சமூகம் / ரபியா / விருது

சமூக சேவைக்காக விருதுப்பெற்ற அதிரை ரபியா அவர்கள்!


சவுதி அரேபியாவின் மலைப்பிரதேசமான அபஹா- கமீஸ் முஷைத் ஹில்ஸ் டேஷன் தமிழ் நலவாழ்வு மன்றத்தின் ஆண்டு விழாவில் (2/10/2009) அய்டா திரு. ரபியா அவர்களுக்கு பொது நல சேவையை பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். டாக்டர் வேலு அவர்கள் பிரசிடென்ட், மற்றும் திரு. பிச்சை மணி அவர்கள் செயலாளராகவும் கொண்டு இயங்கும் இச்சங்கம் அப்பகுதி தமிழ் மக்களுக்கு கடனுதவி மற்றும் அல்லல்படுவோருக்கு ஆலோசனை மற்றும் உபகாரங்கள் செய்து வருகின்றன. Continue reading

நல்லாசிரியர் / நினைவு / பாதிரியார் / ராஜ்குமார் / விருது

பாதிரியார் ராஜ்குமார் நினைவு நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


பாதிரியார் ராஜ்குமார் நினைவு நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு சென்னை, மார்ச் 14: சென்னை புனித ஜான் சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளி சார்பில் வழங்கப்படும் 2007-08-ம் ஆண்டுக்கான பாதிரியார் ராஜ்குமார் நினைவு நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்தில் உள்ள பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும், பெறாத பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, விருதுடன் ரூ.10 ஆயிரம் ரொக்க … Continue reading

டாக்டர் சையத் சத்தார் / மௌலானா அபுல்கலாம் ஆசாத் / விருது

ஆர்க்காடு இளவரசர், டாக்டர் சையத் சத்தார் உள்பட ஐவருக்கு "மௌலானா அபுல்கலாம் ஆசாத்’ விருது


ஆர்க்காடு இளவரசர், டாக்டர் சையத் சத்தார் உள்பட ஐவருக்கு “மௌலானா அபுல்கலாம் ஆசாத்’ விருது சென்னை, மார்ச் 11: ஆர்க்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி, டாக்டர் சையத் சத்தார் உள்ளிட்ட 5 பேருக்கு “மௌலானா அபுல்கலாம் ஆசாத்’ விருதுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள அரபு, பார்சி மற்றும் உருது மொழி துறை சார்பில் “உருது இலக்கியத்தில் மனித ஒழுக்கம்’ என்பது தொடர்பான 2 நாள் தேசியக் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. இதில் … Continue reading

பேராசிரியர் / வம்சாவளி / விருது

இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு விருது


இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு விருது ஹூஸ்டன், ஜன. 13: அறிவியல் ஆராய்ச்சிக்கான அமெரிக்காவின் மிக உயரிய விருதான எடித், பீட்டர் ஓ டன்னல் விருது இந்த ஆண்டு அமெரிக்காவின் தென்மேற்கு டெக்ஸôஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளி பேராசிரியர் டாக்டர் ராம ரங்கநாதனுக்கு கிடைத்துள்ளது. மனித உடலில் செயற்கையாக புரோட்டீன்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவின் தென்மேற்கு டெக்ஸôஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மையத்தின் இயக்குநராக டாக்டர் ராம ரங்கநாதன் … Continue reading