நபிகள் நாயகம் (ஸல்) / ஹதீஸ்

இஸ்லாம் பார்வையில் "சபை ஒழுங்கு"


ஒரு நாள் அண்ணல் நபி அவர்கள் கையில் தடியை ஏந்தியவர்களாக எங்களிடம் வந்தனர். அப்பொழுது நாங்கள் அவர்களுக்(கு மரியாதை செய்வதற்)காக எழுந்துவிட்டோம். அதற்கு அவர்கள் ‘அரபியல்லாதவர்களில் சிலர், சிலருக்கு மரியாதை செய்யும் பொருட்டு எழுந்துவிடுவது போன்று நீங்கள் எழுந்து விடாதீர்கள்’ என்று கூறினர். அறிவிப்பவர்: அபூ உமாமா(ரலி) நூல்: அபூதாவூத் நபி அவர்களைவிட (அவர்களின்) தோழர்களுக்கு எவரும் மிகவும் உவப்பானவராக இருக்கவில்லை. எனினும் நபி அவர்களை அவர்கள் பார்ப்பின் எழுந்திவிட மாட்டார்கள். காரணம் இதை நபி அவர்கள் … Continue reading

நபிகள் நாயகம் (ஸல்) / விக்கி பீடியா

விக்கிபீடியாவிலிருந்து நபி(ஸல்) அவர்களின் சித்திரத்தை நீக்கக்கோரி விண்ணப்பியுங்கள்!


This is a petition request: Wikipedia has placed a painting of the Prophet Muhammad (P.B.U.H) on http://en.wikipedia.org/wiki/Muhammad. They need about 100,000 signatures to remove it. So far a little over 3,200 have signed; if you agree that it is wrong to depict his picture, please sign the petition. நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல் அவர்களை … Continue reading

நபிகள் நாயகம் (ஸல்) / ஹதீஸ்

வாக்குவாதம்???????


தேவையற்ற விஷயத்தில் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்குச் சுவனபதியைச் சூழ ஓர் இல்லம் கட்டப்படும். அன்றி உண்மையின் மீதிருந்தும் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்கு சுவனபதியின் மத்தியில் ஓர் இல்லம் எழுப்பப்படும். மேலும் எவர் நற்பண்புகள் உள்ளவராக இருக்கின்றாரோ அவருக்குச் சுவனபதியின் மேலே ஓர் இல்லம் நிர்மாணிக்ப்படும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமாرَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: திர்மதீ அல்குர்ஆனில் வீண் தர்க்கம் … Continue reading

நபிகள் நாயகம் (ஸல்) / ஹதீஸ்

இஸ்லாம் பார்வையில் "பெரும் பாவங்கள்"


பெரும் பாவங்களில் மிகப் மிகப் பெரியதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் வினவினர். அதற்கு நாங்கள் சரி என்றோம். அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும் பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் (அநியாயமாக) கொலை செய்வதுமாகும் என்று கூறிச் சாய்ந்து வீற்றிருந்த நபி صلى الله عليه وسلم நிமிர்ந்து அமர்ந்து மேலும் கூறினர்; அறிந்து கொள்ளுங்கள். பொய்யுரைப்பதும், பொய்ச்சான்று பகர்வதுமாம் என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் நபி صلى الله … Continue reading

நபிகள் நாயகம் (ஸல்) / ஹதீஸ்

ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம்!!!


நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்கிறார். பின் தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி மஸ்ஜிதுக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்து வைக்கும் எவ்வொரு அடிக்கும் அவரது அந்தஸ்து (தரஜா) என்று உயர்த்தப்படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. அவர் தொழ ஆரம்பித்தால் மலக்குகள், “இறைவனே! இவர் மீது அருள் புரிவாயாக! இவருக்கு மன்னிப்பளிப் பாயாக!” என்று துஆச் செய்கிறார்கள். இது அவர் உளூவுடன் இருக்கும் வரையிலாகும். அவர் … Continue reading

நபிகள் நாயகம் (ஸல்) / ஹதீஸ்

இஸ்லாம் பார்வையில்"இரத்த பந்தம்"


அபூ அய்யூப் அன்சாரி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவனத்தினுள் நுழையச் செய்யும் ஒர் அமலை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், “”நீர் அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காதிருப்பது, தொழுகையை நிலை நாட்டுவது, ஜகாத்தை கொடுத்து வருவது மற்றும் இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பது” என்று கூறினார்கள். (ஹீஹுல் … Continue reading

நபிகள் நாயகம் (ஸல்) / பராக் ஹுசைன் ஒபாமா

அமெரிக்க புதிய அதிபர் பராக் ஹுசைன் ஒபாமாவுக்கு வாழ்த்துக்கள்!!!


அமெரிக்காவின் புதிய அதிபராக பராக் ஹுசைன் ஒபாமா பதவி ஏற்றுள்ளார்.முதல் கறுப்பின அதிபர் என்பதால் உலகமே வியக்கிறது.இனி வரும் காலங்களில் அவருடைய செயற்பாடுகளை வைத்தே அவரின் ஆட்சி பற்றி கணிக்கமுடியும் என்ற போதிலும்,அவரின் சில நேர்மையான வாதங்கள்,எல்லா மத மக்களின்,எல்லா நாடுகளின் நலன்களுக்கும் குந்தகம் ஏற்படாவண்ணம் செயல்பட உறுதி பூண்டுள்ளமை விளங்குகிறது. இன்றைய இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஒரு கறுப்பின சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் ஒரு நாட்டின் அதிபர் ஆவதற்கு இவ்வளவு எதிர்பார்ப்பும்,ஆச்சரியமும்,அதிசயமும் கலந்து நோக்கப்படுகிறது.அதே போன்று தென் … Continue reading

நபிகள் நாயகம் (ஸல்) / ஹதீஸ்

இஸ்லாம் பார்வையில் "விதி"


வானங்களையும் பூமிகளையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எல்லா விதிகளையும் அல்லாஹ் தீர்மானித்து விட்டான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். நூல் திர்மிதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ”விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! … Continue reading