இந்து / இஸ்லாம் / கீழக்கரை / சமூகம்

முஸ்லிம் இந்து?


கீழக்கரை: ஏர்வாடியில் ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தர்ஹா சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. ஏர்வாடி அருகேயுள்ள வெட்டமுனை,தொத்தமகன்வாடி , நாச்சியம்மைபுரம் உள்ளிட்ட ஊர்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் டிராக்டர்களில் விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலம் நடந்தது. தர்ஹா பகுதியில் வந்தடைந்த இந்த ஊர்வலத்திற்கு தர்ஹா நிர்வாகம் சார்பில் விநாயகர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு … Continue reading

கீழக்கரை / நபிகள் நாயகம் / பிறந்த நாள் / முகமது சதக் கல்லூரி / விழா

முகமது சதக் கல்லூரிகளின் சார்பில் கீழக்கரையில் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா


முகமது சதக் கல்லூரிகளின் சார்பில் கீழக்கரையில் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாஇஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு பேச்சு கீழக்கரை, மார்ச்.13- முகமது சதக் கல்லூரிகளின் சார்பில் கீழக்கரையில் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். நபிகள் நாயகம் பிறந்த நாள் முகமது சதக் அறக்கட்டளையினர் சார்பில் கீழக்கரையில் இயங்கி வரும் என்ஜினீயரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐ.டி.ஐ. பயிற்சி மையம், செய்யது … Continue reading

ஊழல் / கீழக்கரை / லஞ்சம்

கீழக்கரை நகராட்சியை சீர்படுத்துவோம் வாரீர்!!


கீழக்கரை நகராட்சியை சீர்படுத்துவோம்வாரீர்! வாரீர்!! வாரீர்!!! தொன்மையும் வரலாற்று சிறப்பும் மிக்க சமூக நல்லினக்கமும் மனித நேயமும் உயிர் மெய் எழுத்தாய் உறவு பாராட்டும் கீர்த்திமிகு கீழக்கரை. நகராட்சியாக உயர்வு பெற்று அரசு நிதிநிலையில் தன்னிறைவு பெற்று விளங்குகின்றது. தமிழகத்தில் அதிக வருமானம் உள்ள முதல் மூன்றாம் நிலை நகராட்சி என்ற பெருமைக்குறியது. இன்று லஞ்ச லாவன்ய நிர்வாக சீர்கேட்டால் சீரழிந்து நிற்கிறது. சாக்கடை நிரம்பி தெருக்களின் வழியாக ஓடுகிறது.குப்பைகள் முறையாக அள்ளுவதில்லை. தர்நாற்றம் மூக்கை துளைக்கிறது. … Continue reading

ஊழல் / கீழக்கரை / லஞ்சம்

கீழக்கரை நகராட்சியை சீர்படுத்துவோம் வாரீர்!!


கீழக்கரை நகராட்சியை சீர்படுத்துவோம்வாரீர்! வாரீர்!! வாரீர்!!! தொன்மையும் வரலாற்று சிறப்பும் மிக்க சமூக நல்லினக்கமும் மனித நேயமும் உயிர் மெய் எழுத்தாய் உறவு பாராட்டும் கீர்த்திமிகு கீழக்கரை. நகராட்சியாக உயர்வு பெற்று அரசு நிதிநிலையில் தன்னிறைவு பெற்று விளங்குகின்றது. தமிழகத்தில் அதிக வருமானம் உள்ள முதல் மூன்றாம் நிலை நகராட்சி என்ற பெருமைக்குறியது. இன்று லஞ்ச லாவன்ய நிர்வாக சீர்கேட்டால் சீரழிந்து நிற்கிறது. சாக்கடை நிரம்பி தெருக்களின் வழியாக ஓடுகிறது.குப்பைகள் முறையாக அள்ளுவதில்லை. தர்நாற்றம் மூக்கை துளைக்கிறது. … Continue reading

கீழக்கரை

என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா


என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா கீழக்கரை, பிப். 27: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் சார்பில் திருப்புல்லாணி அருகே மாவிலான்தோப்பு என்ற மருதன் தோப்பு கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவிலான் தோப்பு கிராமத்தில் தொடர்ந்து 10 நாள்களாக நடந்து வந்த இம் முகாமின் நிறைவு விழாவுக்கு பாலிடெக்னிக் முதல்வர் அ. அலாவுதீன் தலைமை வகித்தார். கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் செய்யது அபுதாஹிர், திருப்புல்லாணி … Continue reading

கீழக்கரை

கீழக்கரையில் தரமற்ற சாலைகள்


கீழக்கரையில் தரமற்ற சாலைகள் கீழக்கரை,பிப்.6: கீழக்கரை யில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.கீழக்கரை பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக படுமோசமாக காணப்படுகின்றன. புதி தாக சாலை அமைத்து இரண்டு ஆண்டுகளி லேயே பள்ளங்களாக மாறியுள்ளன. சாலை அமைவதற்கு முன்பு சாலையின் தன்மை, அளவு, ஒதுக்கீட்டு தொகை குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் அறிவிப்பு பலகை ஏதும் வைக்கப்படுவதில்லை. இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் குமரன் கூறும்போது, Ôபோட்ட இடத்திலேயே … Continue reading

கட்டுரை / கீழக்கரை / போட்டி

கீழக்கரை தாசிம்பீவி கல்லூரியில் கட்டுரைப் போட்டி


கீழக்கரை தாசிம்பீவி கல்லூரியில் கட்டுரைப் போட்டி கீழக்கரை, பிப். 4: கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் கட்டுரைப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. மதவெறி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடந்தது. போட்டி துவக்க விழாவிற்கு டாக்டர் வே.முருகேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர் ராஜேஸ்குமார் நன்றி கூறினார். … Continue reading

கீழக்கரை

கீழக்கரையில் இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை


கீழக்கரையில் இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை கீழக்கரை, பிப். 3: கீழக்கரையில் இளம்பெண் ஒருவர், செவ்வாய்க்கிழமை வயிற்றுவலி காரணமாக பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். கீழக்கரை பிலாத் தோப்பு என்ற முனீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் விக்னேஷ்வரி (17). இவர், வயிற்றுவலி காரணமாக பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, முருகானந்தம் கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி வழக்குப் பதிவு செய்து … Continue reading

கருத்தரங்கம் / கீழக்கரை

கீழக்கரையில் கருத்தரங்கம்


கருத்தரங்கம் கீழக்கரை, ஜன. 6: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக்கில், “கட்டுமானத் துறையில் நவீன உத்திகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுதில்லி அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் நிதி உதவியுடன் பாலிடெக்னிக்கில் செயல்பட்டுவரும் தொழிலக பயிலகக் கூட்டுத் திட்டப் பிரிவு மற்றும் கனடா, இந்திய கூட்டுப் பயிலகத் திட்டம் ஆகியன இணைந்து இக் கருத்தரங்கை நடத்தின. ராமநாதபுரம் ஐடியல் கட்டுமான நிர்வாக இயக்குநர் பொறியாளர் எஸ். ராம்குமார் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். பாலிடெக்னிக் முதல்வர் … Continue reading

கீழக்கரை / சாலை / விபத்து

கீழக்கரையில் தொடர் சாலை விபத்துகளை தடுக்க வேண்டுகோள்


கீழக்கரையில் தொடர் சாலை விபத்துகளை தடுக்க வேண்டுகோள் கீழக்கரை, ஜன. 6: கீழக்ரையில் சாலை விபத்துகளைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பாதுகாப்பு கழக கீழக்கரை கிளை செயலர் முகைதின் இப்ராகீம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் சாலை மேம்பாட்டு திட்டதின் கீழ் ராமநாதபுரம் கீழக்கரை சாலை புதிதாக போடப்பட்டுள்ளது. சாலையில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு உயிர்ச் சேதம் ஏற்படுகிறது, இதற்கு முக்கிய காரணம் சாலை வளைவுகளில் வளைவுகளை குறிக்கும் அடையாள சின்னம் … Continue reading