Filed under: Abu Adhil
தோப்புத்துறையில் எழுச்சியை ஏற்படுத்திய சீரத்துன்-நபி விழா
எழில் மிகு தோப்புத்துறையில் விலிமை மிகு அமைப்பாகே திகழ்ந்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் மாணவர் முன்னணி (MSF ) தன் 22 ஆம் ஆண்டில் சிறப்பான ஒரு நிகழ்ச்சியை கடந்த மே 27 அன்று நடத்திருகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புகளை கூறும் சீரத்துன் நபி நிகழ்ச்சி 1999 ஆம் ஆண்டிலிருந்து MSF சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
பேரா.ஜவாஹிருல்லாஹ் , கவிக்கோ. அப்துல் ரஹ்மான், சன் டிவி வீரப்பாண்டியன் , நிஜாமுதீன் Ex.MLA , நாசர் Ex .MLA , கோவை.அய்யூப் , கோவை ஜாகிர் என பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் MSF நடத்திய சீரத்துன் நபி விழா நிகழ்சிகளில் பங்கேற்று பேசியுள்ளனர்.
பேரா.காதர் முகைதீன், வலம்புரி ஜான் , போன்றவர்கள் MSF -ன் பங்கேற்க ஒப்புக் கொண்டு கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத வேலைகளால் வர இயலாமல் போன்றவர்கள் ஆவர் .
இவ்வருடம் சீரத்துன் நபி விழா மே 12 அன்று திட்டமிடப்பட்டிருந்தது. டாக்டர்.அப்துல்லாஹ் பெரியர்தசனும் கோவை ஜாகிர் அவர்களும் கலந்து கொள்வதாக இருந்தது . டாக்டர்.அப்துல்லாஹ் அவர்கள் திடிரென சௌதி சென்றதால் நிகழ்ச்சி மே 27 அன்று ஒத்திப் போனது .
MSF ன் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ஒரு வாரமாக தீவரமாக களப்பணியாற்றினார்கள். நிகழ்ச்சி படே சாஹிப் தர்ஹா வளாகத்தில் திட்டமிடப்பட்டு , வளாகத்திற்கு நிறுவன உறுபினர்களில் ஒருவரான மர்ஹும் அன்சர் ஜான் அவர்களின் பெயரும் , மேடைக்கு இதன் முன்னணி உறுபினராக இருந்து சாலை விபத்தில் இறந்த மர்ஹும் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் பெயரும் சூடப்பட்டிருந்தது .
நிகழ்ச்சி நடைபெற்ற சுற்று வட்டாரம் முழுக்க டியுப் லைட்டுகளால் சோடிக்கப்பட்டு பரபரப்பாக இருந்தது. சில வர்த்தக நிறுவனங்கள் வரவேற்பு வளைவுகளையும் வைத்திருந்தார்கள்.
வளாகம் முழுக்க ஹாலோஜென் பளீர் விளக்குகள் பொருத்தப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதந்தது. மாலை 7 மணி முதலே பெண்கள் கூட்டம் வரத்தொடங்கியது. சரியாகே 7.௩௦ மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.
ஜமாஅத் தலைவர் ஜபுருல்லாஹ் தலைமை ஏற்க, நிகழ்சிகளை மூத்த உறுப்பினர் இஸ்மத் இநூன் தொகுத்து வழங்கினார். முதலில் திரு குர் ஆன் விரிவுரையை சின்னப்பள்ளி இமாம் முனீர் அவர்கள் ஓதினார்.
MSF தலைவர் ஜியாவுல் ஹக் வரவேற்புரை நிகழ்த்தினார். பிறகு ஜமாஅத் தலைவர் ஜபுருல்லாஹ் தலைமையுரை ஆற்றி MSF -ன் பணிகளை பாராட்டினார்.
பிறகு தோப்புதுறையின் பிரபல பாடகர் KMKN . ஹாஜா அவர்கள் நாகூர் ஹனிபாவின் பாடல் ஒன்றை பாடினார். அதன் பிறகு தோப்புத்துறை பெரிய பள்ளிவாசல் இமாம் ஹாபிழ் இஸ்மாயில் மொஹைதீன் பைஜி அவர்கள் இஸ்லாமிய பார்வையில் குடும்பவியல் என்ற தலைப்பில் அழகான உரையாற்றினார்.
சரியாக 8 .30 மணிக்கு +2 தேர்வின் தொப்புதுறையில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு MSF சார்பில் பாராட்டு சான்றிதழ்களை முறையே ஜமாஅத் தலைவர் ஜபுருல்லாஹ் , ஆரிபா குழுமம் தலைவர் சுல்தானுல் ஆரிபின் , முகமதியா அறக்கட்டளை தலைவர் முஹம்மது அலி ஆகியோர் வழங்கினர்.
MSF -ன் அதிகார பூர்வே இணையதளமான www .thopputhurainews .com – ஐ ஜமாத் செயலாளர் ஜெயினுதீன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
அதனை தொடர்ந்து தோப்புதுறையின் இணையதலத்திக்காக எழுதப்பட்ட தோப்புத்துறை வரலாற்றின் முதல் பாகத்தின் முதல் பிரதியை ஜமாத் தலைவர் ஜபுருல்லாஹ் வெளியிட , ஆரிப குழுமம் தலைவர் சுல்தானுல் ஆரிபின் பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை
பேரா. அப்துல்லாஹ் பெரியார் தாசனுக்கு MSF சார்பில் மூத்த உறுப்பினர் ரசூல் ரஹ்மானும் , ஜமாஅத் சார்பில் தலைவர் ஜபருல்லாஹ் கானும் சால்வை அணிந்து சிறப்பு செய்தனர்.
பிறகு MSF கடந்து வந்த பாதையை , அதன் நிறுவன உறுபினர்களில் ஒருவரும், மனித நேய மக்கள் கட்சியின் பொது செயலாளருமான M .தமீமும் அன்சாரி விளக்க பேசினார். தோப்புதுறையில் கல்வி பிரச்சாரத்தை முன் வைத்து தோப்புத்துறை MSF 2010 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி , அதன் விழியாக தோப்புதுறையில் உயர் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை உயர MSF ஆற்றிய பணிகளையும் , தோப்புத்துறை தூய்மை பசுமை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட்டு பசுமையை பராமரிக்க MSF எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் விவரித்துப் பேசினார்.
எதிர் கலாத்தில் பைத்துல்மால் உருவாக்கவும் , சென்னையில் ஒரு விடுதி ஒன்றை அமைக்கவும் , IAS படிக்க விரும்பும் ஒருவரின் முழு செலவையும் MSF ஏற்க விரும்புவதையும் கூறி உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக பேரா.அப்துல்லாஹ் பெரியார்தாசன் பேசினார். MSF ன் செயல் திட்டங்களை பாராட்டி பேசியவர் , சென்னையில் உள்ள வீட்டை விற்றுவிட்டு குடும்பத்தோடு தொப்புதுறைக்கு வந்துவிடலாமா? என யோசிக்க வைக்கிறது என கூடத்தை உற்சாக படுத்தினார். தான் இஸ்லாத்தை ஏற்ற விதத்தையும் நபிகள் நாயகத்தின் சிறப்புகளையும் , தீவிரவாதம் பழி பிரச்சாரம் குறித்தும் பேசினார். மாபெரும் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
9 மணி தொடங்கி 10.3௦ மணி வரை அவர் ஆற்றிய உரை மக்களை கவர்ந்தது. யாரும் கலையவில்லை. இறுதியாக MSF மூத்த உறுப்பினர் ஹம்தான் அவர்கள் நன்றியுரை கூறி, துஆ-வுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
22 ஆண்டுகளாய் கல்வி, மார்க்கம், சுற்றுச்சுழல், பெண்கள் முன்னேற்றம் , நல்லிணக்கம் என ஐம்பெரும் பணிகளில் ஈடுபட்டு வரும் MSF -ன் முயற்சிகளை அனைவரும் பாராட்டினர்.
தோப்புத்துறை பெரியப்பள்ளி திறப்பு விழாவுக்கு பிறகு சுமார் 500 பெண்கள் உட்பட 900 பேர் கலந்துக் கொண்டு பெரிய நிகழ்ச்சி இதுதான் என அனைவரும் கூறினார் ( அல்-ஹம்துலில்லாஹ் …….)
நிகழ்சிக்கு பிற சமுதாயங்களை சேர்ந்த நண்பர்களும் வந்திருந்தனர். அப்துல்லா பெரியார்தாசன் பேசிய C .D களும் , இஸ்லாமிய புத்தக கடையும் போடப்பட்டிருந்தது. பெரும்பாலான மக்கள் C .D களை வாங்கினர்.
நிகழ்ச்சியை வெளிநாட்டு வாழ் தோப்புத்துறை வாசிகள் THOPPUTHURAINEWS .கம இணையத்தளம் மூலம் கண்டுகளித்தனர்.
Filed under: Abu Adhil
வேலைவாய்ப்பை உருவாக்கும் வேளாண்படிப்புகள் (Agriculture studies)
உயர்ந்துவரும் விலைவாசிக்கு மிக முக்கியகாரணங்களில் ஒன்று வேளாண் உற்பத்தி குறைந்தது, வேளாண் உற்பத்தியை அதிகபடுத்துவதன் மூலமே எதிகால தேவையை பூர்த்தி செய்யமுடியும், அரசும் , தனியார் துறைகளும் வேளாண் உற்பத்தியில் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் . உற்பத்தியை அதிக படுத்தாதவரை விலைவாசியை குறைக்க முடியாது. எனவே வரும் காலங்களில் வேளாண்மை சார்ந்த படிப்புகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். பெரும்பாலும் மாணவர்கள் +2 முடித்துவிட்டு, பொறியியல் , மருத்துவம் சார்ந்த படிப்புகளை அதிகம் தேர்ந்தெடுத்து படிப்பதால் வேளாண்மை துறை சார்ந்த படிப்புகளில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. மருத்துவம்(MBBS, BDS) , பொறியியல் (B.E/B.Tech)அல்லாத படிப்புகள் படிக்க விரும்புபவர்களுக்கு இந்த படிப்புகள் சிறந்தது. வேளாண் துறை சார்ந்த படிப்புகள் படிப்பதால், எங்கும் வேலைக்கு போய் அலைய தேவை இல்லை, வெளி நாடுகளுக்கு போய் கஷ்ட்டபட தேவை இல்லை, அரசின் மானியத்துடன் , வேளாண் உற்பத்தியை சுயமாகவே துவங்கலாம், பலருக்கு வேலை கொடுக்கலாம்.
தமிழக அரசு தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் மூலம் வேளான் படிப்புகளை மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகின்றது. தமிழகத்தில் 13 அரசு வேளாண் கல்லூரிகள் மற்றும் 6 தனியார் கல்லூரிகளில் வேளாண் துறைசார்ந்த கீழ் காணும் படிப்புகள் பயிற்றுவிக்கபப்டுகின்றன.
பயிற்றுவிக்கப்படும் படிப்புகள்
4 ஆண்டு அறிவியல் படிப்புகள் : B.Sc.(Agriculture, Horticulture, Forestry, Home Science, Agricultural Engineering)
4 ஆண்டு பொறியியல் படிப்புகள் : B.Tech.(Biotechnology) , B.Tech.(Horticulture) , B.Tech.(Food Process Engineering) ,B.Tech.(Energy and Environmental Engineering) , B.Tech.(Bioinformatics) , B.S.(Agribusiness management ) ,B.Tech.(Agricultural information technology) .
மேற்கண்ட படிப்புகளில் சேறுவதற்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி ஜூன் 6 (இன்ஷா அல்லாஹ்). விண்ணப்பத்தின் விலை ரூ.600.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் :
அனைத்து அரசு வேளாண் பலகலை கழகங்களிலும் கிடைக்கும், தபால் மூலமும் விண்ணப்பங்களை பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
THE DEAN (AGRICULTURE) AND CHAIRMAN ADMISSIONS, Tamil Nadu Agricultural University , Coimbatore-641003
தகுதிகள் :
+2 தேர்வில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல், அல்லது கணிதம், இயற்பியல் வேதியியல் படித்து இருக்க வேண்டும், குறைந்தது 55% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும் (முஸ்லீம்களுக்கு 50 % ). 21 வயதிற்க்கு மிகாமல் இருக்க வேண்டும்
மாணவர்களை தேர்ந்தெடுக்கும் முறை :
மேலே குறிபிட்டுள்ள 4 பாடங்களின் மதிப்பெண் அடிப்படையில் தகுதி பட்டியல் (Rank list ) தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்கள் கல்லூரியில் அனுமதிக்கப்படுவார்கள், இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது.
அனைத்து விபரங்களும் sithiqu.mtech என்ற ஈ – மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்
S.சித்தீக்.M.Tech
Filed under: Abu Adhil
| கரண்டிலில்லை, கட்டிலில்லை, கல்வியில் முதன்மை இடம்!
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ,பீ.எஸ்(ஓ) சென்ற வருடம் சென்னையில் வசிக்கும் வியாபாரி நண்பர் ஒருவர் தன் மகனுடன் வந்து, தன் மகன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிப்பதாகவும், அவனுக்குப் படிப்படிற்காக, தனி அறை, இன்டர்நெட், ஏ.சி. வசதியெல்லாம் செய்து கொடுத்திருப்பதாகவும், ஆனால் அவன் சரியாக படிக்க மாட்டேன் என்கிறான், அவன் பரிட்சையில் குறைந்த மார்க்கே வாங்கியுள்ளான் என்றார். அந்த மாணவனிடம் காரணம் கேட்டதிற்கு, ‘நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கூடத்தில் பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். ஆகவே தன்னை அங்கு படிக்க வைக்கச் சொல்லுங்கள்’ என்றான். தந்தையோ தன் குடும்ப சூழலில் தன் மகன் தன் வீட்டில் தங்கி படிப்பது தான் நல்லது என்றார். அந்தப் பையனுக்கு தந்தையின் சூழ் நிலையினையும், கவனம் திரும்பாது படித்தால் நிச்சயமாக அவனும் பிளஸ் டூ பரிச்சையில் அதிக மதிப்பெண் பெறலாம் என்று அவனுக்கும், அவனுடைய தந்தைக்கு மகன் படிக்கும்போது எந்த இடைஞ்சலும் வராதுப் பார்த்துக் கொள்ளும்படியும் புத்திமதி சொல்லி அனுப்பினேன். எல்ல வசதியும் வாய்ப்பும் இருந்து சிலர் சரியாக படிப்பில் கவனம் செலுத்த மாட்டேன் என்கிறார்கள். ஆனால் குறைந்த வசதியே கொண்டு ஒரு மாணவன் சி.பி.எஸ்.சி. என்ற படிப்பில் பிளஸ் டூ பரிச்சையில் இந்த வருடம்(2012) இந்தியாவிலேயே முதல் மாணவனாக தேர்வாகி உள்ளான் என்று படிக்கும்போது நெஞ்ஜெம்மெல்லாம் இனிக்கின்றது அல்லவா? அதுவும் ஒரு வசதி குறைவான குடும்பத்தில் வாழ்ந்த ஒரு முஸ்லிம் மாணவன் எப்படி அடைந்தான் என்று பார்க்கலாம்! மணிபூர் மாநிலத்தில் லிலாங் என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளிக்கூடம் மற்றும் தொழுகை பள்ளி மௌலானா பசீர் ரஹ்மானின் ஆறு பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்த கடைக்குட்டி முஹம்மத் இஸ்மத். அவனுக்கு பதினெட்டு மாதம் இருக்கும்போது தாய் இறைவனடி சேர்ந்தார். அவனையும், சவைளையுமான ஆறு பெண் குழந்தைகளை மௌலானா பஷீர் வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி வளர்த்தார். ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்ததால் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்தது. அந்த கிராமத்தில் சரியான ரோடு வசதி இல்லை, மின்சார வசதி இல்லை. ஆனால் அவருடைய ஆர்வத்தால் மூத்த ஆறு பெண் குழந்தைகளையும் பட்டதாரியாக்கினார். பொருளாரதார வசதி இல்லாவிட்டாலும் கடைக் குட்டி முஹம்மத் இஸ்மத், தந்தை மற்றும் படித்த சகோதரிகளின் ஆதரவினால் மனந்தளராது மெழுகு வர்த்தி வைத்து தன் படிப்பினை ஆர்வத்துடன் தொடங்கினான். இன்று இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களை விட அதிகமான மதிப் பெண்ணான 495/500 முதல் இடத்தினை பிடித்துள்ளான். இஸ்மத் கணிதம்,பௌதீகம், பைன் ஆர்ட்ஸ் மற்றும் ஹோம் சயின்ஸ் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும்,ஆங்கிலத்தில் 98, மதிப்பெண்களும், அறிவியலில் 97 மதிப் பெண்களும் பெற்றுள்ளான். அது மட்டுமல்ல, தன் வருங்கால குறிக்கோளே ஐ.ஏ.எஸ் ஆவதுதான் என்று இப்போதே தீர்மானித்து விட்டதாக பேட்டியில் சொல்லியுள்ளான். அபார தன்னம்பிக்கை கொண்ட அந்த சிறுவனின் படத்தினை உங்களுக்கு கீழே தருவதோடு, நாம் படித்துக் கொள்ளும் பாடமும் என்ன என்று பார்க்கலாம்: 1) படிக்க வேண்டுமென்றால் பத்மா சேசாத்ரி ஆங்கிலப் பள்ளிக்கோ அல்லது டான் போஸ்கோ பள்ளிக்கோ அல்லது டி.ஏ.வீ. பள்ளிக்கோ படை எடுத்து ஐம்பது ஆயிரத்திலிருந்து ஒரு லக்ஷம் வரை டொனேசன் கொடுத்துப் பிள்ளைகளை சேர்க்க வேண்டாம். மாறாக வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்து பிள்ளைகள் கவனம் வீடியோ கேம், இன்டர்நெட் சாட்டிங், சினிமா போன்ற கேளிக்கைகளில் சிந்தாது பார்த்து படிக்க வைத்தால் போதுமானது. 2) குடும்பத்தில் பெற்றோரில் ஒருவர் கண்டிப்பாக படித்து இருக்க வேண்டும். அப்போது தான் குழந்தை வளர்ப்பும் சிறப்பாக இருக்கும். இஸ்மத்தின் தந்தை படித்திருந்ததால், தந்தையாக மட்டுமில்லாமல் ஏழு பிள்ளைகளுக்கும் தாயாக இருந்து படிக்க வைத்துள்ளார். அது மட்டுமல்ல, நமதூரில் இமாம்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு குலத் தொழிலாக இமாம்களாக ஆக்கவே கருதுகிறார்கள். அப்படி இல்லாமல் மார்க்க அறிவோடு, உலகக் கல்வியும் இல்லை என்றால் சமூதாய பிள்ளைகள் பிற்பட்டவர்களாக ஆகிவிடுவோம் என்ற கவலை மற்ற இமாம்களுக்கு வரவேண்டும். 3) நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்பார்கள். மூத்த ஆறு சகோதரிகளும் படித்து பட்டதாரியானதால், இளைய தம்பி இஸ்மாத்தினையும் சிறக்க படிக்க வைத்துள்ளார்கள் சகோதரிகள். ஆகவே தாய் இல்லாவிட்டாலும் மற்ற பெண்களும் கட்டாயம் பட்டதாரிகள் என்ற பெருமையினை சேர்க்க பெண்கள் முன் வர வேண்டும். ஏனென்றால் வீட்டில் ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே கல்விக் கண் என்ற கதவினை திறக்கும் சாவியாகும். நமது முஸ்லிம் சமூதாயம் பின் தங்கி இருப்பதின் முதல் காரணமே ஒழுங்கான கல்வி பிள்ளைகளுக்கு கிடைக்க வில்லை என்பது தான். அது மட்டுமல்ல. பெற்றோர்கள் தங்கள் குலத் தொழிலையே பிள்ளைகளை பின் பற்றுமாறு செய்கிறார்கள். உதாரணத்திற்கு மீன் வியாபாரியோ, கோழி வியாபாரியோ, கருவாட்டு வியாபாரியோ, இரும்பு வியாபாரியோ,பாய் வியாபாரியோ தங்கள் குழந்கைகளை தங்கள் தொழிலிலேயே ஈடு படுத்துகிறார்கள். ஆனால் சிறந்த பொன் விளையும் பூமி என்ற தஞ்சாவூர் கோவை, ஈரோடு, சேலம் மக்கள் கூட தங்கள் குழந்தைகளை விவசாயத்தில் வானம் பார்க்கும் வேலையாக இருக்கிறது என்று கல்வியில் ஈடுபடுத்துகிறார்கள். ஆகவே சமுதாய மக்களும் கல்வி கற்பது இன்றும் என்றும் நல்லது என்று கருதி குழந்தைகளை கல்வி கற்க வைக்க வேண்டும். AP,Mohamed Ali |
Filed under: Abu Adhil
அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்…
அன்புள்ள தோப்புத்துறை வாழ் சகோதரர்கள், ஜமாத் நிர்வாகிகள் அனைபேர்களுக்கும்,
தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகத்தினரின்
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று இரவு, நமதூர் தோப்புசா பள்ளிவாசல் பாசறை சார்பில் அரை நிர்வாண நடனம் நடைபெறவுள்ளது,
இதற்கு தோப்புத்துறை முஸ்லிம் ஜமாத் மன்றம் அனுமதி அளித்ததா? இல்லையா என்று தெரியவில்லை – அல்லது அனுமதி கேட்க வாய்பில்லை. அதனால்தான் “ எங்களுக்கு எதிரிகள் இல்லை, அவ்வாறு இருந்தால் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை” என்ற வார்த்தை அவர்கள் போஸ்டரில் இருந்து இருக்காது.
ஆனால், இஸ்லாமிய முறைபடி நடக்கும் திருமணத்திற்கு தடைவிதிக்கிறீர்கள், அதனை பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அறிவிக்கின்றீர்கள், ஆபாச நடனத்தை விட வரதட்சணை வாங்காமல் நடக்கும் , இஸ்லாமிய திருமணம் மோசமானது என்று நினைக்கின்றீகளா?
இஸ்லாமியர்கள் அனைபேர்களும் சகோதரர்கள் என்று நினப்பவர்கள் நாங்கள், காரணம், அனைவரிடமும் தஃவா பணி செய்யவேண்டும் என்று செயல்பட்டு வருகின்றோம். அதனால் அனபேர்களையும் சகோதரர்களாக பார்கின்றோம். அதனால் நாங்கள் எதிரிகள் என்று யாரையும் கருதுவது கிடையாது.
அப்படி என்றால், அவர்கள் எதிரிகள் என்று யாரை கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.
எனவே, நமதூர் முஸ்லிம் ஜமாத்மன்ற நிர்வாகம், மற்றும் அனைத்து நமதூர் சகோதரர்கள் அனைபேர்களுக்கும் ஒரு வேண்டுகோள்…
ஆபாச நடனம் இன்று இரவு நடக்க தாராளமாக அனுமதி அளிக்கும் போது, இஸ்லாமிய திருமணத்திற்கு – தவறான முடிவினை நமதூர் ஜமாத்மன்ற நிர்வாகம் ஏன் எடுக்கின்றது?
அன்புள்ள,
மர்கஸ் நிர்வாகம்,
தோப்புத்துறை
Filed under: Abu Adhil
அஸ்ஸலாமு அலைக்கும்,
தன்மானம்
ஒட்டியிருக்கும் பசியால்
முதுகு கூண் விழுந்தாலும்
தன்மானம்;
தலை நிமிர்ந்து நிற்கட்டும்;
இப்படித் தரையில்
கடையினைப் போட்டாவது
முகம் சிரிக்கட்டும்;
நானே முதலாளி என
உழைப்பிற்கு உயர்வால்
கொடிக்கட்டிக் கொள்ளட்டும்!
-யாசர் அரஃபாத்
Filed under: Abu Adhil
After 12th STD என்ன படிக்கலாம்
வேலைகள் பல்வேறு துறைகளில் உள்ளன. பிளஸ் 2 முடித்த மாணவரிகள் முதலில் அந்தத்துறைகளை கண்டுகொள்ள வேண்டும். அந்தத்துறை பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்க வேண்டும். சேகரித்த தகவல்கள் சரியானது தானா? ஏன தகுந்த கல்வியாளரிகளிடம் அல்லது கல்வி வல்லுனர்களிடம் கலந்துரையாடி தெரிந்துகொள்ள வேண்டும். தனக்கு ஏற்ற துறையை தேர்ந்தெடுத்த பின்பு அதற்குத் தகுந்த படிப்பில் சேர முயற்சி செய்வதே சிறந்த செயலாகும்.http://speedsays.blogspot.in
வேலைகள் வழங்கும் பல்வேறு துறைகள் விவரம்..http://speedsays.blogspot.in
1. விண்வெளி பொறியியல் (Aerospace Engineering)
2. வங்கி மற்றும் காப்பீடு (Banking and Insurance)
3. பயோ டெக்னாலஜி (Bio Technology)
4. பி-பார்ம் (B – Pharmacy.)
5. பி.பி.ஓ இன்டஸ்ட்ரி (BPO Industry.)
6. கணினி மற்றும் மென்பொருள் (Computer / Software).
7. நிகழ்ச்சி மேலாண்மை (Event Management)
8. பேசன் மேனேஜ்மென்ட் (Fashion Management).
9. மனித உரிமைகள் (Human Rights.)
10. விருந்தோம்பல் மேலாண்மை (Hospitality Management.)
11. உடல்நலம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் (Health Care/ Medical Tech.,)
12. தகவல்துறைத் தொழில்நுட்பம் (Information Technology.)
13. தொழிற்ச்சாலை உறவுகள் (Industrial Relations)
14. பன்னாட்டு வாணிபம் (International Trade.)
15. மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகம் (Management/Business Administration.)
16. ஊடகம் மற்றும் இதழியல் (Media / Journalism.)
17. பொருள் மேலாண்மை (Material Management.)
18. உற்பத்தி மேலாண்மை (Production Management)
19. பணியாளர் மேலாண்மை (Personnel Management.)
20. கிராம மேலாண்மை (Rural Management.)
21. போக்குவரத்து மற்றும் சுற்றுலா (Travel / Tourism.)
22. சில்லறை வியாபார மேலாண்மை (Retail Management.)
23. செலவு மற்றும் மேலாண்மை கணக்குப்பதிவு (Cost and Management Accountancy)
24. மண்ணியல் (Geology.)
25. தோட்டக்கலை (Horticulture.)
26. விளம்பர மேலாண்மை (Advertising Management).
மாணவரிகள் தங்களின் உயர்நிலைக் கல்வியை தேர்வுசெய்ய உதவும் வகையில் உயர்நிலைக் கல்வி பல வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை
I கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயரி படிப்புகள்.
II இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயர் படிப்புகள்.
III பொருளாதாரம், கணக்குப்பதிவு, வணிகவியல, செயலாளரிபயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயரி படிப்புகள்..http://speedsays.blogspot.in
IV உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவருக்கும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய பாடங்கள்:
V போட்டித் தேர்வுகள்
இவை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்
I கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயரி படிப்புகள்.
இந்தப் பிரிவை
1) நுழைவுத் தேரிவுகள்
2) பட்டபப்டிப்புகள்
3) டிப்ளமோ படிப்புகள்
4) சான்றிதழ் படிப்புகள்
என 4 பிரிவுகளாகப் பிரித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.
1) நுழைவுத் தேர்வுகள்.http://speedsays.blogspot.in
1. ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் (ஐ.ஐ.டி) (IIT)
2. ஆல் இந்தியா என்ஜினியரிங் எக்ஸாமினேசன் (AIEE)
3. ஐ.ஐ.டி. இந்திய தகவல்துறைத் தொழில்நுட்பத்திறன் நுழைவுத் தேர்வு
4. கம்பைண்டு என்ட்ரன்ஸ் என்ஸாமினேசன் (நேவிகேசன் கோர்ஸ்)
5. இந்திய மாநிலங்களில் நடத்தப்படும் பலவிதமான நுழைவுத்தேர்வுகள்
6. என்.ஐ.டி. நுழைவுத்தேர்வு ( நேஷ்னல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி)
7. பி.டெக். இன்டெஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வு
8. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு
9. சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசசுச் இன்ஸ்ட்டியூட் (பி.டெக் எலக்ட்ரோ கெமிக்கல் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி)
2) பட்டபடிப்புகள் பி.இ.பி.டெக். படிப்பகள்
1. வான்ஊர்திப் பொறியியல் (Aeronautical Engineering)
2. கட்டிடக்கலை (Architecture)
3. தான்னியங்கிப் பொறியியல் (Automobile Engineering)
4. பயோ இன்பரிமேட்டிக்ஸ் (Bio – Informatics)
5. பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேசன் என்ஜினியரிங் (Bio – Medical Instrumentation Engineering)
6. பயோ டெக்னாலஜி (Bio Technology)
7. கட்டிடக்கலைப் பொறியியல் (Civil engineering)
8. வேதிப் பொறியியல் (Chemical Engineering)
9. தீயணைப்பு பொறியியல் (Fire Engineering)
10. கணினி அறிவியல் பொறியியல் (Computer Science Engineering)
11. கம்ட்டரி சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் (Computer Software & Hardware)
12. மின்னியல் மற்றும் மின்னனு வேதியியல் (Electrical and Electroics Chemical)
13. மின்னியல் மற்றும் தகவல்தொடர்பு (Electronics and Communication)
14. மின்னியல் மற்றும் கருவியியல் (Electronics and Instrumentation)
15. தொழிற்ச்சாலைப் பொறியியல் (Industrial Engineering)
16. சுற்றுப்புற பொறியியல் புவித்தகவல்கள் (Environment Engineering – Geo – Informatics)
17. தகவல்துறைத் தொழில்நுட்பம் (Information Technology)
18. கருவியியல் பொறியியல் (Instrumentation Engineering)
19. தோல்ப்பொருள் தொழில்நுட்பம் (Leather Technology)
20. உற்பத்திப் பொறியியல் (ManufacturingEngineering)
21. மெரைன் இன்ஜினியங் (Marine Engineering)
22. மெக்கட்ரானிக்ஸ் (Mechatronics)
23. மெட்டலர்ஜிக்கல் என்ஜினியரிங் (Mettallurgical Engineering)
24. சுரங்கப் பொறியியல் (Mining Engineering)
25. எரிபொருள் வேதிப்பொறியில் (Petro – Chemical Technology)
26. பாலிமர் என்ஜினியரிங் (Polymer Engineering)
27. உற்பத்திப் பொறியியல் (Production Engineering)
28. அச்சுப்பொறியியல் (Printing Technology)
29. ரப்பர் டெக்னாலஜி (Rubber Technology)
30. டெக்ஸ்டைல் என்ஜினியரிங் (Textile Engineering)
3) டிப்ளமோ படிப்புகள்.http://speedsays.blogspot.in
1. கட்டிடப் பொறியியல்
2. மின்சாரப் பொறியியல்
3. மின்னணுப் பொறியியல்
4. எந்திரவியல் பொறியியல்
5. உற்பத்திப் பொறியியல்
6. வேளாண்மைப் பொறியியல்
7. கணினி அறிவியல் பொறியியல்
8. மின்னணு மற்றும் தொலைத்தொடரிபு
9. கட்டிக்கலை மற்றும் கிராமப்புற பொறியியல்
10. வேதிப்பொறியியல்
11. தோல்ப்பொருள் தொழில்நுட்பம்
12. வேதித்தொழில்நுட்பம்
13. பாலிமர் தொழில்நுட்பம்
14. பல்ப் பேப்பர் தொழில்நுட்பம்
15. மென்;பொருள் தொழில்நுட்பம்
16. மீன்வளத் தொழில்நுட்பம்
17. கைத்தறி; தொழில்நுட்பம்
18. அச்சுத்தொழில்நுட்பம்
19. பிளாஸ்டிக் டெக்னாலஜி
20. சரிக்கரைத் தொழில்நுட்பம்
21. டெக்ஸ்டைல் டெக்னாலஜி
22. கணினித் தொழில்நுட்பம்
23. கார்மெண்ட் டெக்னாலஜி
24. மரத் தொழில்நுட்பம்
25. வனத்துறைத் தொழில்நுட்பம்
26. காலணிகள்த் தொழில்நுட்பம்
27. போர்மேன் டெக்னாலஜி
28. ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடை உருவாக்குதல்
29. ரெப்ரிஜ்ரேசன் மற்றம் ஏலீ; கப்டி`னிங்
30. விற்பனைத் துறை
31. காஸ்மெட்டாலஜி
4) சான்றிதழ் படிப்புகள்http://speedsays.blogspot.in
1. பிளாக்ஸ்மித்
2. தச்சுத்தொழில்
3. மோல்டர்
4. பெயிண்டர்
5. `டீட் மெட்டல் ஒலீ;க்கர்
6. கட்டடம் கட்டுபவர்
7. பேட்டரின் மேக்கர்
8. மெக்கானிக் டீசல்
9. பிளம்பர்
10. மெக்கானிக் கிரெய்ண்டர்
11. மெக்கானிக் மோட்டார்
12. கடிகாரம் மற்றும் கைக்கடிகாரம் உருவாக்கல்
13. வெல்டரி கேஸ் மற்றும் மின்சாரம்
14. மெக்கானிக் மோட்டார் வாகனங்கள்
15. ஒயர்மேன்
16. டர்னர்
17; மெக்கானிஸ்ட்
18. பிட்டசு
19. எலக்ட்ரோ பிளேட்டர்
20. ஒயர்லெஸ் ஆப்பரேட்டர்
21. சர்வேயர்
22. இன்ட்ரூமென்ட் மெக்கானிக்
23. எலக்ட்ரீ சியன்
24. மெக்கானிக் ரெப்ரிஜ்ரே`ன் மற்றும் ஏர் கண்டிசனிங்
25. கருவி வடிவமைப்பாளர்
26. டிராட்ஸ்மேன் சிவில்
27. டிராட்ஸ்மேன் மெக்கானிக்
28. மெக்கானிக் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி
29. மெக்கானிக் ஜெனரல்
30. பிழைத்திருத்தல்
31. சுருக்கெழுத்து ஆங்கிலம்
32. ஹேண்ட் ஒயரிங் ஆப் பேண்சி அண்ட் பர்னிஸ்சிங் பேப்ரிக்ஸ்
33. எம்பர்யாடரி அன்ட் டெய்லரிங்
34. கட்டிங் அண்ட் டெய்லரிங்
35. காலணிகள் உருவாக்குதல்
36. சூட்கேஸ் மற்றும் லெதர் பொருள் உற்பத்தி
II இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.
இந்த பிரிவைhttp://speedsays.blogspot.in
1) மருத்துவ நுழைவுத்தேர்வுகள்
2) மருத்துவம் பட்டப்படிப்பு ஃடிப்ளமோஃ சான்றிதழ் தகுதி
3) வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்
4) உயிரியல் அறிவியல் மற்றம் துணைப்பாடம்
5) மனை அறிவியல்
6) பொதுப்பாடங்கள்
என 6 பிரிவுகளாகப் பிரித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.
1) மருத்துவ நுழைவுத்தேர்வு
1. ஆர்ம்டு போர்ஸஸ் மெடிக்கல் காலேஜ் – பூனே
2. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் – உ.பி
3. ஆல் இந்தியா பிரிமெடிக்கல் ஃ பிரிடெண்டல் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் கண்டெக்டட் பை சென்ட்ரல் போர்டு ஆப் செகரட்ரி எஜூகேசன்
4. ஜவஹர்லால் மருத்துவம் மற்றும் ஆய்வுப்பிரிவின் பட்டமேற்படிப்புக்கான நிறுவனம் – புதுச்சேரி
5. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் – உ.பி
6. கிரிஸ்ட்டியன் மருத்துவக் கல்லூரி – வெள்ளுர்
7. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் – (புதுடெல்லி)
மருத்துவம் – பட்டப்படிப்பு = டிப்ளமோ / சான்றிதழ் தகுதி
பட்டப்படிப்புக்கான மருத்துவ பாடங்கள்http://speedsays.blogspot.in
1. எம்.பி.பி.எஸ்.
2. பி.டி.எஸ்.
3. பி.ஹெச்.எம்.எஸ்
4. பி.ஏ.எம்.எஸ்
5. பி.எஸ்.எம்.எஸ்
6. பி.பார்ம்
7. பி.பி.டி.
8. பி.எஸ்.சி (நர்சிங்)
9. பி.ஒ.டி.
மருத்துவப்பாடங்கள் = டிப்ளமோ / சான்றிதழ்த்தகுதி
1. மருத்துவத் தொழில்நுட்பம்
2. லெப்ரோசி இன்ஸ்பெக்டர் கோர்ஸ்
3. லேப் டெக்னீசியன்
4. இ.சி.ஜி டெக்னீசியன்
5. டெண்டல் மெகனிக்
6. ஆண்தால்மிக் அசிஸ்டெண்ட் கோர்ஸ்
7. ஹெல்த் வொர்க்கரி டிரெய்னிங்
8. கோர்ஸ் இன் ஆண்டோமெட்ரி
9. ஆர்தோபிஸ்ட் கோர்ஸ்
10. மெடிக்கல் ரேடியேசன் டெக்னாலஜி
11. டிப்ளமோ இன் டயாலிசிஸ்
12. மருத்துவமனை நிர்வாகத்தில் டிப்ளமோ
13. மருத்துவ நுன்னுயிறியல்
14. டிப்ளமோ இன் புரோஸ்தெடிக்ஸ் அன்ட் ஆர்தோட்டிக்ஸ்
15. பெரிபுயூசன் டெக்னாலஜி
16. பிசியோதெரபி
17. ஸ்பீச் தெரபி
18. நர்சிங்
வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்
1. வேளாண்மை அறிவியல் பி.எஸ்.சி. அக்ரி
2. பால்ப்பொருள் அறிவியல் பி.எஸ்.சி (டி.டி)
3. கால்நடை அறிவியல் பி.வி.எஸ். ஏ. ஹெச்
உயிரியல் அறிவியல் மற்றம் துணைப்பாடம்
1. விலங்கியல் – பி.எஸ்.சி
2. மீன்வளம் – பி.எஸ்.சி
3. எம்.எஸ்.சி. மரெயின் சயின்ஸ் மற்றும் உயிரியல்
4. எம்.எஸ்.சி. மரெயின் பயோடெக்
5. அக்குவாடிக் பயோலஜி மற்றும் மீன்வளம் எம்.எஸ்.சி
6. நுன்னுயிரியல் – பி.எஸ்.சி எம்.எஸ்.சி
மனை அறிவியல்
1. மனை மேலாண்மை
2. உணவு மற்றும் ஊட்டச்சத்து
3. குழந்தை வளர்ச்சி
4. ஆடை மற்றும் டெக்ஸ்டைல்ஸ்
5. உணவு சேவை மேலாண்மை
6. டெக்ஸ்டைல்ஸ் வடிவமைப்பு
7. டெக்ஸ்டைல்ஸ் கிராண்ட்
8. உணவுத்தொழில்நுட்பம்
9. மனித ஊட்டச்சத்து
10. உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து
11. உணவு உற்பத்தி
12. பயண்பாடு மற்றும் கழிவுப்பொருள் மறுசுழற்சி
பொதுப்பாடம்
1. இயற்பியல்
2. வேதியியல்
3. தாவரவியல்
4. விலங்கியல்
5. பயன்பாட்டு புள்ளியல்
6. பயன்பாட்டு கணிதம்
III பொருளாதாரம், கணக்குப்பதிவு, வணிகவியல், செயலாளர்பயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.
1. சாட்டர்டு அக்கவுண்டன்சி
2. வங்கியியல்
3. சட்டப்படிப்பு – பி.எல்
4. மேலாண்மை – பி.பி.ஏ
5. பொருளாதாரம் – பி.ஏ
6. வணிகவியல்
7. டீச்சிங்
8. உலக அறிவியல்
9. உளவியல்
10. வரலாறு
11. புவியியல்
12. ஆங்கிலம்
13. மொழி
14. இசை
15. நிதி
16. ஊடகம்
17. தகவல் தொடர்பு
18. காஸ்ட்அக்கவுண்டன்சி
IV உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்கள்:
1. உடற்கல்வி
2. சட்டப்படிப்பு
3. ஏவியேசன் – விமானப்பணிண்பெண்
4. பாஸ்மெட்டாலஜி
5. பேஷன் டெக்னாலஜி
6. காப்பீடு
7. கடல்சாரபடிப்பு
8. போக்குவரத்து மற்றும் சுற்றுலா
9. புகைப்படம் பற்றிய படிப்பு
10. கலை/பயன்பாட்டுக் கலை
11. நகை வடிவமைப்பு
12. பேஷன் மாடலிங்
14. இதழியல் மற்றும் அச்சு ஊடகம்
15. பிலிம் மற்றும் பிராட்காஸ்டிங் (டி.வி/ரேடியோ)
16. கலையரங்கம் மற்றும் நடிப்பு
17. விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு
18. நடிப்பு
19. ஆடியோ மற்றும் வீடியோ உற்பத்தி
20 சின்மாட்மோகிராபி
21. இயக்கம்
22. டைரக்சன் சுரரி பிளே ரைட்டிங்
23. வீடியோகிராபி
24. பிலிம் எடிட்டிங்
25. நாடகக்கலை
26. பிலிம் டைரக்டிங்
27. சினிமா நடிப்பு
28. ஆடியோகிராபி மற்றும் எடிட்டிங்
29. பிலிம் எடிட்டிங்
30. படத் தயாரிப்பு
31. பிலிம் பிராசசிங்
32. பிலிம் ஸ்டடிஸ்
33. கலையரங்கம் மற்றும் டி.வி. தொழில்நுட்பம்
34. பிரிஹேன்ட் அணிமே`ன்
35. பப்டமென்டல் அன்ட் ஆடியோ விசூவல் எஜூகேசன்
36. மோசன் பிக்சரி போட்டோகிராபி
37. நிகழ்ச்சி மேலாண்மை
38. விசூவல் கம்யூனிகேசன்
39. புத்தக பதிப்பு
40. அரசியல் அறிவியல்
41. குற்றவியல்
42. விக்டிமாலஜி
43. நடனம்
44. ஜெம்மாலஜி
45. தொழிற்ச்சாலை வடிவமைப்பு
46. பூமி பற்றிய அறிவியல்
47. நகரத் திட்டமிடல்
48. மண்ணியல்
49. சமூகவியல்
V போட்டித் தேர்வுகள்http://speedsays.blogspot.in
புடிப்பை முடித்த பின்னர் போட்டித்தேர்வுகள் எழுதுவதன்மூலம் பலருக்கு வேலைகள் எளிதில் கிடைக்கும். தகுதியான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்பலவகையான போட்டித்தேர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
போட்டித்தேர்வுகளை 1. அறிவியல் மற்றும் கணிதப்பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள்.
2. வணிகவியல் பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள் என இருவகையாகப் பிரிக்கலாம்.
1.அறிவியல் மற்றும் கணிதம் பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள்:
1. பொறியியல்த்துறைத் தேர்வுகள்
2. வங்கித் தேர்வுகள்
3. இந்திய வனத்துறைத் தேர்வகள்
4. மண்ணியல்த்துறைத் தேர்வுகள்
5. கம்பைண்டு மருத்துவத்துறை தேர்வுகள்
6. இந்திய பொருளாதாரம் புள்ளியல் துறை தேர்வுகள்
7. சிவில் சரிவீஸஸ் தேர்வு
8. எஸ்.எஸ்.சி நடத்தும் தேர்வுகள்
9. ரெயில்வே வேலைவாய்ப்புத்துறை நடத்தும் தேர்வுகள்
2. வணிகவியல் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள்
1. சிவில் சரிவீஸஸ் தேர்வுகள்
2. வருமானத்துறைத் தேரிவகள்
3. எஃசைஸ் மற்றும் வருமானவரித்துறைத் தேர்வுகள்
4. இந்திய பொருளாதாரத்துறைத்தேர்வு
5. இந்திய ராணுவம் விமானத்துறைத் தேர்வு
6. இந்திய புள்ளியல்துறைத் தேர்வு
7. கம்பைன்டு டிபன்ஸ் சர்வீஸஸ்
வேலைவாய்ப்பு பற்றிய பட்டியல் இத்துடன் முடியவில்லை இது ஒரு முன்னோட்டம் தான் ஒவ்வொரு நபரும் தனது ஆளுமைத்தன்மைக்கு தகுந்தத் துறையைத் தேர்வு செய்து திட்டமிட வேண்டும். ஒரு தொழிலைத் தேர்வுசெய்வது வாழ்க்கைத் தொழில் செயல்பாடுகளில் ஒன்றாகும். ஒரு வேலையைப் பெறுவது அந்த வேலையில் வளர்வது, வாழ்க்கைத்தொழிலை மாற்றுவது, ஓய்வு பெறுவது என வாழ்நாள் முழுவதும் வரும் செயல்கள் ஆகும். வாழ்க்கையின் இலக்கு நிர்ணயம் செய்வது முதல் வாழ்க்கைத்தொழில்மாற்றம் செய்வதுவரை பல வகைகளில் “வாழ்க்கைத்தொழில் திட்டமிடல்” உதவும். வாழ்க்கைத்தொழிலை ஒருவர்சரியாக திட்டமிடுவது மூலம் ஒருவர் தனது வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெறலாம்.
தற்போதைய வாழ்க்கைத்தொழில் ஒரு தொடர் செயல்பாடாக கருதப்படுகின்றது. ஏனெனில் வேலையைப் பெறுவது மட்டும் அல்லாமல், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள், வாழ்க்கைத்தொழிலை மாற்றுதல், ஓய்வு பெரும் வாய்ப்புகள் ஆகியவை இதில் அடங்கிஉள்ளது. குறிப்பிட்ட சில இடைவெளிகளில் வாழ்க்கையில்தொழில் வளரிச்சியினை பற்றி திட்டமிடல் நல்ல பயனளிக்கும் அதுவே வெற்றிகரமான
வாழ்க்கைகு வழிவகுக்கும்.http://speedsays.blogspot.in
- Dr.எஸ். நாராயணராஜன் M.B.A. Ph.D., (நெல்லை கவிநேசன்) ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர்
நன்றி:-தினத்தந்தி & http://speedsays.blogspot.in
Filed under: Abu Adhil
நாம் குடிக்கும் டீயிலிருப்பது… மரத்தூளா, மஞ்சனத்தியா, குதிரை சாணமா?!
தேசியப் பானம் என்ற அளவுக்குத் தேநீர் கருதப் பட்டாலும், இன்று பெரும்பாலான இந்தியர்கள் பயன்படுத்துவது கலப்படத் தேயிலையைத்தான் என்கின்றன பல்வேறு சர்வேக்கள்.
ஏழைகளின் உற்சாக பானம், இப்படி பாஷாணமாக மாற்றப்படுவது எப்படி? இதோ சில பகீர் உண்மைகள்:
இலவம் பிஞ்சு: இலவம்பஞ்சுக் காயைப் பறித்து, காயவைத்து அரைத்து தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள். இதில் தயாரிக்கப்படும் தேநீர் அடர்த்தியாக, படு ஸ்ட்ராங்காக இருக்கும். பால் எவ்வளவு தண்ணீராக இருந்தாலும் தேநீர் ‘திக்’ காகவே இருக்குமாம்!
முந்திரிக் கொட்டை: முந்திரிக் கொட்டை பழமாகும் முன்னர் கடித்தால் வாய் புண்ணாகி விடும். அந்தக் கொட்டையின் தோலைக் காய வைத்து பொடியாக்கி, தேயிலைத் தூளுடன் கலக்கிறார்கள். நிறத்தைக் கூட்டுவதற்காக இதனுடன் சோடியம் கார்பனேட் ரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். சலவை சோப்புடன் சேர்க்கப்படும் ஆபத்தான ரசாயனம் இது!
மஞ்சனத்தி இலை – குதிரை சாணம்: மஞ்சனத்தி இலையைக் காய வைத்து அரைத்து, காய்ந்த குதிரைச் சாணத்துடன் கலந்து தேயிலையுடன் கலப்படம் செய்தால், மினுமினுக்கும் கலப்படத் தேயிலைத் தூள் ரெடி!
புளியங்கொட்டை: புளியங் கொட்டையை லேசாக வறுத்து, ரொம்பவும் மிருதுவாக அரைக்காமல் தேயிலைத் தூள் பதத்தில் அரைத்து, தண்ணீர் சேர்த்துக் காய வைத்து (அப்போதுதான் துவர்ப்பு தெரியாமல் இருக்குமாம்) தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள்!
மரத்தூள், தேங்காய் நார்: மலிவாக அல்லது இலவசமாக சில இடங்களில் கிடைக்கும் மரத் தூள்தான் கலப்படக்காரர்களின் முதல் சாய்ஸ். மரத் தூளுடன் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தும் ரசாயனத்தைச் சேர்த்து தேயிலைத் தூளுடன் கலக் கிறார்கள். இதுதவிர, டீக்கடைகளில் பயன்படுத்தி குப்பையில் போடும் தேயிலைத் தூளைச் சேகரித்தும் கலப்படத் தூளைத் தயாரிக்கிறார்கள்.ஓரிஜினல் தேயிலைத் தூளின் விலை ஒரு கிலோ 270 முதல் 310 வரை விற்கப்படுகிறது. ஆனால், கலப்படத் தேயிலைத்தூள் கிலோ 60-க்கே கிடைக்கிறது. பெரும்பாலான ரோட்டோர டீக் கடைகளில் நாம் அருந்துவது கலப்படத் தேநீர்தான். இதை அருந்தினால் சில ஆண்டுகளில் தோல் ஒவ்வாமை, செரிமானக் கோளாறு, அல்சர், மூட்டு வலி, கிட்னி பாதிப்பு, புற்று நோய் போன்றவை ஏற்பட நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
எப்படிக் கண்டுபிடிப்பது?
கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த நீரை ஊற்றி தேயிலைத் தூளை ஒரு சிட்டிகை விடுங்கள். உடனடியாகப் பொன் நிறமாக தண்ணீர் மாறினால் அது கலப்படத் தூள்!
எது ஒரிஜினல்?
தேயிலைச் செடியின் நுனியில் இருக்கும் மென்மையான இரட்டை இலை, அதன் நடுவில் இருக்கும் ஒரு மொட்டு, இவற்றை ஒட்டிக் கீழே இருக்கும் லேசாக முற்றிய இலை ஒன்று… இதைப் பறித்து சுமார் எட்டு மணி நேரம் மிஷினில் வாட்டி, ரோலரில் அரைத்தால் அதுதான் ஒரிஜினல் தேயிலைத் தூள். இதைக் குளிர்ந்த நீரில் கொட்டினால், நீரின் நிறம் மாற 10 நிமிடங்களுக்கும் மேல் ஆகும்.இந்தத் தொழிலில் இருக்கும் பெரும்பாலான வட மாநில புரோக்கர்கள்தான் கலப்படத்துக்குக் காரணம் என்கிறார்கள், தேயிலைத் தோட்ட அதிபர்கள்.
”ஒரிஜினல் தேயிலைத் தூளை நேரடியாக நாங்கள் விற்பனை செய்ய முடியாது. சிண்டிகேட் போட்டுக்கொண்டு கிலோ 30 ரூபாயில் இருந்து 60 ரூபாய் வரைக்கும் எங்களிடம் வாங்கி, மார்க்கெட்டில் 250 ரூபாய்க்கும் மேல் புரோக்கர்கள் விற்கிறார்கள். டீக்கடை வியாபாரிகளுக்கு ஒரிஜினல் டீத்தூள் விலை கட்டுப்படி ஆகாததால்தான், கலப்படத்தை நாடுகிறார்கள். அரசு நடவடிக்கை எடுத்து தேயிலைத் தூளுக்கு நியாயமான விலையை நிர்ணயித்தால், கலப்படத்தைத் தடுக்கலாம்” என்கிறார்கள்.உணவுப் பொருளில் கலப்படம் செய்து விற்றால், ஆயுள் தண்டனை வழங்கலாம் என்கிறது சட்டம். தேசியப் பானம் ஆன பிறகாவது, தேயிலைக் கலப்படத்தைத் தடுக்குமா அரசு?
நன்றி – விகடன்
–
அதிரையில் கந்தூரி ஊர்வலத்தில் வன்முறை
Filed under: Abu Adhil
தெரிந்த சவூதி அரேபியா.. தெரியாத பல விடயங்கள்.. சவூதி பற்றி நல்ல விடயங்களை நீங்களும் தெரிந்து கொள்ள..

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நாட்டைப் பற்றி ஒரு அபிப்ராயம் இருக்கிறது.
அது அவர்கள் நாளிதழ்கள் வாயிலாகவோ, நண்பர்கள் வாயிலாகவோ, இன்ன பிற ஊடக வாயிலாகவோ அறிந்தவை. பொதுவாக அமெரிக்கா என்றால் மனதிற்குள் அது ஒரு சொர்க்க பூமியாகத் தோன்றும்.
சவுதி அரேபியா என்றால், அது குறித்த எண்ண ஓட்டங்கள் உலக பார்வையில் தரக் குறைவாகவே இருக்கிறது. அது பல இடங்களில் தன்னுடைய சட்ட திட்டங்களிலும், மனிதாபிமானத்திலும் கடுமையான உலக விமரிசனத்துக்கு உள்ளாகியிருப்பது உண்மைதான் என்றாலும், சவுதி அரேபியா, தன் நாட்டின் பெருமையாக கொண்டுள்ள விடயங்களை, அதுகுறித்து நான் அறிந்த விடயங்களை மட்டுமே சில இங்கு பகிரப்பட்டுள்ளன.
பெரும்பாலான சவுதி அராபிய சட்டதிட்டங்களிலும் மற்ற நாட்டினனுக்கான நீதி முறைகளிலும் பல கருத்துகள் ஒவ்வாது என்பதை சொல்லிக்கொண்டு, சவுதி அரேபியாவின் வியக்கத்தக்க செய்திகளை நீங்கள் அறிய வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே படியுங்கள்.
*முஸ்லிம் ஒருவர் தன் வாழ்வில் ஒருமுறையேனும் புனிதப்பயணம் மேற்கொள்ள வேண்டிய புனிதத்தளமான மெக்காவும், மெதினாவும் இங்குதான் உள்ளது.
*உலகின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் கிடங்குகளை( world’s Second largest oil reserves) கொண்ட நாடாக இது உள்ளது. வெனிசுலா முதலிடத்தில் உள்ளது.
*கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவிற்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது மிக அதிகமான கச்சா எண்ணெய்( Worlds second largest oil export) ஏற்றுமதி செய்யும் நாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.
*worlds sixth largest natural gas reserves என்ற இயற்கைவாயு சேமிப்பில் உலகின் ஆறாவது இடத்தில் சவுதி உள்ளது.
*வளைகுடா நாடுகளில் அதிக பரப்பளவையும், அரபு நாடுகளில் அல்ஜிர்யாவிற்கு அடுத்த இடத்திலும் சவுதி உள்ளது.
*Abraj al bait towers இந்த ஹோட்டல்mekkah royal hotel tower என்றும் அழைக்கப் படுகிறது. இது பல உலக சாதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த ஹோட்டல் இவ்வாண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இவ்வாண்டு திறக்கப்படும் பட்சத்தில், tallest hotel என்ற பெருமையை அடையும்.
*Abraj al bait towers ல் உள்ள clock தான் உலகின் tallest clock tower என்ற பெருமையையும், largest clock face என்ற பெருமையையும் பெறுகிறது.இதன் சிறப்பு என்னவென்றால், 25 KM தொலைவில் இருந்து கடிகாரத்தைப் பார்க்கமுடியுமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!.
*உலகின் இரண்டாவது மிகப் பெரிய கட்டிடம் (World largest building) என்ற பெருமையை Abraj al bait towers அடைகிறது. இது குறித்து நீங்கள் அறிய விரும்பினால் இதை கிளிக் செய்யவும். http://en.wikipedia.org/wiki/Abraj_Al_Bait_Towers
*Worlds largest military funds spends என்பதில் சவுதி உலகில் ஏழாவது இடத்தில் உள்ளது. மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது.
*மன்னர் அப்துல்லா உலகின் மூன்றாவது வலிமை வாய்ந்த தலைவராகக் கருதப்படுகிறார். சீனா, அமெரிக்கா நாட்டின் presidents முதல் இரு இடங்களை முறையே பெற்றுள்ளதாக இவ்வாண்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
*அமெரிக்காவை ஆட்டிப் படைத்த ஒசாமா பின்லேடனின் சொந்த நாடு சவுதி. SBG (Saudi Binladan Group) என்ற கம்பெனி தான் சவுதியில் மிகப் பெரிய contracting company என்பது குறிப்பிடத்தக்கது.
*princess noura bin abdul Rahman university(PNU) , இதுதான் உலகின் மிகப் பெரிய பெண்களுக்கு மட்டுமான university.
*The world’s largest Automated People Mover (APM) train வசதி பெற்றுள்ள university ஆக PNU விளங்குகிறது. APM Railway யின் நீளம் 14 KM & In rush hour, 70000/HR பயணிகளை ஏற்றி செல்லுமளவுக்கு ரயில் வசதி செய்யப் பட்டுள்ளது என்றால் PNU University யைப் பற்றி நாம் வேறு என்ன சொல்ல வேண்டும்! சவுதி அரேபியா உலகின் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஐந்தாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
*13000 மில்லியன்/வருடம் (ஒரு கோடியே முப்பது லட்சம்), வெளிநாட்டிலிருந்து முஸ்லிம் மக்கள் மெக்காவிற்கு வந்து வழிபட்டு செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்ற மதத்தினர் மெக்கா மற்றும் மெதினா நகர எல்கைக்குள் செல்ல முடியாது. கடந்த ஆண்டு 2011 அரசு அறிக்கைப் படி, ஹஜ் பயணிகளாக மெக்கா வந்தவர்கள் எண்ணிக்கை 1828195.
*முகம்மத் பிறந்த புண்ணியத் தளம்தான் முஸ்லிம்கள் வழிபடும் இந்த மெக்கா.
*உலகின் மிகப் பெரிய மசூதிக்குரிய பெருமை, மெக்கா மசூதியையே சாரும்.
*ஆசியாவின் மிகச் சிறந்த university ஆக KSU(King Saud Univesity, Riyadh) 19 ஆவது இடத்திலும், உலகில் சிறந்த university வரிசையில் 200 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. அரபு நாடுகளின் மிகச் சிறந்த university ஆக KSU விளங்குகிறது.
*சவுதி அரேபியாவின் தேசிய விலங்காக ஒட்டகம் உள்ளது. ஒட்டகத்தை வளர்ப்பவர்கள் மிகப் பெரிய செல்வந்தர்களாகப் பார்க்கப் படுகிறார்கள்.
*கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஓரினச் சேர்க்கை, தீவிர வாதம், விபச்சாரம், போதைப் பொருள் தயாரித்தல் அல்லது கடத்தல், தேசப் பாதுகாப்பு, கடவுளுக்கு எதிராக விமர்சித்தல், இன்னும் சில விரோத செயல்களுக்கு மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்படுகிறது. குற்றங்களுக்கு கடும் தண்டனை என்பதை உபயோகிக்கும் உலக நாடுகளில் முதன்மையானது சவுதி.
*திரை அரங்குகள் இல்லாத ஒரே நாடாக சவுதி அரேபியா உள்ளது.
*பூங்காக்களைப் பொறுத்தவரை Familiy park and Bachelor park என்று தனித் தனியாகவே உள்ளது.
*உணவகங்களில் Familiy Restaurant இருக்கின்ற இடங்களில், இருக்கைகள் family க்குத் தனியாகவும், bachelor க்குத் தனியாகவும் உள்ளன.
*மேற்கூறிய கடைசி மூன்று விடயங்கள் பெரும்பாலோர் விரும்புவதில்லை என்றாலும் சவுதி அரசின் கட்டளைப் படி அவ்வாறே இயங்குகின்றன.
*தொழுகை நேரங்களில் அரசின் உத்தரவுப்படி அனைத்து கடைகளும் அடைத்து வைக்கப்படும்.
ஒரு சில மிகப் பெரிய ஷாப்பிங் மாலில் மட்டும் உள்ளே செல்ல அனுமதி உண்டு. விலை போடுவது என்பது கிடையாது. இறைவனுக்குப் பிறகு தான் வியாபாரம் என்பதைக் கடைபிடிக்கும் ஒரே இஸ்லாம் நாடாக சவுதி உள்ளது.
*King Fahd International Airport (KFIA) தான் உலகின் largest airport in the world ஆக உள்ளது.
*Saudi ARAMCO தான் உலகின் second largest public company ஆக உள்ளது. இது dammam ல் உள்ளது.
*Saudi ARAMCO உலகில் அதிக அளவு crude oil reserves ஐயும், உலகில் அதிக அளவு ஒரே நாளில் ஆயில் உற்பத்தி செய்யும் நிறுவனமும் சவூதியில்தான் உள்ளது. ஆயில் சம்பந்தமான 1oo pattern rights வைத்துள்ள saudi aramco, இங்குதான் உள்ளது.
*ஒரேநாளில் 12 millions/day அளவுக்கு SAUDI ARAMCO நிறுவனம் உற்பத்தி செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
*கெமிக்கல் உற்பத்தியில் SABIC SAUDI ARABIYA தான் பல பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக Ethlene glycol உற்பத்தியில் உலகில் இரண்டாமிடத்தையும், Poly ethlene தயாரிப்பில் மூன்றாமிடத்தையும், Poly propline, Poliyofins உற்பத்தியில் உலகில் நான்காம் இடத்தையும் தன்னகத்தே வைத்துள்ள, SABIC சவுதியில் தான் உள்ளது.
*Mono Ethlene Glycol உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் உள்ள SABIC தான் வளைகுடா நாடுகளின் மிகப் பெரிய கம்பெனியாக உள்ளது.
நன்றி:lakshmanaperumal
Source : http://www.madawalanews.com/news/vinotha-ulagham/1777
Filed under: Abu Adhil
கோழி மேய்ந்த முன்விரோதத்தில் 1 1/2 மாத கைக்குழந்தையை எதிர்வீட்டு பெண் கழுத்தை நெரித்துக் கொலை

ஒரு காலத்தில் அரிதாக இருந்த கொலைகள் இன்று அற்பமானதாக மாறிவிட்டது. எதற்கு கொலை செய்கிறோம் என்று கூட யோசிக்கும் அளவிலோ, மனிதனின் உயிரின் மதிப்பையோ கொலையாளிகள் எண்ணிப்பார்க்கக் கூட துணிவதில்லை. கோடிக்கணக்கில் பணம் சம்மந்தப்பட்ட விசயத்தில் நடைபெற்று வந்த கொலைகள், இன்று ஒரு பீடிக்கு கூட நடக்கும் அவலம். அதிலும் குறிப்பாக கோழி மேய்ந்த தகராறில் ஒரு பச்சிளம் பாலகனை கொன்ற பாதகியும் இந்த பாரதநாட்டில் வாழ்வது பெண்ணினத்திற்கு இழுக்காகும்.
கோழி மேய்ந்த முன்விரோதத்தில் 1 1/2 மாத கைக்குழந்தையை எதிர்வீட்டு பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார் என்று இன்று ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் சாலாமேடு விநாயகா நகரில் வசித்து வரும் உஸ்மான் அலியின், ஒன்றரை வயது ஆன் குழந்தையை, உஸ்மான் அலியின் எதிர்வீட்டை சேர்ந்த ஆதிலட்சுமி என்ற பெண்மணி கடத்திச் சென்று, குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து வீட்டு பின்புறமுள்ள முள்காட்டில் வீசியிருக்கிறாள். எதிரி வீட்டு குழந்தையாயினும் எடுத்துக் கொஞ்சும் இரக்கம் கொள்ளவேண்டிய இந்த பெண்ணின் உள்ளத்தில் ஏற்பட்ட இந்த இரத்தவெறிக்கு என்ன காரணம் என்று பார்த்தால், அற்பமான கோழி மேய்ந்த கதையாம்.
உஸ்மான்அலியின் வீட்டில் வளர்த்து வரும் கோழிகள் ஆதிலட்சுமியின் கூரைவீட்டில் மேய்ந்து கூரையை பிய்த்து அட்டகாசம் செய்து வந்ததாகவும் இது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது தான் இந்த கொலைக்குக் காரணமாம். பகுத்தறிவில்லா கோழிக்கு தன் வீட்டில் வந்து இரவில் அடையத் தெரியுமே தவிர, அடுத்த வீட்டில் போய் மேயக்கூடாது என்று தெரியுமா? இந்த அற்பமான விசயத்திற்கு ஆண்டாண்டு காலம் வாழவேண்டிய ஒரு அரும்பை, கரும்பை முறித்தது போன்று கழுத்தை முறித்து கொல்வதா? மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப மனிதர்களின் கருணையும் மாறுமோ? இந்தக் கொலையில் சம்மந்தப்பட்டதாக கூறப்படும் ஆதிலட்சுமிக்கு வழங்கப்படும் தண்டனை, இதயமற்ற அரக்கர்களுக்கு பாடமாக இருக்கவேண்டும்.
Thanks – Mugavai Abbas




