுள்ளதாக நேசனல் எலக்சன் வாட்ச் என்ற அமைப்பு தெரிவிக்கிறது. 81 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கு 44 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் 18 எம்.எல்.ஏக்களில் 17 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் பதிவுச்செய்யப்பட்டுள்ளன. சீதா சோரன் என்பவர் மட்டும்தான் இக்கட்சியில் கிரிமினல் வழக்கு பதிவுச்செய்யப்படாத ஏக உறுப்பினர். மேலும் இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள … Continue reading

இந்தியா

போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் எல்லா புகார்கள் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சகம்


பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவுச்செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம் காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவுச்செய்வதை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது. ருச்சிகா கிர்ஹோத்ரா பாலியல் பலாத்கார வழக்கில் காவல்துறை, முன்னாள் ஹரியான உயர் போலீஸ் அதிகாரி ரத்தோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவுச்செய்ய மறுத்துள்ள செய்தி வெளிவந்ததையடுத்தே இந்நடவடிக்கையென அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய உளவுத்துறையான ஐ.பி யின் 22-வது நூற்றாண்டு அறக்கொடை … Continue reading

இந்தியா

ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் சர்வதேச மனித உரிமை அமைப்பின் அடுத்த பொதுச்செயலாளராக வி.டி.ராஜ‌சேகரின் மகன் ஸலீல் ஷெட்டி தேர்வு


லண்டன்:சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் அமைப்பின் தலைமை பீடத்தில் இந்தியர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். பெங்களூரைச் சார்ந்த ஸலீல் ஷெட்டியை அடுத்த பொதுச் செயலாளராக ஆம்னெஸ்டி நியமித்துள்ளது. தலித் வாய்ஸ் என்ற பத்திரிகையின் எடிட்டர் வி.டி.ராஜசேகரின் மகன் தான் ஸலீல் ஷெட்டி. கடந்த ஆறு வருடங்களாக ஐ.நா வின் மில்லியனியம் கேம்பய்ன் இயக்குநராக செயல்படும் ஷெட்டி ஏழ்மையை போக்குவதற்காக செயல்படும் ஆக்ஸன் எய்ட் என்ற அமைப்பின் சீஃப் எக்ஸிகியூடிவாக செயல்படுகிறார். எட்டுவருட சேவைக்கு பிறகு பதவி … Continue reading

இந்தியா

பாபரி மஸ்ஜித் புனர்நிர்மாணம் மூலம் நாட்டின் மானம் காக்கப்பட வேண்டும் – நீதிபதி கிருஷ்ணய்யர்!


தகர்க்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை அதே இடத்தில் புனர் நிர்மாணித்து நாட்டின் மானத்தைக் காக்க வேண்டும் என நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் கூறியுள்ளார். கேரள முஸ்லிம் இளைஞர் அமைப்பு கொச்சியில் நடத்திய மதசார்பின்மை பாதுகாப்பு கூட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். “பாபரி மஸ்ஜித் தகர்ப்பின் மூலம் நாட்டின் ஆத்மாவிற்குக் காயம் ஏற்பட்டுள்ளது. பாபரி மஸ்ஜித் பூமி குறித்த பிரச்சனை முன்னரே தீர்க்கப்பட்டிருக்கும் எனில் மஸ்ஜித் தகர்க்கப்பட்டிருக்காது. இவ்விஷயத்தில் நீதிமன்றத்தில் ஏற்பட்ட காலதாமதம் மூலம் … Continue reading