Abu Adhil

ஜித்தாவில் கடும் மழை வெள்ளம் (வீடியோ இணைப்பு)


ஜித்தாவில் கடும் மழை வெள்ளம் (வீடியோ இணைப்பு) ஜெத்தாவில் கடும் மழை வெள்ளம் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கடந்த 2008  இறுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கில் நூற்றுக்கணக்கான உயிர்சேதமும் கோடிக்கணக்கான பொருட் சேதமும் ஏற்பட்டிருந்தது அறிந்ததே. பல மில்லியன் ரியால்கள் இழப்பீடாகவும் வழங்கப்பட்டன இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்யும் மழை காரணமாக மேலும் கடும் வெள்ளம் ஜெத்தாவைச் சூழ்ந்துள்ளது. அரசு தரப்பு அதிகாரிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். வார்த்தைகளை விடவும் எளிதாக விளக்கும் … Continue reading

Abu Adhil

ரியாத் நகரத் தெருவில் சிறுத்தைப் புலி


சவுதி : ரியாத் நகரத் தெருவில் சிறுத்தைப் புலி உலகின் பரபரப்பு மிகுந்த பெருநகரங்களுள் சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்தும் குறிக்கத்தக்கது. இங்கு அமைச்சகங்கள் அமைந்துள்ள பகுதி அமைச்சகப்பகுதி (ஹைய்ய அல் வஜாராத், சுருக்கமாக ஹாரா) என்று அழைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள், வங்காளிகள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். நகரின் இதயப்பகுதியாகக் கருதப்படும் இப்பகுதியில் கடந்த திங்களன்று சிறுத்தைப் புலியொன்று தெருவில் இறங்கி உலாவரவும், பீதியடைந்த பொதுமக்கள் காவல் துறைக்குத் தொலைத் தகவல் … Continue reading

Abu Adhil

மலையாளிகளால் அரபுகளுக்கு ஆபத்து : துபாய் காவல் துறை தலைவர் அதிரடி பேட்டி


மலையாளிகளால் அரபுகளுக்கு ஆபத்து : துபாய் காவல் துறை தலைவர் அதிரடி பேட்டி துபாய் : வளைகுடாவில் நாள் தோறும் வேலை வாய்ப்புக்காக வரும் வெளிநாட்டவர்களால் வளைகுடாவின் மண்ணின் மைந்தர்களான அரபு மக்கள் ஒதுக்கப்படும் அபாயம் உள்ளதாக சொல்லப்படுவதை தாம் ஆதரிப்பதாக துபாய் காவல் துறை தலைவர் தெரிவித்தார்.     வெளிநாட்டவர்களை கட்டுபடுத்த சட்டம் கொண்டு வரப்படவில்லையெனில் அரபு மக்கள் தங்கள் மண்ணில் சிறுபான்மையினராக வாழும் நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று துபை காவல்துறை … Continue reading

Abu Adhil

மன்னிப்பு! – நூருத்தீன், இந்நேரம்.Com


மன்னிப்பு! ( இந்நேரம்.Com-ல் மனம் மகழுங்கள் பகுதியில் நூருத்தீன் அவர்களால் பதியப்பட்டது ) “இனி ஜென்மத்துக்கும் அவனை மன்னிக்க மாட்டேன்.” “செத்தாலும் சரி, அவன் முகத்தில் முழிக்க மாட்டேன்.” “நான் செய்திருக்கிற காரியத்திற்கு என்னை நானே மன்னிக்க முடியாது.” பரிச்சயமிருக்கிறதா? வீட்டுக்கு வீடு பழக்கப்பட்ட டயலாக் இது. மேற்படி வசனங்களில் உள்ள முக்கிய உள்ளர்த்தம் என்ன தெரியுமா? பிறரையோ அல்லது நம்மை நாமோ மன்னிக்க மறுக்கிறோம். மட்டுமல்லாமல், “எங்கோ தவறொன்று நிகழ்ந்துவிட்டது. அதை நிவர்த்திக்க வேண்டிய முயற்சி … Continue reading

Abu Adhil

இஸ்ரேலில் அதிகரிக்கும் கூகிளின் முதலீடு


இஸ்ரேலில் அதிகரிக்கும் கூகிளின் முதலீடு இணைய உலகில் கொடி கட்டி பறக்கும் கூகிள் நிறுவனம், இஸ்ரேல் இணைய நிறுவனம் ஒன்றை வாங்கியுள்ளது. கடந்த ஆறு மாதத்திற்குள் கூகிள் வாங்கும் இரண்டாவது இஸ்ரேல் நிறுவனம் இதுவாகும். கூகிள் நிறுவனம் பல நிறுவனங்களை வாங்கி அதன் மூலம் அதிக பயனீட்டாளர்களைப் பெற்று இணைய உலகில் கொடி கட்டி பறக்கிறது. யூடூப்(youtube), ஓர்குட்(orkut) போன்ற வலைதளங்கள் அவற்றில் சில. இந்நிலையில் ஃபேஸ்புக்(facebook) இணையதளத்தை வாங்க யாஹூவிற்கும், கூகுளிற்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. … Continue reading

Abu Adhil

ஹமாஸ் தளபதி இஸ்ரேலிய படைகளால் கொலை செய்யப்பட்டார்


ஹமாஸ் தளபதி இஸ்ரேலிய படைகளால் கொலை செய்யப்பட்டார் ரமல்லாஹ் / காசா : பாலஸ்தீன் மேற்கு கரையில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேலிய படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹமாஸின் ராணுவப்பிரிவு தளபதி கொலை செய்யப்பட்டார். ஹமாஸின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் -ன் தளபதி 37 வயதான லியாத் ஆசாத் அபு ஸில்பயிஹ்  இஸ்ரேலிய படைகளால் மிக அருகில் வைத்து மூன்று முறை சுடப்பட்டார் பின்னர் மருத்துவ உதவியும் தாமதப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். சம்பவத்தைப் பற்றி லியாத் ஆசாத்தின் சகோதரர் முஹம்மத்  தெரிவிக்கையில் ஏராளமான … Continue reading

Abu Adhil

சீனாவில் 9 உய்கூர் முஸ்லிம்களுக்கு தூக்கு


சீனாவில் 9 உய்கூர் முஸ்லிம்களுக்கு தூக்கு ——————————————————————————————— கடந்த ஜூலை மாதம் ஜின்ஜியாங் தலைநகர் உரூம்கியில் நடைபெற்ற கலவரத்தை தொடர்புபடுத்தி சீன அரசு 9 உய்கூர் முஸ்லிம்கள் தூக்கிலிடப்பட்டதாக சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஜின்ஜியாங் மாகாணத் தலைநகர் உரூம்கியில் நடைபெற்ற கலவரத்தை தொடர்புபடுத்தி சீன அரசு 9 உய்கூர் முஸ்லிம்களை தூக்கிலிட்டது. கொலை, தீவைத்தல் ஆகிய குற்றங்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறுகிறது. சுப்ரீம் கோர்ட்டின் … Continue reading

Abu Adhil

புனித பயணிகள் யாரும் ஸ்வைன்ஃபுளுவால் மரணம் அடையவில்லை: சவூதி அறிவிப்பு!


புனித பயணிகள் யாரும் ஸ்வைன்ஃபுளுவால் மரணம் அடையவில்லை: சவூதி அறிவிப்பு! ரியாத்: உம்ரா எனப்படும் புனித பயணமாக ரமலான் மாதத்தில் மக்கா மற்றும் மதீனா வந்திருந்த இலட்சக்கணக்கான புனிதபயணிகளில் ஒருவரும் ஸ்வைன்ஃப்ளுவால் மரணம் அடையவில்லை என்று சவூதி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கடவுள் கிருபையாலும் சுகாதாரத்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும் புனித பயணிகளிடையே எச்1 என்1 பரவுவது ஏறக்குறைய முழுவதுமாகவே கட்டுபடுத்தப்பட்டுள்ளது என்று அத்துறை தெரிவித்துள்ளது இது தொடர்பாக புனிதப்பயணம் முடிந்து மீண்டும் நாடு திரும்பிய அரபுகள் மற்றும் … Continue reading

Abu Adhil

கோவை குண்டு வெடிப்பு கைதிகள் 3 பேர் விடுதலை!


கோவை குண்டு வெடிப்பு கைதிகள் 3 பேர் விடுதலை! கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் மூன்று பேர், நன்னடத்தை அடிப்படையில் தண்டனைக் காலத்திற்கு முன்பே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கோவை மத்திய சிறையில், பழனியைச் சேர்ந்த அப்துல் கரீம் (30), கோவை மானியத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சர்தார் (31) ஆகியோர், தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டனர். ஆத்துப்பாலத்தைச் சேர்ந்த பாபு (30) 1ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ‘குண்டு … Continue reading