Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: ஐ.பீ.எஸ்(ஓ), டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பெரியபட்டணம்
சாதனைகள் பெண்களுக்கு தடையில்லை!
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
சுனாமி என்ற ஆழிப்பேரலை 2004ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26ந்தேதி தென்கிழக்கு ஆசிய கண்டத்தினை உலுக்கி நெய்தல் நகரங்களான கடற்கரை ஓரத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட தினமான 2010 டிசம்பர் திங்கள் 26ந்தேதி அன்று இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணம் என்ற முஸ்லிம்கள் வாழும் ஊரிலிருந்து இரண்டு படகுகளில் உல்லாசமாக இரண்டு படகுகளில் அருகில் உள்ள தீவினைப்;பார்க்க சென்ற சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் விபத்துக்குள்ளாகி 13 பேர்கள் பலியான செய்தி வெளியானது கண்டு அனைத்து உள்ளங்களும் அதிர்ச்சியில் உரைந்தன வென்றால் மிகையாகாது.
அந்தக் கோரச்சம்பவத்தினை ஆயும்போது கீழ்கண்ட காரணங்கள் தெரிந்தன:
1) படகில் சென்றவர்கள் உயிர் காக்கும் சாதனமாக லைப்போட் என்ற ரப்பர் டியூப்பினை அணியவில்லை.
2) படகின் சுமைக்கேற்ப பெண்களும், குழந்தைகளும் படகில் ஏற்றப்படவில்லை.
3) படகில் ஒரு பக்கமே பளுவான பெண்களும் மறு பக்கம் குழந்தைகளும் அமரச் செய்திருந்தது.
4) குழந்தைகள் உற்சாகத்தில் அலையினை கையில் தொட முனைந்து அவர்களுடைய பளு படகின் ஒரு பகுதியினை சார்ந்திருந்து சாய்ந்தது.
5) பெண்கள் குழந்தைகளின் இந்த விளையாட்டுச் செயலினை கட்டுப்படுத்தாதது.
6) பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நீச்சல் பழக்கமின்மை.
7) ஆபத்தான நேரத்தில் எப்படி உயிர் காப்பது என ஆண்களுக்கு தெரியாதது.
8) மற்றொரு படகில் சென்ற சில ஆண்களுக்கும் நீச்சல் தெரியாததால் மீனவர்கள் கரையிலிருந்து வேறொரு படகில் வரும் வரை விபத்தில் சிக்கியவர்களை காப்பற்ற இயலாதது.
இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படத்தான் செய்கிறது என்றாலும் கடற்கரை ஓரத்தில் வாழும் இஸ்லாமிய கிராமங்களில் வாழும் ஊர்களில் இப்படிப் பட்ட விபத்துக்கள் ஏற்படும் போது அதனை தடுக்க என்னன்ன வழிகள் என ஊர் ஜமாத்தார்கள் அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்வதுடன், ஆண்களும், பெண்களும் மற்றும் குழந்தைகளும் கட்டாயமாக நீச்சல் தெரிந்திர ஏற்பாடு செய்வது அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரர்களின் கடமையாகும் என்றால் மிகையாகுமா?
2004ஆம் ஆண்டு நடந்த சுனாமி அன்று என் கல்லூரித் தோழனும் பரங்கிப்பேட்டையினைச் சார்ந்த அலி அப்பாஸ் காரைக்காலில் சக தோழர்களுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது சுனாமி அலை வரும் போது அனைவரும் ஒரு மரத்தில் ஏறி தப்பிக்கும் போது நண்பன் அலி அப்பாஸ் மட்டும் மரமேர முடியாததால் அதில் பலியானான் என அறிந்து என் உள்ளம் இன்னும் வேதனையால் துடிக்கிறது. அதனைப்போன்று இந்த படகு விபத்தில் தன் அருமைக் குழந்தைகளையும், தாய்மார்களையும் விபத்தில் சிக்கி பரிதவிக்க விட்டு விட்டு இருக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகள் நிலை எப்படியிருநதிருக்கும் என ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். ஆகவே இது போன்ற விபத்துக்களை தடுக்க என்னன்ன வழிகள் என ஆராயந்து நடவடிக்கை எடுத்தால் கடற்கரை ஓர மக்களை சோக இருள் கவ்வாமல் இருக்குமல்லவா?
1) கண்டிப்பாக ஆண்கள் முதல் குழந்தைகள் வரை நீச்சல் பழகியிருக்க வேண்டும். நீச்சல் நீரிலிருந்து மனிதனை காப்பாற்றுவது மட்டுமல்ல மாறாக சிறந்த ஒரு உடற்பயிற்சியாகும். அத்துடன் எவ்வளவு பெரிய டென்சனில் இருந்தாலும் அரை மணிநேர நீச்சலுக்கு சென்று வந்தால் அந்த மன நெருக்கடி ஒரு நிமிடத்தில் பறந்தோடி உற்சாகம மேலோங்கும்;.
2) நீச்சல் செய்பவர்கள் மனதில் எதனையும் சாதிக்கலாம் என ஒரு எண்ணம் ஏற்படும். அதற்கு உதாரணமாக 26.12.2010 அன்று புதுவையில் ஒரு 38 வயது பெண்மனி செய்த சாதனையினை உங்களுக்குச் சொல்லலாமென நினைக்கிறேன். பாண்டிச்சேரி மாநிலம் வில்லியனூரினைச் சார்ந்த குடும்ப நடு வயது பெண்மனி ராணி(38) என்பவர் நீச்சல் தெரியாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று ஒரு சாதனை செய்ய வேண்டுமென நினைத்து நீச்சல் பயிற்சினை மேற்கொண்டார். ஆழிப்பேரலை நாளன்று பாண்டி முன்னாள் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் ஒரு நீச்சல் குளத்தில் தலையினை மேலே வைத்துக் கொண்டு கால்களை தரை நோக்கியும் ஆனால் தரையில் படாமலும், நீச்சலிடிக்காமலும் ஒரு கிளோ மீட்டர் தூரத்தினை காலை பத்து மணியிலிருந்து மதியம் ஒரு மணிவரை நடந்து சாதனை செய்துள்ளார் என்றால் பாருங்களேன் நீச்சல் சாதனை பெண்களுக்கு விதிவிலக்கல்ல என்பதினை இது காட்டவில்லையா?
3) சிலர் கேட்கலாம் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து உள்ளார்கள் அவர்களால் எப்படி நீச்சல் உடையில் நீந்த முடியுமென்று. இப்போது முஸ்லிம் பெண்களுக்கென உடல் அங்கங்கள் தெரியாது புர்கா வடிவில் நீச்சல் உடைகள் மேலை நாடுகளிலும், அரேபிய நாடுகளிலும் உள்ளன. நமது பெண்களுக்கும் அதனை வாங்கிக் கொடுத்து நீச்சல் பயிற்சி பெண் பயிற்சியாளர்களைக் கொண்டே பயிற்சி கொடுக்கலாம். சென்னை போன்ற நகரங்களில் பெண்களுக்கான தனி நேரங்கள் நீச்சல் குளங்களில் ஓதுக்கப்படுங்கின்றன. குளங்கள் உள்ள ஊர்களிலும். பேரிய கண்மாயல் குளிப்பவர்களுக்கும், ஆற்றங் கரையில் உள்ள முஸ்லிம் பெண்கள், சிறார்களுக்கு நீச்சல் பயிற்சி கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
4) சிலர் சொல்வார்கள் மீன் குட்டிகளுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கவா வேண்டும், அவர்களாக பழகிக் கொள்வார்கள் என்று அசட்டையாக. ஆனால் இது போன்று விபத்துக்கள் ஏற்பட்டால் அங்கு ஏற்படும் உயிர் பலிக்கு அவர்கள் மற்றவர்களை குறை சொல்லத்தான் அவர்களுக்குத் தெரியுமேயொழிய அந்த குறைகளை போக்க எடுத்த நடவடிக்கை என்ன என அவர்களுக்குத் தெரியாது.
ஆகவே வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் முஸ்லிம் ஊர்களில் ஏற்படாதாவாறு நடவடிக்கை எடுப்பது அனைவருடைய கடமையல்லவா சகோதர, சகோதரிகளே?
நன்றி : முதுகுளத்தூர்.காம்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: அபுதாபி, அமீரகம், இந்திய ஜனாதிபதி
இந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை
அபுதாபி : இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஐந்து நாள் அமீரக சுற்றுப்பயணமாக 21.11.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை அபுதாபி வருகை புரிந்தார்.
அபுதாபி வருகை புரிந்த இந்திய ஜனாதிபதியை அமீரக வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஷேக்கா லுப்னா அல் காஸிமி, அமீரகத்துக்கான இந்திய தூதர் எம்.கே. லோகேஷ், அமீரக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உற்சாக வரவேற்பளித்தனர்.
மேலும் விரிவான செய்திக்கு :
Patil is staying at the Intercontinental Hotel in Abu Dhabi. She is accompanied by a delegation of 52 senior Indian businesspeople and a media contingent of 25 journalists.
Abu Dhabi hopes to use the visit to enhance cooperation with India in the field of technology, especially information technology, a senior official of the Abu Dhabi Chamber of Commerce and Industry (ADCCI) told Gulf News on Sunday.
“India has great potential in technology and human resources at a world class level and the UAE is already utilising them; Patil’s visit can enhance such cooperation,” Khalfan Saeed Al Kaabi, the First Vice Chairman of ADCCI, said in an interview.
Patil will attend a business meeting organised by ADCCI at Emirates Palace hotel on Tuesday.
In 2009-10, trade between India and the UAE stood at $43 billion which made them the largest trading partners. Exports from India were worth $24 billion and imports from the UAE were worth $19 billion. These figures exclude trade in oil.
Al Kaabi said, “About the importance of the relations between both countries … I cannot trace back the relations … because it is centuries old.”
The interaction with the Indian business delegation can enhance the communication between both the countries. “The chamber will facilitate such communication and support the business interaction between both countries,” the official said.
As an investment destination, India will continue to be a safe and attractive country, he said.
Asked about any obstacles for trade with India, he said: “As a businessman, I have 30 years of business relations with India and I never felt any obstacles; they understand us very well and so we do.” About the prospect of any sort of free trade agreements between both countries, Al Kaabi said he needed more study to comments about the need of such steps.
Yousuf Ali M.A., a member of the board of directors of ADCCI, said: “I am sure the high level trade delegation accompanying the president will surely be impressed by the excellent business friendly environment prevailing here in the UAE.”
The local business community can also look forward to tapping the huge market of India with many potential areas of cooperation and investments, he said.
Itinerary
- Sunday: At 8pm, arrival in Abu Dhabi
- Monday morning: Official meetings
- 7pm: Addresses the Indian community at the Indian Social and Cultural Centre (ISC)
- Tuesday, 10am: Interaction with pupils at Abu Dhabi Indian School
- 11am: Inauguration of Indian Islamic Centre, Abu Dhabi
- 12 noon: Business meeting by Abu Dhabi Chamber of Commerce and Industry at Emirates Palace hotel
- 7pm: Launch Indian Workers’ Resource Centre at India Club, Dubai, during a reception for the Indian community hosted by M.K. Lokesh, Indian Ambassador to the UAE
- Wednesday: Official meetings in Dubai in the morning
- 6.15pm: Visit to Dubai Men’s College in Dubai Academic City
- Thursday, 10:30am: Inauguration of Indian Trade Exhibition Centre in Sharjah.
- 12.15pm: Business meeting with Dubai Chamber of Commerce and Industry
நன்றி : முதுகுளத்தூர்.காம்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: இந்நேரம்.காம், நூர்தீன், மன்னிப்பு
மன்னிப்பு!
( இந்நேரம்.Com-ல் மனம் மகழுங்கள் பகுதியில் நூருத்தீன் அவர்களால் பதியப்பட்டது )
“இனி ஜென்மத்துக்கும் அவனை மன்னிக்க மாட்டேன்.”
“செத்தாலும் சரி, அவன் முகத்தில் முழிக்க மாட்டேன்.”
“நான் செய்திருக்கிற காரியத்திற்கு என்னை நானே மன்னிக்க முடியாது.”
பரிச்சயமிருக்கிறதா? வீட்டுக்கு வீடு பழக்கப்பட்ட டயலாக் இது. மேற்படி வசனங்களில் உள்ள முக்கிய உள்ளர்த்தம் என்ன தெரியுமா? பிறரையோ அல்லது நம்மை நாமோ மன்னிக்க மறுக்கிறோம். மட்டுமல்லாமல்,
“எங்கோ தவறொன்று நிகழ்ந்துவிட்டது. அதை நிவர்த்திக்க வேண்டிய முயற்சி எதுவும் நான் எடுக்க முடியாது. கடந்த காலத்திலேயே வாழ்வேன். நடந்த தவறுக்கு யாரையாவது பழி சுமத்திக் கொண்டே இருப்பேன். அல்லது என்னை நானே பழித்துக் கொள்வேன்.”
இதுதான் மன்னிக்க மறுப்பதன் உண்மை. நம்மில் பலர் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மன்னிக்க மறுப்பதன் மூலம் பிறரையோ நம்மையோ ஒரு குற்ற உணர்வுடனேயே வைத்துக் கொள்கிறோம். மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் அது நமக்கு வசதியாக சொகுசாக இருக்கிறது. ஆனால் அது நாளுக்குநாள் நமக்கு அதிகப்படியான மனவேதனையை அளித்து – சுமந்து திரிகிறோம்.
இதில் மற்றொரு சிக்கலான வேடிக்கை ஒன்று உள்ளது.
தன் சகலையின் மனைவியினுடைய சகோதரியின் அப்பாவை தன்னால் மன்னிக்க முடியாதென்றால் அது தன்னுடைய பிரச்சனையல்ல, அது தன் சகலையின் மனைவியினுடைய சகோதரியின் அப்பாவின் பிரச்சனை எனும்படியான எண்ணம் சிலருக்கு உண்டு. உங்களுக்கும் உங்கள் மாமனார் மீது அப்படியொரு எண்ணம் உள்ளது என்றால் – மன்னிக்கவும். அது அவருடைய பிரச்சனையல்ல, உங்களுடைய பிரச்சனை!
“என்ன ஸார் இப்படிச் சொல்றீங்க? அவர் எத்தகைய அல்ப ஆசாமி தெரியுமா?” என்று அவர் உங்களுக்குச் சீர் அளித்த பைக்கிற்கு ஹெல்மெட் வாங்கித் தரவில்லை என்று உடனே என்னிடம் மல்லுக்கட்ட வரவேண்டாம். யோசித்துப் பாருங்கள். நீங்கள் அவரை மன்னிக்க மறுப்பதால் மனவேதனை அடைவது யார்? முதல் ஆளாக நீங்கள்தான். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நிகழ்வது என்ன தெரியுமா? நாம் யாரிடம் கோபம் கொண்டு மன்னிக்க மறுத்துக் கொண்டிருக்கிறோமோ அவர் அதை உணராவதராகவே இருப்பார். அதனால் அவர் தன்னளவில் “சோற்றைத் தின்றோமா, டிவியில் ஸீரியலைப் பார்த்தோமா” என்று சுகமாக வாழ்ந்து கொண்டிருக்க, மனதில் கிடந்து மாய்வது நீங்களாகத்தான் இருக்கும்.
உங்கள் அத்தையின் மைத்துனர் மாடியில் புதிதாய் அறையொன்று கட்டி, அதற்காக ஒரு புதுமனை புகுவிழா நடத்தி, உங்களைக் கூப்பிட மறந்துவிட்டார். ”எத்தகைய அவமதிப்பு? மனுஷரா அவர்? அவரை மன்னிக்கவே முடியாது,” என்று நீங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் பாதிப்பு யாருக்கு? அவருக்குத் தூக்கம் தொலையப் போகிறதா, வயிற்றைப் புரட்டப் போகிறதா, வாயில் கசப்புணர்வு ஏற்படப் போகிறதா? ம்ஹும். அவையனைத்தும் உங்களுக்குத்தான் நிகழ்ந்து கொண்டிருக்கும்.
உங்களுக்கு நீங்கள் முக்கியம், உங்கள் ஆரோக்கியம் முக்கியம், உங்கள் மன மகிழ்வு முக்கியமென்றால், அவரை மன்னிக்க வேண்டும். ஏன்? அவருக்காக அல்ல. உங்களுக்காக. ஒருவரின் உடல் நலக்குறைவிற்கு அவரது பிழை பொறுக்கா மனமும் ஒரு முக்கியக் காரணமாய் அமையும்.
பொதுவாய்ப் பிறருடைய குற்றங்குறைகளைப் பெரிதுபடுத்தி, உங்களுடைய மன வேதனைக்கு அவரைக் குற்றவாளியாக்க நீங்கள் விரும்பினால் என்னவாகிறது தெரியுமா?
நீங்கள் உங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறீர்கள் என்றாகிறது.
பிறரைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பது நிலைமையை மோசமாக்குவதைவிட என்ன பலனைத் தரும்? மாறாய்க் குறை சொல்வதை நிறுத்திக் கொண்டால் மட்டுமே மேற்கொண்டு ஏதாவது செய்து நிலைமையைச் சீராக்க இயலும். அதனால் பிறரைக் குறை சொல்லிக் கொண்டிருப்பது – பிரச்சனைகள் எதையும் தீர்க்க விரும்பாமல் தீர்ப்பதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்க விரும்பாமல் இருக்க உதவும் கெட்ட போதை வஸ்து ஆகும்..
இதைப் படித்துவிட்டு, “என் உறவிலேயும் மன்னிக்க முடியாத சில சமாச்சாரம் நடந்து விட்டது. இங்கு எழுதியுள்ளது புரிவதைப்போல் தெரிகிறது. சரி ஸார். போகட்டும் மன்னித்து விடுகிறேன், ஆனால் ஒனறு, நடந்ததை என்னால் மறப்பது என்பது மட்டும் முடியாது,” என்று காஞ்சிபுரத்திலருந்து சுரேஷ் மின்னஞ்சல் அனுப்பலாம்.
சுரேஷ் என்ன சொல்கிறாரென்றால், “நான் கொஞ்சூண்டு மன்னித்துவிடுகிறேன் ; மிச்சத்தை மனதில் ஓரமாய் வைத்துக் கொள்கிறேன்; பின்னர் ஏதாவது சந்தர்ப்பத்தில் சொல்லிக்காட்ட அவை தேவைப்படும்.”
மன்னிக்கவும் சுரேஷ். உண்மையாய் மன்னிப்பதென்பது நம் அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வதுவே! “மன்னிப்போம், மறப்போம்.” அவர்களுக்கு எப்படியோ இதில் நமக்கு உண்மை இருக்கிறது. மன்னிப்பதென்பது பழையதை மறப்பதுமாகும். அதுவே மேன்மை.
யாரிடம் தவறில்லை? நாமெல்லாம் வாழ்க்கையை எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? கற்றது, பெற்றது என்றதன் அடிப்படையில் தெரிந்து கொண்ட அளவு சிலாக்கியமாய் வாழ முயன்று கொண்டிருக்கிறோம். அப்படி வாழும் வாழ்க்கையில் பல தவறுகள் இழைக்கிறோம்; தவறான தகவல்களின் அடிப்படையில் சில காரியங்கள் ஆற்றுகிறோம், சில சமயம் முட்டாள்த்தனமான காரியங்கள் செய்கிறோம். யோசித்துப் பார்த்தால் அவையனைத்தையும் நாம் உணர்ந்தே செய்திருக்கப் போவதில்லை. நம் வாழ்க்கை சிறப்பாய் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செய்திருப்போம். கண்ணைத் திறந்து கொண்டே மலையிலிருந்து கிழே குதிப்போமா என்ன?
பிறந்த குழந்தை கண்ணைத் திறந்த நொடியிலேயே, “இதோ பூமிக்கு வந்துவிட்டேன். நான் முடிந்தளவு எனது வாழ்க்கையைச் சொதப்பிக் கொள்ளப் போகிறேன்” என்று தீர்மானம செய்து கொண்டு பிறப்பதுமில்லை; வளர்வதுமில்லை. அந்தந்தத் தருணங்களில் நமக்குள்ள மன முதிர்ச்சியினாலேயே வாழ்வில் சில தவறுகள் நிகழ்ந்திருக்கும்.
ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் கற்றுக் கொண்டது, வீட்டில் பெரியவர்கள் சொன்னது, மருத்துவர்கள் உபதேசித்தது என்ற தகவல்களின் அடிப்படையில் தம் குழந்தைகளை வளர்க்கிறார்கள். நாம் வளர்ந்த பிறகு நமக்குப் பிடித்தவகையில் நம்மைப் பெற்றவர்கள் வளர்க்கவில்லை என்று கோபித்துக் கொள்ள முடியுமா? அதற்காகப் பெற்றவர்களை மன்னிக்கவே முடியாது என்று தீர்மானித்துக் கொண்டு, “உங்கள் வளர்ப்பு சரியில்லை என்பதை உலகத்துக்கு நிரூபித்துக் காட்டுகிறேன் பார்,” என்று தறுதலையாக, கிரிமினலாக வாழ்ந்தால் என்னாவது?
புரிந்து கொள்ளவேண்டியது என்ன? பிறரைக் குறை சொல்வதென்பது பிரச்சனையைத் தீர்க்காது. ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் அது நடந்து முடிந்துவிட்டது. சரி அடுத்து ஆகவேண்டிய நல்லதைப் பார்ப்போம் என்று நகர வேண்டும். தீர்ந்தது விஷயம்.
மனதிற்குள் அதையே அரைத்துக் கொண்டிருந்தால் நோய் தான் மிஞ்சும்.
அதெல்லாம் இருக்கட்டும்; என் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக மற்றவர் எனக்கிழைத்த அநீதியை, அக்கிரமத்தை, அட்டூழியத்தை நான ஏன் மன்னிக்க வேண்டும்? என்று கேள்வி எழலாம். நடந்த அநீதி, அக்கிரமம், அட்டூழியம் என்பதெல்லாம் கிரிமினல் விஷயங்களாக இருந்தால் அது வேறு கதை. நீங்கள் வக்கீல் வீடடிற்கு அவருடைய ஊதியத்தை பையில் எடுத்துக் கொண்டுபோய்ப் பேச வேண்டி/யிருக்கும்/ய விஷயங்கள். நாம் இங்கு சொல்ல வருவது வேறு.
சமூக வாழ்வில் மன்னிப்பு என்பது அற்புதமான செயல். நீங்கள் ஒருவரை உள்ளார்ந்து மன்னிக்க முற்பட்டுவிட்டால் உங்களிடம் ஒரு மாற்றம் ஏற்படும். மாற்றம் ஒரு தொற்று வியாதி. உலகளவில் பாடாவதி ஸ்டைலுக்கும் ஆபாச ஆடையலங்காரத்திற்கும் அது ஒரு காரணி. இங்கு உங்கள் மாற்றம் நல்ல வைரஸ்.
மன்னிப்பு மனதில் தோன்றியதுமே உங்கள் ஆத்திரம் தணிகிறது. உங்களிடம் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. நீங்கள் உங்கள் எதிராளியிடமும் உங்களுடைய நடவடிக்கையை மாற்றிக் கொள்கிறீர்கள். அடுத்து அவரும் அதைப் போல் உங்களிடம் அவர் அறியாமலேயே இயல்பாய் மாற ஆரம்பிப்பார். நாம் ஒரு விஷயத்தை ஆரோக்கியமான கண்ணோட்டத்தில் அணுக முயற்சி எடுத்துவிட்டாலே போதும், மற்றவர்கள் நம்முடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மாறுவதைக் காணலாம்.
இதுவரை கண்டது பிறர் நமக்கிழைத்த தவறுக்கு அவர்களை மன்னிப்பது.
நாம் நம்முடைய தவறுக்கு நம்மை வருத்திக் கொள்வதும் நடக்கும். எனவே நம்மை நாமே மன்னிப்பதும் முக்கியம். நம்மை நாமே எப்படி வருத்திக் கொள்கிறோம்?
நம்முள் சிலர் சுயபச்சாதாபத்தில் தங்களுடைய தவறுக்குத் தம்மையே தண்டித்துக் கொள்வதாகக் கருதித் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தம் மனதை வருத்தி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பார்கள். அத்தகைய நடவடிக்கை சிறிதாகவும் இருக்கலாம்; பெரிதாகவும் இருக்கலாம்.
· சிலர் தின்று கொழுத்து உடலைக் கெடுத்துக் கொள்வார்கள்.
· சிலர் திண்ணாமல் உடல் வருத்தி மெலிவார்கள்.
· சிலருக்கு மொடாக் குடி.
· சிலர் திட்டமிட்டுத் தங்களது உறவைத் துண்டித்துக் கொள்வார்கள்
· சிலருக்கு வறுமையில் கிடந்து மடிவோம் என்று சங்கல்பம்
· சிலருக்கு ஆரோக்கியத்தை அழித்துக் கொள்வது என்று ஆனந்தம்
இதற்கெல்லாம் அவர்களுடைய ஆழ்மனதில் ஒரு காரணம் ஒளிந்து கொண்டிருக்கும். “நான் படு கேவலமானவன்,” “நான் மோசமானவன்,” “நான் ஆரோக்கியமாய், மகிழ்வாய் வாழ லாயக்கற்றவன்.”
உலகில் பல வியாதியஸ்தர்களுக்கு “தாங்கள் ஆரோக்கியமாய் வாழ அருகதையில்லை” என்ற குற்ற உணர்வு உள்ளது என்று புள்ளிவிவரம் கூறுகிறதாம்.
நீங்கள் உங்களையே குற்றம் சொல்லி, மன மகிழ்வைத் தொலைத்து விடுவதால் என்ன பயன்? மேலும் ஓரிரு வருடங்களுக்கு உங்கள் குறைகளையே நினைத்து நீங்கள் அழுது கொண்டிருந்தால் எல்லாம் சரியாகி விடுமா? அப்படிப் பார்த்தால் ஓட்டு போட்ட குற்றத்திற்காகவே அவரவரும் அழுது மாய வேண்டியதுதான்.
முதலில் நீங்கள் உங்களை மன்னித்து, நல்லதொரு குப்பைத் தொட்டியாய்ப் பார்த்து உங்களின் குற்ற உணர்வைத் தூக்கி எறிந்து விடவேண்டியது தான். அது அவ்வளவு எளிதன்று என்று நீங்கள் சொல்லலாம். ஸார் இது உங்கள் வாழ்க்கை. அதற்காகச் சற்று கடின முயற்சி எடுப்பதில் தப்பே இல்லை.
மனைவி, கணவன், மாமனார், மாமியார், எதிர்வீட்டுக்காரர், பால்காரர், வானிலை அறிக்கை வாசிப்பவர் என்று ஒவ்வொருவரையும் குற்றம் சொல்லிக் கொண்டேயிருந்தால் அது பிரச்சனையை எவ்விதத்திலும் தீர்க்க உதவாது. வராத மழைக்காகக் குடை எடுத்துக் கொண்டு செல்ல நேர்ந்திருந்தாலும் பிறருடைய நக்கல் சிரிப்பை உதாசீனப்படுத்திவிட்டு வானிலை அதிகாரியை மன்னித்து விடுங்கள்.
நன்றி: நூருத்தீன், இந்நேரம்.Com
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: அணிவகுப்பு, சுதந்திரம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப், paalaivanathoothu
பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகுப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்ஆகஸ்ட் 15, 2010 சுதந்திர தினத்தினை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மேட்டுப்பாளையத்தில் சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கு கொள்வதற்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரங்களுக்கிடையே மேட்டுப்பாளயத்தில் உள்ள மர்ஹும் மீரன் திடலில் சரியாக 3.00 மணியளவில் பரேட் லீடர் பக்ரூதீன் தலைமையில் 1000 வீரர்கள் கொண்ட அணிவகுப்பு தொடங்கியது. பேண்ட் வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு வீரர்கள் கம்பீரமாக அணிவகுத்து சென்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தயாவின் மாநில தலைவர் மு.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாலை 3.55க்கு கையில் இந்திய தேசிய கொடி ஏந்திய ஆபிஸர் அணிவகுப்பு நடைபெற்றது. 3.55 மணிக்கு பேண்ட் டெமோ நிகழ்ச்சியுடன் சுதந்திர தின அணிவகுப்பு நிறைவடைந்தது. மாலை 4.00 மணிக்கு ஒற்றுமை கீதம் முழங்க பொதுக்கூட்டம் துவங்கியது. பொதுக்கூட்டத்தின் துவக்கமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் சுதந்திர தின உறுதிமொழி மொழிந்தார் அதனை அனைவரும் வழி மொழிந்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விண் டிவி “நீதியின் குரல்” முனைவர் சி.ஆர்.பாஸ்கரண் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அதன் பின்னர் மாநில பொதுச் செயலாளர் ஏ. அஹமது ஃபக்ரூதீன் அவர்கள் உரையாற்றினர் அவர் தனது உரையில் “நாம் வாழக் கூடிய இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர் நமது நாட்டை ஆக்கிரமித்து வைத்த சமயத்தில் அதனை எதிர்த்து போராடி, உரை நிகழ்த்தி, ஆர்ப்பாட்டங்கள் செய்து பல்வேறு நிகழ்வுகளை ஏற்படுத்தி சுதந்திரம் கிடைக்கப்பெற்றோம். அன்று இதனை செய்தவர்கள் ஆங்கிலேயர் பார்வையில் தீவிரவாதிகளாக பார்க்கப்பட்டனர். இன்று அவ்வாறு சுதந்திரம் கிடைக்க பெற்ற நமது இந்தியாவில் ஆளுகை, ஆட்சி, நீதி, கடமை என்ற பெயர்களில் அநியாயங்களும், ஊழலும் நிகழக்கூடிய சமயங்களில் அதனை சுட்டிக்காட்டி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்கள் அனைவரும் இவர்களின் பார்வையில் தீவிரவாதிகளாக பார்க்கப்படுகின்றனர். அதனிலும் முதன்மையாக இருப்பவர்கள் என்ற பெருமை பாப்புலர் ஃப்ரண்டுக்�கே உரித்தாகும். இந்த ரீதியில்தான் அண்மையில் பல சம்பவங்கள் நமக்கு எதிராக நடைபெற்று கொண்டிருக்கின்றன. இவை அனைத்திற்கும் பின்பு இருப்பது ஒரே சதிதான். அது ஃபாஸிசத்தால் உருவாக்கபட்டதேயாகும். அதனால் தான் அண்மையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகஸ்ட் 9 அன்று இந்தியா அளவில் ‘Save India Day’ என்ற ஒரு பிரச்சாரத்தை கையிலெடுத்தது. அது “ஃபாஸிசத்தை எதிர்ப்போம், தீவிரவாதத்தை வேரருப்போம்” என கூறி இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளையும் அதற்கு பின்னால் இருக்கும் ஹிந்துத்துவ சதியை மக்களுக்கு தெரியும் வகையிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டோம். குண்டு வைத்தவனையெல்லாம் வீதியில் உலாவவிட்டு விட்டு இதனை கண்டிக்கக்கூடிய பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் மீது 153A சட்டத்தின் கீழ் தேசத்தில் அமைதியை குலைக்கிறார்கள் என்ற வழக்கை போடுகிறார்கள் என்றால் இவர்களை இயக்கும் அதிகாரத்தினர் யார்? என்ற கேள்வி எழுகிறது.” என்று பேசினார். பின்னர் உரையாற்றிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் ஓ.எம்.ஏ.ஸலாம் அவர்கள் தனது உரையில் “நாட்டின் சுதந்திரத்தை காப்பதில் நமது உறுதிப்பாட்டை புதுப்பித்துக் கொள்வதற்கு சரியான நாள் இந்த சுதந்திர தின நன்னாள். வெளியிலிருந்து அமெரிக்கா தலைமையிலான காலனி ஆதிக்க சக்திகளாலும் உள் நாட்டில் ஹிந்துத்துவ சக்திகளாலும் நாடு அச்சறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறது. முஸ்லிம்களும் தலித்துகளும் அச்சத்தினாலும் அடக்குமுறையாலும் தங்கள் அடையாளத்தை தொலைத்தும் வாழ்ந்து வருகின்றனர். அதிகார வர்கத்தினர் வேண்டுமென்றே இவர்களை நசுக்கி வருகின்றனர். அதிகாரத்தை விட்டும் இவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். முஸ்லிம்களை வலிமைப்படுத்தும் முயற்சிகள் அரசாங்கத்திற்கு கவலையளிக்கிறது. பாப்புலர் பிரண்டிண் சுதந்திர கொண்டாட்டத்தை நடத்துவதை கூட தடுத்து நிறுத்த சில சக்திகள் முயற்சித்து வருகின்றது. சமுதாயத்தை வலிமைப்படுத்தி இந்திய அரசியலின் மைய நீரோட்டத்தில் சங்கமிக்கச் செய்வதில் நாம் உறுதியுடன் உள்ளோம்.” என்று கூறினார். அதனை தொடர்ந்து நம் நாடு சுதந்திரமடைவதற்காக போராடிய சுதந்திர போராட்ட தியாகிகளான திரு.மாரியப்ப தேவர், ஜனாப். தஸ்தகீர் மற்றும் திரு. ஆறுமுகம் பிள்ளை ஆகியோர்களை கவுரவிக்கும் வண்ணம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. வின் டிவி “நீதியின் குரல்” முனைவரான திரு. சி.ஆர்.பாஸ்கரன் அவர்களுக்கு மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னாவும், மூத்த வழக்கறிஞர் மற்றும் தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு (NCHRO) தலைவரான பவானி பா.மோகன் அவர்களுக்கு மாநில பொதுச் செயலாளர் அஹமது ஃபக்ரூதீனும் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்கள். அதனை தொடர்ந்து வின் டிவி திரு சி.ஆர்.பாஸ்கரன் சிறப்புரையாற்றினார்கள். முடிவில் 5.45க்கு பாப்புலர் ஃப்ரண்டிண் கோவை வடக்கு மாவட்ட தலைவர் ஏ.எஸ்.ஷபிக் அவர்கள் நன்றி கூறினார்.மாலை 5.50க்கு தேசிய கீதம் இசைக்க நிகழ்ச்சி நிறைவுற்றது அதனைத் தொடர்ந்து நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. paalaivanathoothu ஷேக் அப்துல் காதர் |
Filed under: Uncategorized | குறிச்சொற்கள்: அமீரகம், அமீரகம் தோப்புத்துறை, வெளிநாடு, ஷார்ஜா
ஷார்ஜாவில் பேரீட்சை திருவிழா
மே 15 ல் துவங்கும் இவ்விழா ரமலான் மாதம் வரை நடைபெறும். பேரிட்சம் பழம் ரமலான் மாத்த்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. நபி பெருமானார் ( ஸல் ) அவர்களது வழிமுறையினைப் பின்பற்றி இஸ்லாமியர்கள் நோன்பினை பேரிட்சையை வைத்து நிறைவு செய்கின்றனர். இதற்குக் காரணம் பேரீட்சை அதிக சக்தியைக் கொடுக்க்க்கூடியது.
மூன்று வருடங்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட இவ்விழா விவசாயிகள் பேரிட்சையை சந்தைப்படுத்துவதற்குரிய தளமாக பயன்படுத்தப்பட்ட்து. பொதுமக்களது ஆர்வத்தின் காரணமாக இவ்விழாவை வருடந்தோறும் ஒரு பெரும் விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்ட்து.
அமீரகத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பேரிட்சை வகைகள் உள்ளன. அவற்றில் முக்கியமான பர்ஹி, களாஸ், லூலூ, கிஸ்தவி, கினைஸி, நாகல் உள்ளிட்டவையாகும்.
தகவல் உதவி : முஸ்லிம் செய்தி நிறுவனம் ( எம்.என்.ஏ. )
Filed under: Uncategorized
வறுமையை வென்ற நெல்லை மாணவி
நெல்லை: கீழ் நடுத்தரக் குடும்பத்துப் பின்னணி, தந்தையின் திடீர் மறைவு, கிராமத்து வசதியில்லாத பள்ளி என பல குறைகள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி, சிறப்பாக படித்து சாதனை படைத்துள்ளார் நெல்லை மாணவி ஜெசிமா சுலைஹா.
பிளஸ்டூ தேர்வில் மாநில அளவில் 3வது ரேங்க்கைப் பெற்றுள்ளார் சுலைஹா.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அமலி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்தவர் சுலைஹா.
பிளஸ்டூவில் 1183 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். சாதனை இவருக்குப் புதிதல்ல, பத்தாவது வகுப்பில், 489 மதிப்பெண்களுடன் 2வது ரேங்க் பெற்றவர் சுலைஹா.
தனது சாதனை குறித்து சுலைஹா கூறுகையில், தந்தை சையது சம்சுதீன் அம்பாசமுத்திரம் பஞ்சாயத்து யூனியனில் மேலாளராக இருந்தார். எனக்குத் தங்கை உண்டு. இருவரும் நன்கு படிப்போம். நன்கு படிக்குமாறு எனது தந்தை ஆர்வம் கொடுப்பார்.
நான் 9வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது திடீரென எனது தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இதனால் குடும்பம் அதிர்ச்சியில் மூழ்கியது.
இருப்பினும் பத்தாம் வகுப்பு தேர்வை மனதில் கொண்டு சிறப்பாக படித்து 489 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்தேன்.
தொடர்ந்து எனது தந்தையின் நினைவு என்னுள் இருந்து கொண்டே இருந்தது. அவர் என்னுடன் இருப்பது போலவே உணர்வேன். இந்த உணர்வுடனேயே பிளஸ் 2 தேர்விலும் சிறப்பாக படித்தேன். இப்போது இந்த ரேங்க் கிடைத்துள்ளது.
வீட்டில் டிவி கிடையாது. பொழுது போக்கு அம்சங்களையும் நான் விரும்புவது இல்லை. படிப்பு மட்டுமே எனக்கு பிடிக்கும். சுய முன்னேற்ற நூல்களை அவ்வப்போது படிப்பேன்.
எனது தாயார் ரேஹானுக்கு 4 மாதங்களுக்கு முன்புதான் ஆசிரியை வேலை கிடைத்தது. இதற்காக அவர் சென்னை செல்ல நேரிட்டது. எனவே எனது பாட்டி பாத்திமா எனக்கு உறுதுணையாக இருந்தார்.
மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக தற்போது சென்னை வந்துள்ளேன். டாக்டராகி மக்களுக்கு பணியாற்றுவேன். நான் படித்த அமலிப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் என் தங்கை சப்னம் சாஜிதாவும் என்னைப்போல ரேங்க் பெறுவாள் என்றார் சுலைஹா.
Filed under: Uncategorized | குறிச்சொற்கள்: அபுதாபி, அமீரகம், அமீரகம் தோப்புத்துறை, அறிவிப்பு, ஓட்டுரிமை, கருத்தரங்கு, கல்வி செய்தி, துபாய்
EIFF – அபுதாபியில் நடைபெற்ற வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை பற்றிய கருத்தரங்கு

என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்டங்களாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.
வேலையில்லாத சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.
வேலையில்லாத சிறுபான்மையின் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மையின் இளைஞர்கள் பயிற்சிபெற தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தமிழக அரசின் நிதி உதவியோடு கீழ்கண்ட இலவச திறன் வளர்ச்சி பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
1. Hardware and Networking ,2 C, C++ 3,DTP, 4,Tally, with MS office
இப்பயிற்சி கீழ்க்காணும் இடங்களில் அளிக்கப்பட உள்ளன,
சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருவண்ணாமலை, திருவள்ளுர், பெரம்பலூர், கரூர், ஈரோடு, அரியலூர், தேனி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகர்கோவில், விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி, சிவகங்கை,
இராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, தாராபுரம், விருத்தாச்சலம், சிதம்பரம், திண்டிவனம், மார்த்தாண்டம், தக்கலை, திருச்செந்தூர், நாசரேத், கோவில்பட்டி, ஆரணி, செய்யார், போளுர், செங்கம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், ஆத்தூர், இராசிபுரம், ஆற்காடு, வாலாஜாபேட்டை, குடியாத்தம்,
பேரணாம்பட்டு, அரக்கோணம், பள்ளப்பட்டி, அரவங்குறிச்சி, குளித்தலை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், இளையாங்குடி, தேவக்கோட்டை, திருவெறும்பூர், திருச்செங்கோடு, நாமக்கல், ஆண்டிப்பட்டி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, பூந்தமல்லி,கூத்தாநல்லூர், பர்க்கூர்,
தர்மபுரி, ஓசூர், பொள்ளாச்சி, திருப்பூர், மேலப்பாளையம், விருதுநகர், கடலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகப்பட்டிணம், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஊட்டி, புளியங்குடி, கடயநல்லூர், தென்காசி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, குன்ணூர், மேட்டுப்பாளையம்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாநகரங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
5. Multimedia @ Animation
6. Dot.net (.net)
இப்பயிற்சியில் சேர்வதற்குக் கீழ்கண்ட தகுதிகள் இருத்தல் வேண்டும்.
1) பெற்றோர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1,00,000/லிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
2) மாணவ/மாணவியர் சிறுபான்மை வகுப்பைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
(இசுலாமியர்கள், கிருஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சீயர்கள்)
சமர்ப்பிக்கப்பட்ட வேண்டிய ஆவணங்கள் (நகல்கள் மட்டும்)
1) சாதிச் சான்றிதழ் நகல்
2) குறைந்த பட்சம் 10லிஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் அதற்குமேல் படித்திருப்பின் அதற்குரிய நகல்களை இணைக்கலாம்.
3) வருமான சான்றிதழ் நகல்
4) பள்ளி/ கல்லூரி மாற்றுச் சான்றிதழ் நகல்.
பயிற்சி அளிக்கப்படும் விவரங்கள்
CSC ComputerEudcation(தொலைபேசி எண் Chennai 044 – 25393783, 65698566) மூலம் மேற் குறிப்பிட்ட எல்லா 92 இடங்களிலும்.
Jayaram InfoTech
(தொலைபேசி எண், 98421 58228, 9894288350) மூலம் அரியலூர், பெரம்பலூர், நாகபட்டிணம், கோயம்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில்.Students Software training (தெலைபேசி எண், 98847 58845) மூலம் தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், நாமக்கல், நாகபட்டிணம் (ம) மதுரை ஆகிய இடங்களில்.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவ/மாணவியர்கள் மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்திடம் உடனே சேர்ந்து பயிற்சி பெறலாம்.
Filed under: பொட்டி தூக்கும் பொழப்பு...
இதை எழுத காரணமாக் இருந்தது, உண்மையான சம்பவங்கள், வாழ்கையை தொலைத்தவர்களின் பெருமூச்சு, இன்னும் ஒருமுறை அந்த இளமை வாராதா மற்றுமொருமுறை தான் யார் என்று இந்த சொந்தபந்தங்களுக்கு காட்ட மனதுக்குள் சவால்களை சவ அடக்கம் செய்த பலரின் மனக்குமுறல்.
விரல் விட்டு [அல்லது விரல் விடாமல்] எண்ணக்கூடிய சிலபேரைத்தவிர நிறைய பேர் நமதூரில் மானத்துக்கு அஞ்சி மெளனமாக தன் வறுமையை மறைப்பதை நான் பார்த்திருக்கிறேன்
ஏன் இந்த சமுதாயம் இப்படி வெளிநாட்டில் கடுங்குளிரிலும் [ சமயங்களில் மைனஸ் டிகிரியில்] கடும் வெயிலிலும் [உம்ரா போனபோது ஒரு 10 ஹேர்ட்ரய்யரை முகத்துக்கு நேராக பிடித்தது போல் உணர்ந்தேன்]..இப்படி கஷ்டப்படுகிற சமுதாயமாக மாற்றப்பட்டது என்று பார்த்தால், அந்த உண்மைக்கு பின்னால் பலர் காரணம் என எனக்கு தோன்றுகிறது.
இது காலாகாலமாக வெளிநாட்டில் குப்பை கொட்டும் நம்மடவர்களைப்பற்றிய சிந்தனை. ஏன் இப்படி’பொட்டி தூக்கும்” என்று எழுதினேன் என்றால்..அப்படித்தான் போய்விட்டது நம் வாழ்க்கை. ஊருக்கு போகும்போது பார்த்து, பார்த்து வாங்குவது..சாப்பிடாமல், ஒரு கையில் செல்போன், மறு கையில் தன்னை உருக்கி சம்பாதித்த பணம்..பொருள்களை கட்டி அடுக்கியபின் வரும் கலைப்பு[முன்பெல்லாம்..ஊர்த்தபால் தான் ரெபரென்ஸ்]
- திருநெல்வேலி மாவட்டங்களில் windmill பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து கொஞசம் டீசன்ட் வாழ்க்கை நடத்தும் மத்தியதர விவசாயமக்கள் ஏன் வெளிநாட்டை நம்பவில்லை. ?
- வேற்று இனத்தவர்கள் எப்படி தொடர்ந்து அரசு வேலைகளில் 2, 3 சந்ததியினர் என தொடர முடிகிறது..?
- ஒரு சின்ன தோப்பு / ஒன்றிரண்டு குடும்ப கல்யாணம் / இடையில் வரும் மருத்துவ செலவுக்குள் மட்டும் எப்படி என் ஊர்மக்கள் நொந்து போகிறார்கள்?
ZAKIR HUSSAIN
Filed under: Uncategorized | குறிச்சொற்கள்: அரசியல், இந்தியா, கல்வி செய்தி, Editorials, India, Kalvi
வேலையே நீ முஸ்லிம்களின்
எட்டாக்கனியா?
( டாக்டர் ஏ.பீ.முகம்மது அலி,பி.எச்.டி, ஐ.பி.எ°(ஓ)
தேசீய வேலைவாய்ப்பு நிறுவன ஆய்வின்(என்.எ°.எ°.ஓ) 2000-2005 ஆண்டுக்கான அறிக்கையின்படி பட்டப்படிப்பு பெற்ற 15 சதவீதம் மு°லிம் இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர் என்ற அதிர்ச்சி மிகு தகவலை அளித்துள்ளது. ஆனால் இந்து பட்டதாரிகள் 7 சதவீதம்த்hன் வேலை கிடைக்காமல் உள்ளனர். இன்னொரு அறிக்கையில் ஒரு மதத்தினர் மற்ற மதத்தினருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதில்லை என்ற தகவலையும் கூறுகிறது.
அதே போன்று மேல்நிலை பள்ளி கல்விக் கற்ற 48 சதவீதம் இந்துக்கள் வேலையில் உள்ளனர். ஆனால் மு°லிம் 10 சதவீதம் தான் என்பது அதிர்ச்சியாக உள்ளது.
மாண்புமிகு பிரதமர் 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் பேசுகையில் மு°லிம்களுக்கு பொதுத்துறையில் இருப்பது போல் தனியார் பெரிய தொழிற்துறையிலும் மு°லிம்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். 2009 வருடம் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய தனியார் தொழில் அதிபர்கள் ரிலையன்° அனில் அம்பானியும், இரும்பு ஆலை அதிபர் சுனில் மிட்டலும் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி இந்திய நாட்டுன் பிரதமராக வந்தால் நலமாக இருக்கும் என்று கூறியதாக பத்திரிக்கை செய்தி. எந்த மோடியை? அப்பாவி 2000 மு°லிம்களுக்கு மேல் மனித கொலையினை நடத்தியும், பல்லாயிரக்கணக்கான மு°லிம்கள் அகதி முகாமிலிருந்து தங்கள்வீடுகளுக்கு திரும்ப முடியாமல் செய்யும் குஜராத் அரசினை தலைமை ஏற்று நடத்தும் மோடியைத்தான் சொல்கின்றனர்.பின் எவ்வாறு அனில் அம்பானியும், சுனில் மிட்டலும் பிரதமர் சொல்வது போன்று மு°லிம்களுக்கு வேலை கொடுப்பார்கன்.
ஏன், அரசாங்கத்தால் நடத்தப்படும் வேலைகளிலேயே அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட 15 கொள்கை அறிக்கையின்படி மு°லிம்களுக்கு வேலை பூரணமாக கொடுக்கவில்லையென்று மைனாரிட்டி அமைச்சர் ஏ.ஆர். அந்துலே சொன்னதாகவும், ஒரு மத்திய அமைச்சருக்கு உள்ள ஒரு அமைச்சகம் கூட இல்லை என்று பத்திரிக்கை செய்திகளை படிக்கும் போது பரிதாபமாக நமக்குத்தெரியவில்லையா? மு°லிம்களின் நிலைப்பாடு குறித்து அமைக்கப்பட்ட
நீதிபதி சச்சார் குழு தன் அறிக்கை தயாரிக்க ராணுவத்தில் மு°லிம்களின் வேலை பற்றி கேட்டதிற்கு இந்துத்துவா அரசியல் வாதிகள் மட்டும் எதிர்க்கவில்லை- மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ராணுவ அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றால் ஆச்சரியமில்லையா? மேலும் சச்சார் அறிக்கையில் மு°லிகள் கல்வியிலோ, வேலையிலோ ஆதி திராவிடர்களை விட மிகவும் பின் தங்கி உள்ளனர், பி.ஜே.பி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மு°லிம்கள் அதிகமாக சிறைக்கோட்டங்களின் கம்பிகளை எண்ணிக்கொண்டுள்ளனர். முன்னாள் உச்சமன்ற நீதிபதி ஜே,எ°. வர்மாமு°லிம்கள் நீதித்துறையில் கண்ணுக்குத் தெரியாவிடத்தில் உள்ளனர் என்று கூறுகிறார்.
இந்துத்துவா ஆட்சி செய்கின்ற மாநிலத்தில் மு°லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றால் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால்பொதுவுடைமை பூங்கா கம்யூனி°டுகள் 30 வருடம் ஆட்சி செய்யும் மு°லிம் ஜனத்தொகை 25 சதவீதம், ஆனால் வேலைவாய்ப்பு வெறும் 4.2 சதவீதம் தான் என்றால் நம்ப முடிகிறதா? பீகார், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெறும் 3 சதவீதம் தான். தமிழ்நாட்டில் மு°லிம் ஜனத்தொகை 6 சதவீதம் இருந்தும், அரசால் 3.5 சதவீதம் வேலை வாய்ப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. அதையாவது முழுமையாகக்கொடுத்தால் சரிதான். இரண்டரை ஆண்டு காலத்தில்(25.12.2009) மொத்தமாக 2,78,294 பேர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிக்கை கூறுகிறது. அதில் எத்தனை சதவீதம் மு°லிம்கள் என்று அரசை ஆதரிக்கும் மு°லிம் அமைப்புக்கள் கேட்டுப்பெற வேண்டும்.
மேற்கூறிய தகவல் முலம் எங்கே படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பே இல்லாத இருண்ட உலகம் உள்ளதோ என்ற ஐயப்பாடு ஏற்படலாம். உலகம் விசாலமானது. நீங்கள் திறமை சாலியாக இருந்தால் உலகம்உங்கள் காலடியில்.
படித்த றிமைசாலிகளை உருவாக்குவது யார் கையில் எள்ளது? பெற்றோர்களின் எதவி, ஆசிரியர்களின் ஊக்கம், மாணவர்கள் தன்னம்பிக்கையிலும்தான் எள்ளது. எல்லோரும் பட்டம் பெற்று வீடலாம், ஆனால் அந்த பட்டங்கள் நாட்டுக்கும், வீட்டுக்கும்உதவும் வேலை வாய்ப்பு தேடித்தருகின்றதாக இருக்கின்றதா என்று பார்ரக்க வேண்டும். அப்படிப்பட்ட பாடங்களை பள்ளியிலும், கல்லூரியிலும் ஆசிரியர்களை போதிக்கச்செய்வது கல்வி °தாபனங்களை நிர்வகிப்பவர்களைச்சாரும். கல்வி நிலயங்களை நிர்வகிக்கிறவர்கள் குறைந்தபட்ச
படிப்பு பெற்றிருந்தால் தானே அதைப்பற்றி சிந்திக்க முடியும். ஒரு சமயத்தில் இந்தக் கருத்தினை வழியுறுத்தும் போது ஒருவர் கேட்டார் ஏன் படிக்காதவர்கள் டாக்டர் பட்டம் பெறவில்லையா என்று. படிக்காதவர்களுக்கு வழங்கப்படும் டாக்டர் பட்டம் கௌரவ பட்டம் என்று அறியாதவர்களும் நம்மிடையே கல்வி °தாபனங்களை நிர்வாகிர்க்கிறவர்களின் அறியாமையைத்தான் காட்டுகின்றது.
பல்கலைக்கழக(யு.ஜி.சி) அறிவித்த கொள்கைபடி அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளிலும் தரமான கல்வியைத் தந்தால் தான் தரச்சான்றிதழ் தரமுடியும் என்றும், கல்லூரிகளில் விரிவுரையாளர்களுக்கு டாக்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.யு.ஜி.சி தலைவர் திரு. சுக்தேவ் தோரட் கூற்றின்படி 24 சதவீத கல்லூரிகளும், 30 சதவீத பல்கலைக்கழகங்களும் மட்டுமே தர(நாக்)அங்கீகாரம் பெற்றுள்ளன என்பது ஆச்சரியமாயிருக்கிறதா, ஆனால் அதுதான் உண்மை.சமீபத்தில் எனது பள்ளித் தோழர் தன்னுடைய எம்.பி.ஏ படித்த மகனை அழைத்துக்கொண்டு வந்து வேலைக்கு சிபாரிசு செய்யச் சொன்னார். நானும் வெ°ட்ஆசியா மனிதவள மேலாளர்திரு. ஜாபர் அவர்களிடம் சிபாரிசு செய்தேன். அவர் என் நண்பரின் மகனிடம் பி.சி.ஏ சம்பந்தமான கேள்யினை கேட்டபோது தெரியாதுஎன்று சொல்லியுள்ளார்.மேலாளர் கேட்ட ஒரு கேள்விக்குக் கூட ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியவில்லையாம்.பின்பு என் நண்பனின் மகன் என்னிடம் காரணம் சொல்லும் போது எல்லாம் மறந்து விட்டது என்றார்.
போட்டிகள் நிறைந்த உலகில் யார்எதிர் நீச்சல் போடுகிறாரோ அவர்தான் வெற்றிபெற முடியும். ஒரு தகுதியான மாணவனை உருவாக்குவது ஆசிரியரின் கடமையாகும்.
போதிக்கும் கல்வி ஒவ்வொரு மாணவனுக்கும் அவனது மனதில் புதிய உத்வேகம், கண்டுபிடிப்பு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறமை, தொழில் ஙட்பம், நிர்வாகத்திறமை, மனதைரியம் ஆகியவற்றை கற்றுத்தறுவதாக இருக்க வேண்டும்.
மதுரையைச்சார்ந்த 7வயது சிறுமி சுபிக்சா கம்யூட்டரில் புதிய உக்தியை கையாண்டதிற்காக உலகம் மெச்சத்தகுந்த பரிசினை பெற்று ஜனவரி ஒன்பதாம் தேதி 2009 ஜனாதிபதி சென்னை வந்தபோது நேரில் அழைத்துப் பாராட்டினார். நாகர்கோவில் இ°லாமிய மாணவி ரயிலில் கழிவுகளை தானியங்கி மூலம் கொட்டும் கருவியினை கண்டுபிடித்து பாராட்டுப் பெற்றார், அதே போன்று நாகப்பட்டிணம் இ°மாயில் என்ற மாணவர் சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தில் 4ம் ஆண்டு இ.சி.இ இன்ஜினிரிங் படிப்பில் செல்போன், டிவி, ரோடியோ ஆண்டனாக்களை இணைக்கும் தொலைதொடர்பில் புதிய கருவி மைக்ரோ °டிரிப் பேட்ச் ஆண்டனாவினை கண்டு பிடித்துள்ளார். நான் குறிப்பிட்ட மூவர் சாதனை பின்னணியில் அவர்களுடைய ஆசிரியர்களும், பெற்றோர்கள் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். ஏன் நீங்களும்உங்கள் குழந்தைகளை அவர்கள்போல் உருவாக்கக்கூடாது?
கிராமப்புறசூழ் நிலையில் அமைந்துள்ள மு°லிம் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் போதிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். முதுகலை பட்டங்களை பெற்றுக்கொண்டு ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் பேச வரவில்லை என்றால் வாய்ப்பு கதவு மூடப்படும் என்பதினை மாணவர்களுக்கு எடுத்து உரைக்க வேண்டும். நான் பள்ளியில் என்.சி.சி சார்ஜன்ட்டாக பணியாற்றியபோது கமாண்டிங் வார்த்தைகள் ஹிந்தியில் இருந்தது. ஆனால் ஹிந்தியை கற்றுக்கொள்ளாது 11 வது பரீட்சையில்ஹிந்தி வினாத்தாளையே பதிலாக எழுதி, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பின்பு ஹிந்தி ஏன் படிக்கவில்லை என்று நான் 1982ம் வருடம் மதுரை
தல்லாகுலம் டி.எ°.பியாக இருந்தபோது ராஜ°தான் மாநிலத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பயிற்சிக்காக மவுண்ட் அபுவிற்கு சென்றபோதுதான் உணர்ந்தேன்.ஹிந்தி தெரியவில்லை என்றால் நாம் வட நாடுகளில் மட்டுமல்ல பக்கத்திலுள்ள ஆந்திர மாநிலத்திலும், பிழைக்கப் போகும் வளைகுடா,அரபு நாடுகளிலும்தான்.பின்பு ஹிந்தியின் முக்கியத்தை உணர்ந்து 1988ம் வருடம் தர்மபுரியில் எ°.பி யாக இருந்தபோது ஹிந்தி பிராத்மிக் பரீட்சை எழுதி வெற்றி பெற்றேன். அப்போது என் வயது 42. ஆகவே ஒரு மு°லிம் மாணவன் தமிழ் மொழியோடு ஆங்கில, ஹிந்தி மொழியையும் தெரிந்திருப்பதின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமென்றால்
மறுக்க முடியாது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆ°திரேலியா போன்ற நாடுகளுக்கு மேற்படிக்காக ஆங்கில அறிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆகவேதான் ஜி,ஆர்.இ, டோப்பல், ஐ.இ.எல்.டி.எ° போன்ற பரீட்சைகள் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிப்பதோடு’புல்பிரைட்’ போன்ற °காலர்சிப்களும் வழங்கப்படுகிறது. அதேபோன்று இந்தியாவில் புதுடெல்லியில் இயங்கும் மவுலானா அப்துல் கலாம் ஆஜாத் அரக்கட்டளை பெண்கள் கல்வி கற்பதை ஊக்கப்படுத்த °காலர்சிப்பும், சென்னையில் சீதக்காதி டிர°டிலும், முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சாதிக் பொறுப்பேற்றிருக்கும் ‘ஓமியட்’ அறக்கட்டளையும், யு.ஜி.சி. கிராண்ட் கமிசன் பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தால் முதுகலை பட்டப்படிப்பை தொடர்வதற்காக மாதம் தோறும் மானியமாக ரூ.2000 வழங்கப்படுகிறது. தமிழக அரசு கல்விக்காகஇலவச சைக்கிள், பள்ளிவரை இலவச படிப்பு , இலவச கம்யூட்டர் போன்ற சலுகைகலையும் பள்ளி கல்விக்காக அறிவித்த வாய்ப்பை மு°லிம் மாணவர்கள் தவற விடலாமா? சமீபத்தில் 8வது முதல் 12வது படிக்கும் இந்து மாணவர்களுக்கு ‘இந்து °காலர்சிப் எபிசியன்சி டெ°ட்’ நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் சேறுவதிற்கான ஊக்க உதவித்தொகையினை இப்போதே வழங்குகிறார்கள். ஏன் நம்மால் முடியாதா? வசதி படைத்த மு°லிம் தன்வந்தர்கள் ஒவ்வொரு வருடமும் கொடுக்கும் சக்காத், சதக்கா போன்ற தான தர்மங்களின் ஒரு பகுதியை தங்கள் பகுதியில்உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் மு°லிம் மாணவர்கள் பயன்பெற அறக்கட்டளையும், மானியங்களையும் வழங்கி ஊக்கப்படுத்தலாம்.
சிறிய ஊர்களில் பெரிய ஆடம்பரமான பள்ளிவாசல்கள் கட்டும் போது பொதுஅறிவை விரிவுபடுத்தும் படிப்பகங்கள் ஏற்படுத்தலாம். நான் புதுக்கல்லூரியிலும், மாநிலக்கல்லூர்யிலும் பயிலும் போதுஎங்கள் ஊர் இளையான்குடியில் ஐக்கிய மு°லிம் படிப்பகம் இருந்ததால் ஹிந்து ஆங்கிலப்பத்திரிக்கை, இல்ல°ட்ரேட் வீக்கிலி ஆப் இந்தியா, ரீடர்° டைஜ°ட் போன்ற பத்திரிக்கை களில் வரும் பொது அறிவு விசயங்கள் பிற்காலத்தில் எனக்கு அரசு தேர்வுகள் எழுத உதவியாக இருந்தது. அதே போன்ற படிப்பகங்கள் தங்கள் பகுதியில் நிறுவலாம்.ஹிந்துக்கள் வீடுகள் கட்டும் போது தனியாக பூஜை அறை ஒன்றை ஏற்படுத்துவார்கள். நாம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு படிப்பறை கட்டி அதில் கனிணி, இன்டர்நெட் வசதி செய்து கொடுப்பதின் மூலம் உலகில் ஒருமூலையில் உள்ள லைப்பரியில் தேவைப்படும் புத்தகங்களைவீட்டில் இருந்தே படித்து தெரிந்து கொள்வதோடு, ஆன்லைன் வர்த்தகம், வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் கலந்துரையாடலும் செய்ய ஏதுவாக இருக்கும்.
பள்ளி இறுதிப்படிப்பினை முடித்ததுமே மாணவர்களை வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிந்து வைக்கச்சொல்லவதின் மூலம் மேல்படிப்பினை தொடர முடியாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பினை ஏற்படுத்தலாம். கல்லூரிகளிலும் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவக்கூடிய பாடங்களை புகுத்தலாம். பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் எம்.பி.ஏ படிக்க உதவும் ஜிமேட்,கேட், பிட், ஜிஇஇ, சேட் போன்ற படிப்புகளுக்கு கோச்சிங் கொடுக்கலாம். ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் ‘கேரியர் கைடன்°’ அமைப்பை ஏற்படுத்தி இது போன்ற பயிற்சிகளை ஆசிரியர்கள் கொண்டே செயல்படச்செய்யலாம். சென்னை ஜார்ஜ் டவுண் என்வீட்டிலிருந்து கோட்டைவரை நடைபயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது ஒரு நாள் ஒரு இளைஞர் என்னை வழி மறித்து ‘சார் நான் ஐ.ஏ.எ° படிக்க வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றார். நான் அவரிடம் நீ என்ன செய்கிறாய் என்றேன், அதற்கு அவர் பிள°2 படிக்கிறேன் என்றார். அந்த பையனின் கேள்வி என்னை 40 வருட சம்பவத்திற்கு கொண்டு சென்றது. நான் சென்னை புதுக்கல்லூரியில் படிக்கும்போது 1968 வருடம் ஒரு நாள் என் நண்பர் தாகிருடன் ராயப்பேட்டை காவல் நிலைய அருகில் இருந்த ஐயர் ஐ,ஏ,எ° அகடாமியில் சென்டரில் விசாரித்தபோது அங்கே இருந்த மேலாளர் சொன்னார் நீங்கள்முதுகலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு வாருங்கள் அதன்பின் பார்க்கலாம் என்று அனுப்பிவிட்டார். ஆனால் உண்மையில் ஐ.ஏ.எ° படிக்க முதுகலை பட்டம்பெற தேவையில்லை என்பது பின்புதான் தெரிந்தது. என்னிடம் கேள்வி கேட்ட மாணவனை நிச்சயமாக பாராட்டவேண்டும், ஏனென்றால் நாங்கள் பட்டப்படிப்பில் கேட்டக் கேள்வியை பிள° 2 படிக்கும்போதே கேட்டிருக்கிறார். உண்மையில் இந்திய ஆட்சிப்பணிக்கோ அல்லது அதற்கு இணையான மாநில பரிட்சை எழுதுவதிற்கு ஆயத்தப்பணியை பிள°2 முடித்தவுடனேயே ஆரம்பித்துவிடவேண்டும். இளங்கலை பட்டப்படிப்பில் என்ன என்ன விருப்பப்பாடம் ஐ.ஏ.எ° பரீட்சைக்கு எடுக்கலாம் என்று தீர்மானிக்கலாம். இதன் மூலம் ஒரு மாணவன் 21லிருந்து 24 வயதுக்குள் இந்திய ஆட்சிப்பணி பரீச்சைக்கோ அல்லது அதற்கு இணையான பரீட்சையிலோ வெற்றி பெறலாம்.
53000 ஊழியர்களைக் கொண்ட சத்தியம் நிறுவனமே ஊழியர்களை நட்டாற்றில் விட்டபோது அரசு ஊழியம் நிரந்தர வேலை வாய்ப்பும், பல்வேறு சலுகைகளையும் கொண்டது எவ்வளவோ மேல். நாடார் சமூகத்தினருக்கு சாதாரண காவலர்,கிளார்க் பதவியிலிருந்து ஐ,ஏ,எ° அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் வீரபாண்டிய பட்டிணம் ஆதித்தனார் கல்லூயில் குறைந்த சலுகையில் நடத்தப்படுகிறது. அது போன்ற அமைப்பு நமக்கு சென்னையில் இல்லை. அதற்காக
புதுக்கல்லூரியை நிர்வகித்து வரும்மியாசி அமைப்பில் கொண்டு வர வேண்டும் என்று ஒரு தீர்மானம் 15.10.2008 அன்று நான் கொண்டு வந்தபோது பதவியை மட்டும் அனுவிக்க வேண்டும் ஆனால் மு°லிம் மக்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடாது என்ற சிலரால் எதிர்க்கப்பட்டது என்றால் பாருங்களேன். சென்னை வண்டலூரில் ஐ.ஏ.எ°க்கு மட்டும் கிரசண்ட் பொறியல் கல்லூரியில் நடத்தப்படுகிறது. அதேபோன்று முன்னாள் எம்.எல்,ஏ சைதை துரைசமியும் சைதைப்பேட்டியிலும், ஈ.வெ,ரா. அறக்கட்டளை சார்பிலும், அரசு சார்பில் அண்ணா நகரிலும் நடத்தப்படுகிறது.ஆனால் எம்.பி.ஏ, மட்டும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் படிப்பில் சேரவும், மேல் படிப்பிற்காக மேல் நாட்டிற்கு செல்லவும் தேவையான காம்ரகன்சிவ்(ஒருங்கிணைப்பு) பயிற்சி அளிக்க மு°லிம் அமைப்புகள் தற்போது இல்லாத குறையை நிவர்த்தி செய்ய கல்லூரிகளை நடத்துகின்றவர்கள் அல்லது தொண்டு நிறுவனம் முயல வேண்டும்.
சீன அறிஞர் நா°ட்டர்டாம் பல ஆண்டுகளுக்கு முன்பே 2020ம் வருடத்தில் சீனாவும், இந்தியாவும் வல்லரசாகும் என்று கூறியிருக்கிறார். இப்போதே சீனா 13 சதவீத வளர்ச்சியை எட்டிவிட்டது. இந்தியாவும் 11 சதவீத வளர்ச்சியை எட்டிவிட்டது. பொருளாதார வளர்ச்சியில் உலகமே அதிர்ந்திருக்கும் நிலையிலும் இந்திய பொருளாதாரம் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. ஆகவே பிரகாசமான எதிர்காலத்தில் நாம் மு°லிம் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டினால் வேலை இதயக்கனியாவது உறுதியே.



