கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: அமீரகம் தோப்புத்துறை, அறிவிப்பு, சமூகம், ஜாக் நியூஸ், தோப்புத்துறை, புஷ்பவனம், மர்கஸ் நிர்வாகம், Kalvi
தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகம் சார்பாக
கிராம பள்ளிக்கு மின் விசிறிகள்
நாகை மாவட்டம் – புஷ்பவனம் மீனவ கிராமத்தில் உள்ள ஊரட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு மர்கஸ் சார்பாக இரண்டு மின் விசிறி வழங்கப்பட்டது, பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.குருபரன் பெற்றுக் கொண்டார், இந்த மீனவ கிராம மக்கள் கல்வியில் மிகவும் பின் தாங்கி இருக்கிறார், கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் பள்ளி நிர்வாகம் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது, இத்துடன் இஸ்லாம் பற்றிய புரிந்துணர்வு பரிமாற்றமும் நடந்து வருகிறது, மேலும் இப்பள்ளிக்கு 8 மின்விசிறி கள் தேவைப் படுகிறது, உதவி புரிய முன்வருவோர்கள் நமது மர்கஸ் நிர்வாகத்தை அனுகவும்.
நமது மர்கஸ் நிர்வாகிகளுடன் தலைமை ஆசிரியர் மற்றும் பலர்
கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: அமீரகம், அமீரகம் தோப்புத்துறை, அறிவிப்பு, குவைத், துபாய், ஷார்ஜா, Gulf, Newspapers, Thopputhurai
ஐக்கிய அரபு அமீரகத்திலும்
கேலன்களுக்கு பிரியாவிடை

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் உலகின் இதர பகுதிகளை போல் லிட்டரில் விற்கப்படாமல் கேலனில் விற்கப்படுகிறது. வரும் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திலும் இனி பெட்ரோல் லிட்டரிலேயே விற்கப்படும்.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு கேலனிலிருந்து லிட்டருக்கு மாற 4 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பினும் இப்போதே சில பெட்ரோல் விற்பனை நிலையங்கள் லிட்டரில் பெட்ரோலை விற்க ஆரம்பித்து விட்டன. ஒரு கேலன் சுமார் 4.5 லிட்டருக்கு ஒப்பானதாகும்.
இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசாங்க அதிகாரி முஹம்மது ஸலேஹ் பத்ரி கூறும் போது உலகின் இதர பகுதிகளை போல் ஓரே அளவுகோலை கொண்டு வரும் நோக்கிலேயே இம்மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
செய்தி: இந்நேரம்.காம்
கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: அமீரகம் தோப்புத்துறை, தோப்புத்துறை, Thopputhurai
நாகை மாவட்டம் – தோப்புத்துறை – மழை காட்சிகள்
சின்னப்பள்ளிவாசல் தெரு
பிரதான கடைத்தெரு – ஆறுமுச்சந்தி
பெரிய பள்ளி குளம்
ஆற்றங்கரை தெரு பெண்கள் தன்முனைப்பு மையம்
மரைக்காயர் தெரு
Photos By Adam.Arifin
கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: அமீரகம், அமீரகம் தோப்புத்துறை, அறிவிப்பு, இஸ்லாம், சமூகம், ஜாக் நியூஸ், திருக் குர்-ஆன் போட்டி, துபாய், தோப்புத்துறை, மர்கஸ், India, Kalvi, Thamilagm, Thopputhurai, Uncategorized
தோப்புத்துறை மர்கஸ்
திருக் குர்-ஆன் போட்டி
பரிசளிப்பு விழா காட்சிகள்
மர்கஸின் இரவு நேர தோற்றம்
மர்கஸ் ஜமாத்’தின் அமீரக செயலாளர் பேசிய போது
ஜமாத்தின் அமீர் வரவேற்புரை நிகழ்த்திய போது
ஜமாத்’தின் பொருளர் சபீர் அஹமது கிர-ஆத் ஓதி துவக்கிய போது
செயலாளர் பேசிய போது
பரிசுப் பொருட்கள்
நாகூர் அன்சாரி சிறப்புரை ஆற்றிய போது…
மேலும் படங்கள்….விரைவில்
கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: அமீரகம் தோப்புத்துறை, கத்திரிபுலம், கல்வி செய்தி, தனியார் பள்ளி, தொடர்கதை, நிழல்களும் நிஜங்களும், முகவை எஸ்.அப்பாஸ், வேதாரண்யம், India, Kalvi, Thopputhurai
மூழ்கிய மொட்டுக்களும்
முக்கிய விஷயங்களும்!

வருமுன் காப்போம் என்பது அரசின் தாரக மந்திரமாக இருக்கவேண்டும். ஆனால் நம்மை ஆளும் அதிகார வர்க்கத்திற்கோ நாம் சில இழப்புகளை சந்தித்தபின்தான் அவர்களுக்கு சட்டம் போடவேண்டும் என்ற என்னமோ அல்லது இருக்கும் சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்ற என்னமோ ஏற்படுவதை நாம் காண்கிறோம். தனியார் ஒரு கல்விக்கூடத்தை நடத்த வேண்டுமெனில், அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளின் படிதான் தனியார் கல்வி நிலையங்கள் இயங்குகின்றதா என்பதை கடுமையாக கண்காணித்து இருந்தால் சில ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட குழந்தைகளை தீயின் கோரத்திற்கு பலிகொடுத்திருக்கமாட்டோம்.
அதுபோல் இரு தினங்களுக்கு முன் வேதாரண்யம் அருகே கத்திரிபுலம் என்ற இடத்தில் பள்ளி சிறார்களையும் ஆசிரியைகளையும் ஏற்றிவந்த தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் குளத்திற்குள் கவிழ்ந்து ஒரு ஆசிரியை உட்பட ஒன்பது குழந்தைகள் இறந்த சோகமான செய்தியை நாமெல்லாம் அறிவோம். அதே நாளில் வேறு ஒரு இடத்தில் ஒரு பள்ளி வேன் மரத்தின் மீது மோதி, பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்த செய்திகளும் நாளிதழ்களில் வந்தன. இப்போதெல்லாம் குழந்தைகளை பள்ளி வேனில் அனுப்பும்போது குழந்தைகள் அழுவதில்லை. மாறாக அந்த குழந்தைக்கு ‘டாட்டா’ காட்டும் தாய் அழுகிறாள். காரணம்; நம் செல்ல பிஞ்சு பள்ளிக்கு செல்கிறது; அங்கு பள்ளியில் எதுவும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ, அல்லது போகும் வழியில் வரும்வழியில் ஏதாவது நடந்துவிடுமோ என்பதால்தான்.
இன்றைய அரசு பள்ளிகளை எடுத்துக் கொன்டால், பெரும்பாலான பள்ளிக் கட்டிடங்கள் நான் இப்போ விழட்டுமா; பிறகு விழட்டுமா என்ற ரீதியில் பயம் காட்டுகின்ற வகையில் உள்ளன. கட்டிடங்கள் நன்றாக இருந்தால் அங்கே போதுமான ஆசிரியர்கள் இருப்பதில்லை. அதுவும் சரியாக இருந்தால் பசி போக்கும் சத்துணவு பல நேரங்களில் பல்லி நீந்தும் குளமாக மாறி, பிள்ளைகளுக்கு வயிற்று போக்கு வாந்தி பேதி போன்றவருக்கு காரணமாக அமைகிறது. இதையும் தாண்டி ஒரு அதீத நம்பிக்கையில்தான் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் அறிவை பெற்று வருகின்றன.
தனியார் பள்ளிகளை எடுத்துக்கொண்டால் தமிழகத்தில் புற்றீசல்கள் போல் ஏராளமாக உள்ளன. இந்த தனியார் பள்ளிகளுக்கு அரசின் அனுமதி கொடுக்கப்படுவதற்கு முன்பாக ஒரு பள்ளியில் இருக்கவேண்டிய அடிப்படை வசதிகள் இருக்கின்றனவா என்ற ஆய்வுக்கு பின்னர்தான் அனுமதி சான்றுகள் வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், சிலர் புறவாசல் வழியாகவும் சான்றிதழ் வாங்கியும், வாங்காமலும் பள்ளிகள் நடத்தி வருவதை நாம் செய்திகளில் காண்கிறோம். அவ்வளவு ஏன் மேற்கண்ட வேன் விபத்திற்கு காரணமான பள்ளியின் அனுமதி கடந்த ஜூன் மாதமே நிறைவடைந்து விட்டதாம். அதற்கு பின்னால் அனுமதியின்றியே நடத்தி வந்துள்ளது பள்ளி நிர்வாகம். இந்த வேன் விபத்திற்கு பின்னர் அந்த பள்ளி கலெக்டரால் மூடப்பட்டுள்ளது. இந்த விபத்து நடக்கவில்லையானால் இந்த பள்ளி எந்த அதிகாரியின் கண்ணுக்கும் தெரிந்திருக்காது. வழக்கம்போல் இயங்கி கொண்டிருக்கும். படிக்கும் பிள்ளைகளின் உயிருக்கு உத்திரவாதமும், பெற்றோருக்கு நம்பிக்கையையும் தரவேண்டியது அரசின் பொறுப்பாகும். அரசு பள்ளிகள் மட்டுமன்றி தனியார் பள்ளிகளும் அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படவேண்டும். அந்த கண்காணிப்பு சம்பிரதாயமானதாக இல்லாமல் தனியார் பள்ளிகளின் அனுமதி சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பரிசோதிக்கப்படவேண்டும்.
இதுபோக தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை அழைத்துவரும் வேன் பயணம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. வேனில் அதிகப்படியான பிள்ளைகளை ஏற்றிவருவது, குறிப்பிட்ட நேரத்தில் பல ஊர்களில் உள்ள குழந்தைகளை கொண்டுவர வேண்டியிருப்பதால் வேன் ஓட்டுனர்கள் ‘ஜெட்’ வேகத்தில் வேனை இயக்குவது. தாமதமாகிவிட்டதோ என்ற மன குழப்பத்தில் வேன் ஓட்டுனர்கள் வேனை இயக்குவது. வேனை இயக்குபோது செல்போனில் உரையாடிக்கொண்ட இயக்குவது இவ்வாறு பல குறைகள் விபத்திற்கு காரணமாக அமைகிறது. இதுபோக சில தனியார் பள்ளிகள் தமது சொந்த வேன் அல்லாமல் வாடகை வேன்களை இயக்குவதாகவும் மக்களிடம் ஒரு கருத்து உண்டு. மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில் காலை நேரத்தில் பார்த்தால் ஒரு ரிகஷா அல்லது ஆட்டோவில் மூட்டைகளைப்போல் பல குழந்தைகளை திணித்து கொண்டு செல்வதை பார்க்கிறோம். இப்படி செல்வதை பார்க்கும் எந்த காவல்துறையும் இதை கண்டுகொள்வதில்லை. எனவே நாம் அறிந்தவரை, உயர்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என கல்விக்கென இரு அமைச்சர்கள் உள்ள நிலையில், சமச்சீர் கல்வி கொண்டுவர முனைப்புடன் ஈடுபடும் நிலையில், அதற்கு முன்பாக படிக்கவரும் பிள்ளைகளின் பாதுகாப்பு அரசால் உறுதிப்படுத்தப் படவேண்டும். அதை செய்யாமல் விபத்து நடந்த பின் சம்மந்தபட்ட பள்ளியை மூடுவதாலோ, பள்ளி நிர்வாகிகளை கைது செய்வதாலோ, இழப்பீடு வழங்குவதாலோ உதிர்ந்த மழலை மொட்டுகளின் உயிர்களுக்கு ஈடாகாது என்பதை அரசு உணர்ந்து பள்ளிகள் குறித்த சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, அதை பாரபட்சமின்றி அதிகாரிகளால் அமுல்படுத்தப் படுகிறதா என்பதையும் கண்காணிக்க முன்வரவேண்டும்.
நன்றி : முகவை எஸ்.அப்பாஸ் (நிழல்களும்,நிஜங்களும்)
கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: கட்டிமேடு, சர்வக்கட்டளை, ஜாக் நியூஸ், தாதந்திருவாசல், திருக்குர்-ஆன் போட்டி, திருப்பூண்டி, தோப்புத்துறை, நாகப்பட்டினம், நாகூர், நாலுவேதபதி, முத்துப்பேட்டை, Thopputhurai
தோப்புத்துறை
மாபெரும் திருக்குர்-ஆன் போட்டிக்கான பரிசளிப்பு விழா
நாகை மாவட்டம் – தோப்புத்துறையில் மஸ்ஜிதுல் முஸ்லீமின் (J.A.Q.H – மர்கஸ்) சர்பாக கடந்த ரமலானில் ஐந்தாம் ஆண்டு மாபெரும் திருக்குர்-ஆன் கேள்வி- பதில் பொட்டி நடபெற்றது, நோன்பு 30 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு பத்து கேள்விகள் வீதம் 30 நாட்களுக்கான மொத்தம் 300 கேள்விகள் அடங்கிய வினா புத்தகங்கள் வெளியிடப்பட்டது, இவ்வருடம் நாகூர், நாகப்பட்டினம், திருப்பூண்டி, தாதந்திருவாசல், நாலுவேதபதி, சர்வக்கட்டளை,கட்டிமேடு மற்றும் முத்துப்பேட்டை ஆகிய ஊர்களிலிருந்து ஏரளமானோர் கலந்துக் கொண்டனர், பின்னர் பதில்கள் பெறப்பட்டு வெற்றி பெற்றவகளுக்கும், கலந்துக் கொண்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கப் பட்டது.

மேலும் படங்கள்…விரைவில்…
கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: அபுதாபி, அமீரகம், அமீரகம் தோப்புத்துறை, அரசியல், உரை, சமூகம், துபாய், நிதி நெருக்கடி, வெளிநாடு, ஷார்ஜா, Editorials
துபாயின் சொத்துக்கள் : ஒரு பிரத்யேக பார்வை

துபாய் நிதி நெருக்கடியை தொடர்ந்து அபுதாபி உதவிக்கரம் நீட்டலாம் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க, நெருக்கடியை தீர்க்க துபாய் தன் வசம் உள்ள சொத்துக்களில் சிலவற்றை விற்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் துபாய் வசம் உள்ள சொத்துக்கள் குறித்து ஒரு பிரத்யேக பார்வை இதோ இந்நேரம் வாசகர்களுக்காக,
DP World
உலகின் மிகப் பெரிய துறைமுகங்களில் ஒன்றான துபாய் வேர்ல்டு முழுமையாய் துபாய்க்கு சொந்தமானது.
Standard Chartered
துபாய் வேர்ல்டின் முதலீட்டு பிரிவுகளில் ஒன்றான Isthithmar 1 பில்லியன் டாலர் மதிப்பிலான 2.7% ஷேர்களை Standard charterd – ல் 2006-ல் வாங்கியுள்ளது
MGM Mirage
2007-ல் உலகின் மிகப் பெரும் சூதாட்ட கிளப்பான MGM Mirage – ல் ஷேர்கள் மற்றும் அதன் லாஸ் வேகாஸ் திட்டத்தில் முதலீடு போன்றவற்றிக்காக 5 பில்லியன் டாலர் துபாய் வேர்ல்டு முதலீடு செய்துள்ளது.
Barneys
Isthitmar அமெரிக்க சங்கிலித் தொடர் சொகுசு சூப்பர் மார்கெட் Barneys ஐ 2007-ல் 942 மில்லியனுக்கு வாங்கியது.
Perella Weinberg
Isthithmar மேற்சொன்ன முதலீட்டு வங்கியில் 100 மில்லியன் டாலர் 2006-ல் முதலீடு செய்துள்ளது
Cirque du Soleil
DP world-ன் அங்கங்களில் ஒன்றான Nakheel மாண்டீரியலை தளமாக கொண்ட சர்வதேச சர்க்கஸ் கம்பெனியில் 20% முதலீடு செய்துள்ளது.
Turnberry Golf Course
மிக பழைய கோல்ப கோர்ஸை Leisure Corp எனும் துபாய் வேர்ல்டின் அங்கங்களில் ஒன்று 100 மில்லியன் டாலருக்கு கடந்த ஆண்டு வாங்கியுள்ளது.
Queen Elizabet II Liner
2007-ல் 100 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டு துபாய் பாய்மர வடிவ தீவிற்காக சொகுசு ஓட்டலாக மாற்றப்பட்டுள்ளது.
Atlantis Dubai
சில மாதங்களுக்கு முன் 50 மில்லியன் டாலர் வாண வேடிக்கைகளுடன் தொடங்கப்பட்ட இந்த ரிஸார்ட் தென் ஆப்பிரிக்க தொழிலதிபர் ஸோல் கெர்ஸனருக்கும் துபாய்க்கும் சொந்தமானது.
Emirates
உலகின் மிக பெரிய நிறுவன்ங்களில் ஒன்றாகவும் மிகவும் லாபகரமான நிறுவனமுமான இது அனைவரின் கண்ணையும் உறுத்த கூடியது என்பதில் ஐயமில்லை. தற்போது உள்ள மந்த நிலையில் கூட 55 பில்லியன் டாலருக்கு போயிங் மற்றும் ஏர்பஸ்க்கு ஆர்டர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துபாய் அலுமினியம் (DUBAL)
துபாய்க்கு சொந்தமான இது உலகின் மிகப் பெரும் அலுமினிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவன்ங்களில் ஒன்றாகும்.
லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்
போர்ஸ் துபாய் எனும் துபாய் அரசாங்க நிறுவனம் 2007 நவம்பரில் லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜில் 21% சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது.
HSBC
துபாய் மன்னரின் முதலீட்டு நிறுவனமான Dubai International Capital (DIC) 2007-ல் உலகின் மிகப் பெரும் வங்கிகளில் ஒன்றான HSBC ல் குறிப்பிடத்தக்க ஷேர்களை வாங்கியுள்ளது.
Deutsche Bank
Dubai International Finance Centre – ன் அங்கங்களில் ஒன்றான் DIFC Investments மேற்சொன்ன ஜெர்மனை சார்ந்த கடன் வழங்கும் நிறுவனத்தில் 2.2% சதவிகித பங்குகளை 1.83 பில்லியன் டாலருக்கு 2007-ல் வாங்கியுள்ளது.
Emaar Properties
உலகின் மிக பெரும் கட்டிடமான பர்ஜ் துபாய் உட்பட ஏராளமான உயரமான கட்டிடங்கள், ஷாப்பிங் மால்கள் வைத்துள்ள இந்நிறுவனம் அரபுலகத்தின் மிகப் பெரும் கட்டிட நிறுவனமாகும்.
Sony Corp
DIC ஜப்பனின் சோனி கார்ப்பரேஷனில் குறிப்பிடத்தக்க பங்குகளை 2007-ல் வாங்கியுள்ளது
European Aeronautics Defence & Space Company (EADS)
ஏர்பஸ் விமானம் தயாரிக்கும் இக்கம்பெனியில் DIC மூலம் 31.2 % சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது
Alliance Medical
ஐரோப்பாவின் மிகப் பெரிய MRI மற்றும் CT ஸ்கேன் நிறுவனத்தை 1.25 பில்லியன் டாலருக்கு DIC வாங்கியுள்ளது.
நன்றி : இந்நேரம்.காம்
கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: அமீரகம் தோப்புத்துறை, இந்தியா, கல்வி செய்தி, த மு மு க, தோப்புத்துறை, பரிதாப சாவு, வேதாரண்யம், India, Thamilagm, Thopputhurai, Ulagam
பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்து குழந்தைகள்
பரிதாப சாவு!

வேதாரண்யம் அருகே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் குளத்தில் கவிழ்ந்ததில் 9 குழந்தைகள், ஆசிரியை உட்பட 10 பேர் பலியானர், 40 பேர் காயமுற்றனர். கவலைக்கிடமான நிலையில் சில குழந்தைகள் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. பள்ளி வேன்களில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி வந்ததால் இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது.
கலைவாணி மெகா மெட்ரிக் பள்ளிக்கு சொந்தமான இந்த வேன் 25 மாணவ, மாணவிகள் மற்றும் இரு ஆசிரியைகளுடன் சென்று கொண்டிருந்தது. கரியாப்பட்டினம் பகுதியில் உள்ள கத்திரிப்புலம் என்ற இடத்தில் சென்றபோது அங்குள்ள காமாட்சியம்மன் குளத்தில் கவிழந்து மூழ்கியது.
சமீபத்தில் தொடர் மழை பெய்திருந்ததால் குளத்தில் தண்ணீர் அதிகம் இருந்தது. வேனுடன் குளத்தில் விழுந்த குழந்தைகள் என்ன செய்வதென்று தெரியாமல் கதறின. குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். குளத்தில் குதித்து குழந்தைகளை தூக்கி வந்தனர்.
இதில் 9 குழந்தைகள் குளத்தில் மூழ்கி பலியாயினர். ஒரு ஆசிரியையும் பலியானார். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 11 குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குளத்தில் மற்ற குழந்தைகளையும் இன்னொரு ஆசிரியையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
உயிருக்கு போராடிய குழந்தைகள் அந்த வழியாக வந்த வாகனங்களில் ஏற்றி அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பலியான குழந்தைகளின் உடல்கள் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன. தகவல் கிடைத்து பல கிராமங்களில் இருந்தும் பெற்றோர்கள் அலறியடித்துக் கொண்டு, சம்பவ இடத்துக்கு ஓடிவந்தனர். வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதனர். குழந்தைகளின் உடல்களை கட்டியணைத்து அவர்கள் கதறி அழுதுதனர்.
குளத்து நீரை மோட்டார் மூலம் இறைத்து மீட்பு பணி தீவிரப்படுத்தப்படுகிறது.
இறந்த குழந்தைகளின் உடல் மருத்துவ பரிசோதனை ( போஸ்ட் மார்டம் ) செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் முறைப்படி மருத்துவ பரிசோதனை செய்துதான் கொடுப்போம் என மருத்துவர்களும், போலீசாரும் தெரிவித்து விட்டனர்.
தமிழக அரசு இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரமும், ஆசிரியை குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணமாக அறிவித்துள்ளது.
வேனை ஓட்டி வந்த டிரைவர் மகேந்திரன் மொபைல் போன் பேசிக்கொண்டே வந்தார் என வேனில் இருந்த மாணவர்கள் கூறினர். மொபைலில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு வளைவு வந்தது இதனையடுத்து வேனை திருப்பும்போது இந்த வேன் தடுமாறியது. இதில் கூடுதல் தகவல் என்னவெனில் வேன் மிக பழையதாக இருந்தது. உரிய கண்டிஷனும் இல்லை என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. டிரைவரும், கிளீனரும் வேனில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். குழந்தைகள் தத்தளிக்கும் நேரத்தில், அவர்களை காப்பாற்றாமல் தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர். வேதாரண்யம், கரியாபட்டினம் போலீசார், வேதாரண்யம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நாகை கலெக்டர் முனியநாதன், எஸ்.பி. மகேஸ்வர் தயாள், வேதாரண்யம் எம்.எல்.ஏ. வேதரத்தினம் ஆகியோர் வந்து குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.
நாககுடையான் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகன் ஜெயபிரகாஷ் 1&ம் வகுப்பும், இன்னொரு மகன் ஜெயசூர்யா யுகேஜியும் படித்து வந்தனர். 2 குழந்தைகளும் இந்த விபத்தில் பலியாகிவிட்டனர். சிவபாரதி மகன் அஜய்(1&ம் வகுப்பு), செல்வக்குமார் மகன் அஜய்(யுகேஜி), வீரபாண்டி மகள் விஜிலா(யுகேஜி), குமார் மகன் ஹரிராஜன்(எல்கேஜி), மனோகர் மகள் அபிநயா, பூபதி மகள் மகாலட்சுமி, செட்டிப்புலத்தை சேர்ந்த முருகையன் மகள் ஈஸ்வரி(2ம் வகுப்பு) ஆகிய குழந்தைகளும் பலியாயினர். இறந்த ஆசிரியை சுகந்தி, கட்டவெளி கிராமத்தை சேர்ந்தவர்.
-இந்நேரம்.காம்
கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: அவசர ஊர்தி, இந்தியா, கத்திரிபுலம், கல்வி செய்தி, சமூகம், த மு மு க, தோப்புத்துறை, நாகை மாவட்டம், பள்ளி வேன் விபத்து, மண்ணடிகாகா, மீட்புப் பணி, விபத்து, வேதாரணியம்
நாகை மாவட்டம் :
வேதாரணியம் – கத்திரிபுலம்
பள்ளி வேன் விபத்து
மீட்பு பணியில் கிராம மக்கள்
பதற்றத்துடன் கிராம மக்கள்
மீட்பு பணியில் தீயணையப்பு துறையினர்
விபத்துக்குள்ளான வேனின் பகுதிகள்
மீட்புப் பணியில் தோப்புத்துறை யை சேர்ந்த அவசர ஊர்தி
- நேரடி காட்சி கள் : ஆதம்.ஆரிபின் ( மண்ணடிகாகா)
ஹேண்ட் போன் : 9003329412
கோப்பு வகை: அரசியல் | குறிச்சொற்கள்: அமீரகம் தோப்புத்துறை, அரசியல், அறிவிப்பு, இந்தியா, இஸ்லாம், உரை, செய்திகள், ஜாக் நியூஸ், த மு மு க, நிழல்களும் நிஜங்களும், பாபர் மஸ்ஜித், முஸ்லிம், ஹிந்துத்வா, Editorials, Kalvi, mhj, Newspapers, Thamilagm, Thopputhurai, tmmk
பாபர் மஸ்ஜித்; ஒன்றுபட்டு போராட இயக்கங்கள் முன்வருமா..?
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு என்ற தத்துவத்தை நாமெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். உலகில் தோற்றுவிக்கப்பட்ட எந்த மதமும் சொல்லாத அளவுக்கு இறைவனின் மார்க்கமாம் இஸ்லாம் ஒற்றுமையை வலியுறுத்தி சொல்லியுள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்;
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் – உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் – நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை – வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.[3:103 ]
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்கள்; ‘இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (ஒத்துழைக்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். கட்டடத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலு சேர்க்கிறது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு தம் கை விரல்களை ஒன்றோடொன்று கோத்துக் காண்பித்தார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 6026
மேற்கண்ட குர்ஆண் வசனமும்-ஹதீஸும் ஒற்றுமையை வலியுறுத்தும் ஏராளமான செய்திகளில் ஒரு உதாரணமாகும். இந்த விஷயங்கள் முஸ்லிம்கள் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் நடைமுறையில் என்ன நிலை..? ஆளுக்கு ஒரு இயக்கம், ஆளுக்கு ஒரு கழகம் என்று பிரிந்து முஸ்லிம்கள் பலவீனப்பட்டு நிற்கிறோம். அந்த பலவீனத்தை அப்படியே தொடர்கிறோம் என்று உலகறிய செய்வதில் பெரும்பங்கு வகிப்பது பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டங்கள். இடிக்கப்பட்ட ஒரு பள்ளிவாசலை மீட்கப்போகிறோம் என்று சொல்லும் இவர்கள், ஒரு இறைவனை நம்பும் இவர்கள், ஒன்று பட்டுஓரிடத்தில் ஒரு தலைமையின் கீழ் குரல் எழுப்ப தயாராக இல்லை. ஒவ்வொரு அமைப்பு சார்பாக ஒவ்வொரு இடத்தில் போராட்டம். தலைநகர் சென்னையில் மட்டும் கடந்த காலங்களில் ஒன்பது இடங்களில் ஒன்பது அமைப்புகள் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது . இதை பார்த்த மாற்று மதத்தவர்கள் ஒரு பள்ளிவாசலை மீட்க ஒரு இடத்தில் ஒன்று கூட முடியாத இவர்கள் பள்ளிவாசலை மீட்கப்போகிறார்களாம் என்று எள்ளிநகையாடினர். பாபர்மஸ்ஜித் போன்ற பொதுப்பிரச்சினையில் கூட இவர்களை ஒன்று கூடவிடாமல் தடுத்தது கர்வமும்-ஈகோவும்-இயக்கவெறியும் அன்றி வேறென்ன..? இந்துத்துவா பயங்கரவாதிகள் பள்ளிவாசலை இடித்தபோது அதில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் என்று பல அமைப்புகள் ஒன்று சேர்ந்துதான் இடித்தார்கள். இந்துத்துவாக்கள் அமைப்பு ரீதியாக பிரிந்து நின்றாலும், முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகளை ஒன்றிணைந்தே செய்கிறார்கள். அவ்வளவு ஏன் திராவிட இயக்க பாரம்பரியத்தில் வந்த ஜெயலலிதா, கரசேவையை ஆதரித்து தனது இன வெறியை காட்டவில்லையா..? அல்லாஹ்வின் ஆலயத்தை இடிக்கும் பயங்கரவாதிகள் ஒன்று படும்போது, அதை மீட்கப்போகிறோம் என்று சொல்லும் இவர்கள் மட்டும் ஆளுக்கு ஒரு மூலையில் முனங்கிக்கொண்டிருப்பார்களாம்! இதில் நாங்கள் குர்ஆண்-ஹதீஸை மட்டுமே பின்பற்றுகிறோம் என்றுவேறு சொல்லிக்கொள்வது. இவர்களின் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால், வாருங்கள்! நாம் தனித்தனி அமைப்பாக இருந்தாலும் முஸ்லிம்களின் பொதுப்பிரச்சினையில் ஒன்றுபடுவோம் என்று அனைத்து அமைப்பினரையும் ஆலோசித்து களமிரங்காதது ஏன்..? ஒன்று பட்டால் வெற்றி உண்டு என்பதை சமீபத்தில் வாலிகண்டபுரம் மைய்யவாடி பிரச்சினை உணர்த்திக்காட்டியதே! பின்பு ஏன் ஒன்றுபட தயக்கம்..? ஒரே காரணம் ஒவ்வொருவரும் தங்கள் பலத்தை காட்டும் காரணியாக பாபர் மஸ்ஜித் போராட்டத்தை பயன்படுத்த எண்ணுவதே! இதை நாம் கற்பனையாக சொல்லவில்லை. சமீபத்தில் ஒரு அமைப்பின் துணை பொதுச்செயலாளரை தொலைபேசியில்தொடர்பு கொண்டு, பாபர் மஸ்ஜித் போராட்டத்தை ஒன்று பட்டு நடத்த முயற்ச்சிக்கலாமே என்றோம். அதற்கு அவர், நல்ல கருத்துதான்! ஆனால் யாரும் ஒத்து வரமாட்டார்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் அவரவர் பலத்தை காட்டுவதில்தான் முனைப்பாக இருப்பார்கள் என்று எதார்த்தமாக சொன்னார் இதுதான் இயக்கங்களின் நிலை. இதே நிலை தொடருமேயானால், அல்லாஹ் அறியாப்புரத்தின் மூலமாக அருள் செய்து மஸ்ஜித் நமக்கு கிடைத்தாலன்றி, இவர்களின் போராட்டங்கள் மூலமாக மஸ்ஜித் நமக்கு கிடைத்துவிடாது என்பதே உண்மை. உடனே இயக்க வெறியர்கள் சொல்லலாம் இட ஒதுக்கீடு கேட்டு தனித்தனியாகத்தான் போராடினோம் அதில் வெற்றி பெறவில்லையா என்று..? இட ஒதுக்கீடு மத சம்மந்தப்பட்டதல்ல. மேலும், குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க சட்டரீதியான அனுமதி அரசுக்கு உண்டு. அதோடு வாக்கு வங்கியும் இதில் கவனத்தில் கொள்ளப்பட்டது. எனவே இட ஒதுக்கீடு கிடைத்ததேயன்றி, இவர்களின் போராட்டத்தை கண்டு அஞ்சி அரசு இடஒதுக்கீடு தரவில்லை.[இட ஒதுக்கீடு எங்களாலதான் கிடைத்தது என்று இயக்கங்கள் குடுமியை பிடித்து கொண்டது தனி விஷயம்].
எனவே அன்பான இயக்கத் தலைவர்களே உங்களின் போராட்டத்திற்கு பயன் கிடைக்க வேண்டுமென்றால், பள்ளிவாசல் இடத்தை மீட்பது ஒன்றே உங்கள் உண்மையான நோக்கமென்றால் ஒன்று பட்டு போராட முன்வாருங்கள். அதற்கு கீழ்காணும் வழிமுறையை கையாளுங்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தில் மட்டும் போராட்டம் நடத்துவது.
அந்த போராட்டத்தில் அனைத்து அமைப்பினரும் சங்கமிப்பது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் எல்லா அமைப்பு பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஊர் ஊராக சென்று முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்து போராட்டங்களில் அனைத்து முஸ்லிம்களும் பங்கெடுக்க வலியுறுத்துவது.
அவரவர் கொடியோடு, பேனரோடு வருவதில் தவறில்லை.
ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு பிரதான தலைவர் தலைமை வகிக்க, மற்ற அமைப்பின் முன்னணி தலைவர்கள் முன்னிலை வகிக்கவேண்டும்.
உதாரணமாக சென்னையில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமையிலும் , மதுரையில் அல்தாஃபி தலைமையிலும், ராமநாதபுரத்தில் பாக்கர் தலைமையிலும், திருச்சியில், விழுப்புரத்தில் இவ்வாறாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மற்ற நிர்வாகிகள் தலைமையிலும் போராட்டம் நடத்தலாம்.
போராட்டம் முடிவுற்றபின் ஒவ்வொரு பிரதான அமைப்பின் முக்கிய தலைவர்கள் அடங்கிய குழு, கவர்னர், முதல்வர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து மகஜர் அளிக்கலாம்.
ஊடகங்களில் ஒன்றிணைந்து பேட்டியளிக்கலாம். அப்போது நாங்கள் தனி தனி இயக்கமாக இருந்தாலும் முஸ்லிம்களின் உரிமைகள்-நலன்கள் விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்போம் என்று அழுத்தமாக கூறலாம்.
இவ்வாறு ஒன்று பட்டு பொதுப்பிரச்சினையில் போராடினால், ஊடகங்களின் கவனம் நம் பக்கம் திரும்பும். அதிகார வர்க்கத்தை அசைத்து பார்க்கும். முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தால், அவர்கள் ‘தேனீக்கள்’போல் ஒன்று பட்டு எதிர்ப்பை காட்டுவார்கள் என்ற எண்ணம் உருவாகும். மேலும், இவ்வாறு ஒன்று பட்டு போராடும்போது இயக்கத்திற்கு அப்பாற்பட்ட முஸ்லிம்களும் போராட்டத்தில் பங்கெடுப்பார்கள். இதன் மூலம் ‘கலகலத்து’ போன பாபர் மஸ்ஜித் போராட்டத்தை வலுவான போராட்டமாக மாற்றமுடியும். போராட்டத்தோடு நாம் ஒன்று பட்டு அல்லாஹ்விடம் கையேந்தினால் அல்லாஹ் நமக்கு வெற்றியை வழங்குவான் இன்ஷா அல்லாஹ்.
இதைவிடுத்து வழக்கம்போல நாங்கள் ஆளுக்கு ஒருபக்கம் நின்றுதான் கத்துவோம் என்றால், இயக்கங்களின் பிரிவினை போக்கிலிருந்து அல்லாஹ் முஸ்லிம்களை பாதுகாப்பானாக!
நன்றி : » *நிழல்களும்-நிஜங்களும்* முகவை.அப்பாஸ்






















